காதல் அணுக்கள் - CLIMAX

கிட்டத்தட்ட கடந்த ஆறு மாதங்களாக பிரதி வெள்ளிக்கிழமை தமிழ் பேப்பர் இணைய இதழில் நான் எழுதி வந்த காதல் அணுக்கள் தொடர் இன்றோடு நிறைவுற்றது.

பின்னூட்டங்கள் எண்ணிக்கை கொண்டு இத்தொடர் வெற்றியா எனத் தீர்மானிக்க இயலவில்லை. என்வரையில் இது நல்ல அனுபவமாய் இருந்தது. இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் பகிர்ந்து வந்த புகழ் (@MEKALAPUGAZH) அவர்களுக்கு நன்றி. அதே போல் இத்தொடரின் சுட்டிகளைத் தொடர்ந்து பகிர்ந்து பரவ வழி செய்த சௌம்யா (@arattaigirl) அவர்களுக்கும் நன்றி. நான் சமூக வலைதளங்களில் இயங்காத இடைப்பட்ட சில காலத்திலும் அவராகவே சுட்டிகள் பகிர்ந்திருந்தார். கவிதைளை அவ்வப்போது பகிர்ந்த / பாராட்டிய பிற வாசக நண்பர்களுக்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ஆரம்பத்திலேயே விமர்சித்த நண்பருக்கும் நன்றி.

எழுத்தாளர் முனைவர் ப. சரவணன் அவர்களும் இத்தொடரைத் தொடர்ந்து வாசித்து வந்ததாக அறிகிறேன். இத்தொடரில் காமத்துப் பாலுக்கு உரை எழுதியது போல் தொடர்ந்து அறத்துப் பாலுக்கும், பொருட் பாலுக்கும் உரை எழுத வேண்டும் எனக் கேட்டிருந்தார். அவர் என் எழுத்து மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பிற்கும் மரியாதைக்கும் நன்றி. அறத்துப்பாலுக்கு கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு முயற்சியை கவிஞர் வாலி அவர்கள் வாழும் வள்ளுவம் என்ற பெயரில் செய்திருக்கிறார். நான் வாசித்த வரையில் அது மிகச் சிறப்பாகவே இருந்தது. அதை போக செய்ய முடியும் / செய்ய வேண்டும் என எதிர்காலத்தில் எண்ணம் முளைத்தால் நிச்சயம் எழுதுவேன். பார்க்கலாம்.

பல்வேறு வெளியூர் பயணங்கள் மற்றும் பணிப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் தங்குதடையின்றி இதனை வெளியிட்டு வந்த தமிழ் பேப்பர் ஆசிரியர் மருதன் அவர்களுக்கு என் ப்ரியங்கள். குறிப்பாய் இதில் அவர் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தேர்ந்தெடுத்து வெளியிட்ட பொருத்தமான புகைப்படங்கள் எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தன.

என் முதல் நூலை வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். என்னை சமகால அரசியல் கட்டுரைகள் எழுத வைத்தது ஆழம் இதழ். என் முதல் சிறுகதையை வெளியிட்டது தமிழ் பேப்பர். இந்த காதல் அணுக்கள் உட்பட என் இரண்டு கவிதைத் தொடர்கள் வெளியானது தமிழ் பேப்பரில் தான். இது போன்ற என் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கிழக்கு பதிப்பகம் / ஆழம் இதழ் / தமிழ் பேப்பர் இதழ் குழுவினருக்கு நன்றி. இந்நல்லுறவு நீடிக்கவும், பரஸ்பர பலனுடையதாய் இருக்கவும் விரும்புகிறேன்.

*

Comments

Unknown said…
எசநானி yesteryear-ஆ?contemporary -ஆ?

http://rahmandaasan.blogspot.in/2014/08/yesteryear-contemporary.html

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்