நான்காம் புத்தகம்

முழுதாய் ஓராண்டுத் தாமதத்திற்குப் பின் எனது நான்காவது புத்தகமான‌ கிட்டத்தட்ட கடவுள் வெளியாகி இருக்கிறது.


இது என் முதல் கட்டுரைத் தொகுதி. அறிவியல், அரசியல், சர்வதேசம், வரலாறு, பொருளாதாரம் குறித்து 2011 - 2012ம் ஆண்டுகளில் நான் எழுதிய 15 கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சில மிகுந்த உழைப்பை உறிஞ்சியவை. இவற்றின் ஆயுளை நீடிக்கும் வகையில் ஒரு நூலின் உள்ளடக்கமாகப் பார்க்கையில் மிகுந்த மன‌நிறைவை அளிக்கிறது.

இது வரை வெளியான எனது அனைத்து நூல்களுமே வெவ்வேறு பதிப்பகங்கள். இம்முறை அம்ருதா பதிப்பகம். இதில் எடிட்டிங் மற்றும் ப்ரூஃப் பார்த்தல் எனக்கு மிக உவப்பாய் அமைந்தது. புத்தகம் தாமதமாவது குறித்த‌ விசாரிப்புகளுக்கு பொறுமையாக பதிலிறுத்த பதிப்பாளர் ஜி.திலகவதி மற்றும் பதிப்பகத்தின் சுப்பையா இருவருக்கும் அன்பும் நன்றியும்.

இப்போதைக்கு சென்னையில் அம்ருதா பதிப்பகத்தில் நேரடியாக நூலின் பிரதிகளை வாங்கலாம். தொடர்பு விவரங்கள்:

Amurudha, 
No: 12, 3rd Main Road, 
2nd Cross Street, 
Govind Royal Nest, 
CIT Nagar East, 
Chennai - 600 035. 

Phone : 044 - 2435 3555 
Mobile : 94440 70000
Email : info.amrudha@gmail.com 

(ஆன்லைனில் நூல் வாங்குவது பற்றியும் பிற கடைகளில் வாங்குவது குறித்தும் தகவல்கள் தெரிந்ததும் பகிர்கிறேன்.)

இது போக வரும் 2014 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அம்ருதா ஸ்டாலில் கிட்டத்தட்ட கடவுள் புத்தகம் கிடைக்கும்.

*

Comments

R. Gopi said…
வாழ்த்துகள்!
Sankar said…
வாழ்த்துகள்.
Anonymous said…
amazing.. keep it up.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி