இலக்கியமும் மினி ஸ்கர்ட்களும்
கடந்த வாரம் ஜனவரி 24 - 26 தேதிகளில் The Times of India நாளேடு நடத்திய Literary Carnival என்ற மூன்று நாள் இலக்கியக் கொண்டாட்டம் பெங்களூரின் ஜெயாமஹால் பேலஸ் ஹோட்டலில் நடந்தது. ஒரு வளரும் எழுத்தாளனாய் அந்நிகழ்வு அளித்த அனுபவம் வசீகரமானதாய் இருந்தது என்பதால் தவறாமல் மூன்று நாட்களும் அதில் கலந்து கொண்டேன்.
இது ஆங்கில இலக்கியத்தையே அதிலும் வெகுஜன படைப்புகளையே பெரும்பாலும் முன்வைப்பதாக இருந்தது. அப்புறம் பிராந்திய இட ஒதுக்கீட்டில் கொஞ்சமாய் கன்னட இலக்கியம். மேலோட்டமாய் இலக்கிய விழா போல் தோற்றம் தரினும் பாதிக்குப் பாதி அமர்வுகள் புதிதாக வெளியாகி இருக்கும் ஆங்கில நூல்களை promote செய்யும் முகமாகவே அமைந்தன.
யூஆர் அனந்த மூர்த்தி, கிரிஷ் கர்னாட், கிரிஷ் காசரவள்ளி, சஷி தேஷ்பாண்டே, நந்தன் நிலகானி, சுதா மூர்த்தி, மதூர் பண்டார்கர், நீரஜ் பாண்டே, மன்சூர் கான், கேஎம் சைதன்யா, கேப்டன் கோபிநாத், பல்லவி ஐயர், ராஷ்மி பன்சால் எனப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நிறையப்பேரை அங்கு தான் அறிந்து கொண்டேன். எல்லோரும் இளைஞர்கள்.
*
மொத்தம் நடந்த 55 அமர்வுகளில் நான் தேந்தெடுத்து சிலவற்றில் (சுமார் 23) மட்டும் கலந்து கொண்டேன். பாதிக்கு மேல் வெறும் புத்தக விளம்பரங்களாகவே இருந்தன. நல்ல உள்ளடக்கத்துடன் அமைந்து நான் ரசித்த அமர்வுகள் இவை தாம்:
The Times of India கார்டூன்களும், பெங்களூரு பற்றிய பால் ஃபெர்ணான்டஸின் கார்டூன்களும், சீர்திருத்தவாதி பசவண்ணா பற்றிய சிவானந்த பசவந்தப்பா என்பவரின் ஓவியங்களும் கண்காட்சியாக அந்த அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. கவிதை இசைக்கும் நிகழ்வு ஒன்றும், மாலைகளில் இசை நிகழ்ச்சிகளும் கூட நடந்தன. நான் கலந்து கொள்ளவில்லை.
மொத்தமாகவே 100 பேர் தான் கலந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு அமர்விலும் சராசரியாய் 30 பேர். இதில் என்ன மாற்றம் நடக்கும் எனப் புரியவில்லை. அரங்கின் வெளியே CROSSWORDகாரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர்களின் நூல்களை பிரதானமாய் அடுக்கிக் கடை விரித்திருந்தார்கள். கணிசமான விற்பனை இருந்தது.
தமிழிலும் இது போல் நிகழ்வுகளை யாராவது ஊடகக்காரர்கள் எடுத்து நடத்தலாம். இது கிட்டத்தட்ட தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றும் சென்னை சங்கமம் போலத் தான். ஆனால் பிரதானமாய் சமகால இலக்கியத்துக்கென செய்ய வேண்டும்.
*
நிகழ்ச்சியை இயக்கியவர்களில் ஒருவரான நிர்மலா கோவிந்தராஜன் காலில் ஸ்கேட்டிங் வீல்கள் கட்டிக் கொண்டவரைப் போல் அமர்வுகள் நடந்த மூன்று அரங்குகளையும் சுற்றி வந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். மூன்று நாட்களும் அவர் அணிந்து வந்த அரேபிய ஸ்டைல் காஸ்ட்யூம் அத்தனை பாந்தம். போலவே நிகழ்ச்சிக்கு உதவியாய் இருந்த வாலண்டியர் பெண்களும் ப்ளஸண்டாக நடந்து கொண்டனர். அதில் ஒரு பெண் அங்கு நடந்த Taming of the Shrew என்ற ஷேக்ஸ்பியர் நாடகத்தில் கேத்ரினாவாக அற்புதமாக நடித்தார். வாய்ப்புக் கிட்டினால் நல்ல நடிகையாக வரக்கூடும்.
சுடிதாரும், லெக்கின்ஸும், ஜீன்ஸும், டிஷர்ட்டும், மிடியும், மினி ஸ்கர்ட்டும் இன்னும் பெயரறியா என்ன என்னவோ உடைகளிலும் பார்வையாளர்களாய் கலந்து கொண்ட இளமையான வளமையான பெண்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். பார்வையாளர்கள் தான் இப்படி என்றால் கலந்து கொண்ட எழுத்தாளினிகளின் அராஜகம் அதற்கு மேல். மினி ஸ்கர்ட் அணிந்து மூன்றடி உயர மேடையில் கால் மேல் கால் போட்டமர்ந்து பேசினால் இலக்கியத்தை கவனிப்பது எப்படி!
மினி ஸ்கர்ட் அணிந்த வாசகிகளோ எழுத்தாளினிகளோ செம்மொழியான தமிழில் இல்லையே என்பதே என் ஆதங்கம்.

- INAUGURAL ADDRESS: Sudha Murty
- KEYNOTE ADDRESS: Shashi Deshpande on ethics and literature
- KEYNOTE SPEAKER: UR Ananthamurthy. Introduced by Prakash Belawadi
- WHO CALLS THE SHOTS? Dynamics of Publisher-Author Relationships – Amrita Chowdhury (Harlequin), Akash Shah (Jaico), Vaishali Mathur (Penguin) & Ravi Subramanian. Moderator: Vasudev Murthy
- CRIME WRITING: Does it really pay? – Manreet Sodhi Someshwar, Manjiri Prabhu, Barun Chanda & Zac O Yeah. Moderator: Vasudev Murthy
- REALITY BYTES: Is Non-Fiction, the New Fiction? – Manreet Sodhi Someshwar, Pallavi Aiyar & Monisha Rajesh. Moderator: Ajitha GS
- LOL: Writing Humour for the New Generation – Rishi Piparaiya, Khushwant Singh Ahluwalia, Aruna Nambiar & Neeta Iyer. Moderator: Harish Bijoor
- IN THE FRAME: The changing language of Indian Cinema – Kavitha Lankesh, Madhur Bhandarkar & Avijit Ghosh. Moderator: KM Chaitanya
- WOMAN ON TOP: The future of the female protagonist – Manreet Sodhi Someshwar, Kausalya Saptharishi & Kanika Dhillon. Moderator: Amrita Chowdhury
- LOVE IN THE TIMES OF GOOGLE: Preeti Shenoy discusses online relationships with Vaishali Mathur

Comments