பாலாவின் COME-BACK
ஆரண்ய காண்டம் படத்திற்குத் தான் விமர்சனப்பதிவு எழுதுவதாய் ஆரம்பத்தில் திட்டம். ஆனால் அவன் இவன் படம் பற்றிய என் ஒற்றை ட்விட்டிற்கு வந்த பரவலான எதிர்வினைகள் திட்டத்தை திசை திருப்பி விட்டது. ஆனால் குறையொன்றுமில்லை.
ஆரண்ய காண்டம் பற்றி நான் சொல்ல நினைத்திருந்த கிட்டதட்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் பதிவுலகமே ஒன்று கூடிக் கொண்டாடித் தீர்த்து விட்டது. போதாதற்கு சாரு வேறு ஜூலை மாத உயிர்மையில் பாராட்டவிருப்பதாய்த் தெரிகிறது. அதன் வியாபார வெற்றி பற்றித் தெளிவில்லை. ஆனால் அதை விட ஆக முக்கிய சங்கதியொன்று உண்டு - அது தமிழகத்தில் அறிவுஜீவிகளென அறியப்படுபவர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய மதிப்பீடு. இவ்விஷயத்தில் ஆரண்ய காண்டம் எகோகபித்த ஆதரவைப் பெற்று நல்ல போஷாக்கான குழந்தையாகத் தான் வலம் வருகிறது.
பாவம், அவன் இவன் தான் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சவலைப்பிள்ளை.
இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். அவன் இவன் படத்தை நான் எதிர்மறை எதிர்பார்ப்பினோடு தான் அணுகினேன். பத்து வருடங்கள் முன்பு அவர் எடுத்த இரண்டு நல்ல படங்களை மனதில் கொண்டு பாலா படம் பார்ப்பது ஒரு கடமை போல் என்ற அளவிலான மதிப்பையே அதற்களித்துப் படம் பார்க்கச் சென்றேன்.
அதற்கு மூன்று முக்கியக் காராணங்கள். தனது கடைசி இரண்டு படங்களிலும் தான் எவ்வளவு மோசமானதொரு திரைக்கதையாளன் என்பதைத் தொடர்ந்து நிரூபித்தவர் பாலா என்பது முதலாவது. உன்னாலே உன்னாலே தவிர இதுகாறும் வேறு எந்தத் திரைப்படத்திலும் சொல்லிக்கொள்ளும் படியான வசனங்களே எழுதியிராதவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பது இரண்டாவது. மூன்றாவதும் முக்கியமானதும் கடைசியுமானது, பொதுவாக பாலா படங்களின் உயிர் நாடியான இளையராஜா இப்படத்தில் பணியாற்றவில்லை என்பது. இதில் முதலிரண்டு காரணங்களைப் பற்றியும் என் எண்ணத்தை மாற்றிவிட்டது அவன் இவன்.
அவன் இவன் படம் ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது? பார்க்கலாம்.
இரண்டு முக்கிய விஷயங்களுக்காக அவன் இவன் படத்தை நான் கடுமையாக (ஆம், கடுமையாக!) ஆதரிக்கிறேன். ஒன்று தமிழ் சினிமா நகைச்சுவையில் இது ஒரு முக்கியமான மற்றும் புதுமையான வகைமை. மற்றொன்று தென் தமிழத்தில் வாழும் குற்றப்பரம்பரை இனத்தவரில் இன்னமும் தம் முன்னோர் செய்த திருட்டு தொழிலைத் தொடர விளையும் சிலரைப் பற்றிய நெருக்கமான பதிவாக ஓர் ஆவணம் போல் இருக்கும் காட்சியமைப்புகளும், வசனங்களும் .
தமிழ் சினிமாவில் இதுவரை குறிப்பிட்ட சில வகை நகைச்சுவைகளையே திரும்பத் திரும்பச் செய்திருக்கிறார்கள். நாகேஷ், வடிவேலு போன்றவர்களின் உடற்மொழி சார்ந்த நகைச்சுவையை Physical comedy என வகைப்படுத்தலாம். என்.எஸ்.கே., விவேக் போன்றவர்களின் சிந்தனை தூண்டும் நகைச்சுவையை Observational comedy என வகைப்படுத்தலாம். கவுண்டமணி, சந்தானம் போன்றவர்களின் வசவுகள் கொண்ட நகைச்சுவையை Insult comedy என வகைப்படுத்தலாம்.
கமல்ஹாசன், கிரேஸி மோகன் கூட்டணியின் வசன அடிப்படையிலான நகைச்சுவையை Witty comedy என வகைப்படுத்தலாம். பாலச்சந்தர், பாக்யராஜ் போன்றோர் படங்களில் வரும் பாத்திரவியல்பை ஒட்டிய நகைச்சுவையை Character comedy என வகைப்படுத்தலாம். சிம்புதேவன், வெங்கட்பிரபு போன்றவர்களின படங்களில் வரும் நையாண்டி நகைச்சுவையை Spoof comedy என வகைப்படுத்தலாம். சோ ராமசாமி படங்களில் வரும் சமத்துவம் குறித்த அங்கதத்தை Topical comedy என வகைப்படுத்தலாம்.
இவை எல்லாவற்றுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கிறது. அது இவை எல்லாமே வாய் விட்டு சிரிக்க வைப்பவை - குறைந்தபட்சம் ஒரு புன்னகை உத்திரவாதம். சிரிப்பையோ புன்னகையையோ வரவழைக்காத ஆனால் அபாரமான நகைச்சுவை வகைகள் சில உண்டு - Black comedy, Blue comedy போன்றவை.
இவற்றில் Black comedy என்ற வகையில் இருட்டுத் தொழில்கள் சார்ந்த நகைச்சுவையைக் கொண்ட புஷ்கர் - காயத்ரியின் ஓரம் போ, வ குவாட்டர் கட்டிங், செல்வராகவனின் புதுப்பேட்டை, தியாகராஜன் குமாரஜாவின் ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைச் சொல்லலாம். ஆனால் எனக்குத் தெரிந்து தமிழில் Blue comedy என்பதே இதுவரை இல்லை. அவ்வகையிலான முதல் படம் பாலாவின் அவன் இவன்.
பாலியல் சார்ந்த, இனவியல் சார்ந்த, வக்கிரமான, அருவருப்பான ஆனால் சுவாரஸ்யமான, ரசிக்கத்தக்க நகைச்சுவையே Blue comedy என்பதாக அடியேன் புரிதல். அவன் இவன் படத்தின் முதல் இரண்டு மணி நேரம் இவ்வரையரைக்குள் கனகச்சிமாய்ப் பொருந்திப் போகிறது (கடைசி அரை மணி நேரம் டிபிகல் பாலா படம்).
அடுத்ததாய்ச் சொல்ல வேண்டியவை எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்கள். குறிப்பிட்ட இனத்தாரின் வாட்டார வழக்கு தேவையான அளவு மிகை பூசிக்கொண்டு மிகச்சிறப்பாய் வெளிப்பட்டிருக்கிறது. மேற்குறிப்பிட்ட நீல நகைச்சுவை காட்சிக்கு காட்சி படத்தில் பொங்கி வழிகிறது. இவ்வகை Blue comedy படங்களில் கெட்டவார்த்தைகள் சகஜம். அவன் இவன் படத்திலும் பீ, குண்டி, குஞ்சு, மூத்திரம் போன்ற வார்த்தைகள் அள்ளித் தெளித்திருக்கிறார். ஒரு தீவிர இலக்கிய எழுத்தாளனாலேயே தன் இமேஜ் களைந்து கதாபாத்திரத்துள் புகுந்து அவன் மொழி பேசவியலும். எஸ்.ரா. முதன் முறையாக அப்படிப் பேசியிருக்கிறார். எப்படி ஜெயமோகனின் ஆகச்சிறந்த வசனங்கள் கொண்ட திரைப்படம் நான் கடவுளோ, அப்படி எஸ்.ராமகிருஷ்ணனின் ஆகச்சிறந்த வசனங்கள் கொண்ட திரைப்படம் அவன் இவன்.
பாலா படத்தில் நடிகர்களைப் பற்றி பேசாமலிருக்க முடியுமா? அவன் இவன் இருவரையும் விட படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பவர் ஹைனஸாக வரும் ஜி.எம்.குமார். வாழ்ந்து கெட்ட ஜமீந்தாராக வரும் இவர் பின்னியிருக்கிறார் (இதே போல் ஆரண்ய காண்டத்திலும் வா.கெ.ஜ. ஆக வரும் சோமசுந்தரம் பெடலெடுத்திருக்கிறார்). மேடையில் நவரசங்களையும் காட்டும் காட்சி ஒன்றைத்தவிர மற்ற எல்லா காட்சிகளிலும் சோபிக்கிறார் விஷால் (அவர் நவரசங்களையும் காட்டும் அந்த த்ராபைக் காட்சியில் அவரை விட ஜொலிப்பவர் அதைப் பார்த்து வியந்து தன் முகபாவங்களை மாற்றிய படி இருக்கும் சூர்யா. என்ன கலைஞனய்யா அவன்!). ஆர்யாவுக்கான ஒரே ஆறுதல் நான் கடவுளை விட இதில் நடிக்க வாய்ப்பு அதிகம் என்பது மட்டுமே. அதைச் சரியாய்ச் செய்திருக்கிறார். மற்றபடி அவனைக் கட்டிலும் இவன் சற்று கம்மி தான்.
நாயகிகளில் (அவள் இவள்?) ஜனனி ஐயர் அழகு, அழகு, அழகு (நல்லவேளை, லைலா ஃபீல்டில் இருந்திருந்தால் அவரை இக்கதாபாத்திரத்தில் போட்டு நம் உயிரை வாங்கியிருப்பார் பாலா). கான்ஸ்டபிள் பேபியாக போலீஸ் யூனிஃபார்மில் ஜனனி நடந்து வரும் போது நமக்கே அவரது பிருஷ்ட சதை பற்றிக் குறைப்பட்டுக் கொள்ளத் தோன்றுகிறது (பாலா / எஸ்ரா கச்சிதமாய்க் கவனித்து வசனம் வைத்திருக்கிறார்கள்). மற்றவர் (பேரென்ன?) சும்மா டம்மிபீஸ். அம்மாக்களாக வரும் அம்பிகாவும், பிரபாவும் கவர்கிறார்கள்.
இரண்டு நாயக நாயகிகள் இருந்தும், உச்சகாட்சியில் யாரும் சேதாரமாகாமல் பிழைக்கிறார்கள் - அவ்வகையிலான பாலாவின் முதல் படம் இது (நாயகன் அல்லது நாயகி யாராவது இறுதிக்காட்சியில் சாக வேண்டுமே அவருக்கு!). நகைச்சுவைப்படம் என்பதால் அது கோரும் சுப முடிவு காரணமாய் இதில் விட்டிருக்கலாம்.
பாலா என்ற மிகச்சிறந்த இயக்குநரின் அழுத்தமான முத்திரை அழுத்தமாகப் படிந்திருக்கிறது இத்திரைப்படத்தில் (ஆர்யாவின் செயலால் ஹைனஸ் அழுது புலம்பியதை ஹைனஸ், ஆர்யா உட்பட எல்லோருக்கும் விஷால் நடித்துக் காட்டும் காட்சி ஓர் உதாரணம்). தவிர, தன் கடைசி இரண்டு படங்களின் திரைக்கதைப் பற்றாக்குறையை இப்படத்தில் சரி செய்திருக்கிறார் பாலா. கடைசி அரை மணி நேரத்தில் திடீர் வில்லன் முளைக்கிறார் என்பதைத் தவிர திரைக்கதை மிகச்சீராகவே பிரயாணிக்கிறது. அவன் இவன் மட்டுமல்லாது யுவன் கூட தன் பங்களிப்பைச் சரியாகவே செய்திருக்கிறார். ஆர்தர் ஏ. வில்சன் வழமை போல்.
நல்ல திரைப்படம் என்ற அடிப்படையில் பாலா படங்களின் வரிசை:
சேது > நந்தா > அவன் இவன் > பிதாமகன் > நான் கடவுள்
சிறந்த இயக்கம் என்ற அடிப்படையில் பாலா படங்களின் வரிசை:
பிதாமகன் > நான் கடவுள் > அவன் இவன் > சேது > நந்தா
அதாவது கடந்த தசாப்தத்தில் பாலா எடுத்திருக்கும் சிறந்த படம் இது. தமிழில் மாற்று சினிமா எடுப்பதற்கான போட்டியில் தானும் இன்னும் களத்தில் இருக்கிறேன் என்பதற்கான இயக்குநர் பாலாவின் பலமான அறைகூவல் அவன் இவன்.
பின்குறிப்பு:
படம் நிறையப் பேருக்கு (யாருக்குமே?) பிடிக்கவில்லை என்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கெல்லாம் என் சுருக்கமான பதில் மற்றுமொரு முறை படத்தை பாருங்கள் என்பதே. இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். வக்கிரமான விஷயங்களை ரசிக்க நீங்கள் வக்கிரமற்றவராய் இருத்தல் அவஸ்யம். குணாவை நிராகரித்தோம், பின் பத்து வருடங்கள் கழித்து கொண்டாடினோம். என் அக்கறையெல்லாம் அது போல் ஆகிவிடக்கூடாது அவன் இவன் என்பது தான்.
பையா, பசங்க போன்ற குப்பைகளை ஊரே கொண்டாடிய போது எனக்கு அவை பிடிக்கவில்லை என்பதைச் சொல்லத் தயங்கவில்லை. அதே போல் நடுநிசி நாய்கள், அவன் இவன் போன்ற மாணிக்கங்களை ஊரே காறியுமிழும் போது எனக்கு அவை பிடித்திருக்கின்றன என்பதைச் சொல்லாமல் இருக்கவியலாது. கோவணாண்டிகளின் ஊரில் வேஷ்டி உடுத்தத் தெரிந்தும் தயங்குபவன் உண்மையில் அவர்களுக்கு மாபெரும் சமூகத் தீங்கிழைக்கிறான். எனக்கு அதில் உடன்பாடில்லை.
மற்ற விஷயங்களை இரண்டாம் முறை படம் பார்த்து விட்டு பேசுகிறேன்.

Comments
நான் வேணா படத்த நல்லாருக்குன்னு ஒரு பதிவு போட்டுடறேன்! ஆள உடுங்க!
//மற்ற விஷயங்களை இரண்டாம் முறை படம் பார்த்து விட்டு பேசுகிறேன்.//
ஆங்,,, நீங்க போயி இன்னொருவாட்டி பாத்துட்டு வாங்க பாஸு!
I;m waiting for Bala to come back
அட்ராசக்க அட்ராசக்க அட்ராராராராரா ராசக்க
நீ கூறியது போல் படத்தின் முதல் பாகத்தில் சில அபாரமான நகைச்சுவை இருந்தனவே! (காட்சி மற்றும் வசன வடிவில்)
ஆனால்! படத்தின் பலவினமே செயற்கைதனம் தான்! (எதார்த்தப் பின்னணியில்)
ஆர்யா - கல்லூரிப் பெண் (குட்டிக்கரணக் காதல்..otha)
விஷல் - பெண் போலீஸ் (வீராப்புக்காக திருடப் போகும் விஷல்! பின்னொரு காட்சியில் நகை திருடியதாய் காட்டப் படுவது)
அகரம் மேடை காட்சி !? wtf (லேசா லேசா வில் வரும் பாட்டுக்குப் பாட்டை விட மொக்கையான காட்சி. என்ன சொல்ல வருகிறார்கள்!?)
அதை தொடர்ந்து வரும் ஆர்யாவின் நீ...ண்...ட விளக்க உரை!
திடீர் வில்லன்!
இறுதி காட்சி பழிவாங்குதலை நியாயப்படுத்த முயற்சிக்கும் 'முஸ்தபா' காட்சிகள்!
சப்ப போலீஸ்காரர்கள்!
அதிகப் பிரசங்கி சிறுவன்(!?) (கண்டிப்பாக பருத்தி வீரன், மைனா, ஆரண்ய காண்டம் பசங்க மாதிரி கிடையாது!)
அக்மார்க் பழிவாங்கல்! (என்னுடன் படம் பார்க்க வந்த 10 வயது சிறுவன் சொல்லிவிட்டான்!)
இது எல்லாத்யும் விட கதை அளவுக்கு கூட படத்தில் கதைங்கிற மயிரு இல்ல (திரைக்கதையும்)
சுமாரான படம்!- பாலாவிடமிருந்து என்பதினாலேயே மோசமான படமாகிறது!
பசங்க படத்தின் மீதான உனது வெறுப்பைத்தான் புரித்து கொள்ளவே முடியவில்லை!
Blue Comedy-யை தமிழுக்கு எப்பாயோ அறிமுகப் படுத்தி விட்டார் உயர்திரு. S.A.சூர்யா! ;)
http://www.tamizachi.com/index.php/sa/pe/122-2011-06-21-14-32-26.html
மனிதனுக்கு அவன் தகுதி என்ன என்றே தெரியாது. அவன் தன்னைத் தானே எடை போட்டுக் கொள்வது கூட தன் சொத்து, தன் நண்பர்களின் எண்ணிக்கை, தன் பிறந்த ஜாதியின் சமூக மதிப்பு, தன் மனைவியின் அழகு, தான் தன் உடலில் போட்டிருக்கும் நகைகளின் மதிப்பு, தன் உடையின் விலை, தான் பேசும் போது பேசும் தொனியில் தெரியும் வெற்று கெத்து(அவன் கருத்து குப்பையாக இருக்கும்), தான் நடந்து போகும் போது தன்னுடைய கெத்தான வெற்று நிமிர்ந்த நடை போன்ற வெளிப்படையாக தெரியக் கூடிய கூடிய விஷயங்களை வைத்துதான். ஆகவே உங்களையும் அவன் இவற்றின் அடிப்படையில் வைத்து மட்டுமே எடை போட முடியும். ஆகவே தன் தகுதி என்ன என்றே தெரியாத அடுத்த மனிதனை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைக்க உங்களுக்கு தெரிய வேண்டும். இல்லையெனில் உங்கள் கதை முடிந்தது.
delete this
http://yithudummy.blogspot.com/2011/07/how-to-show-number-of-posts-in-label.html
(முந்தைய கமெண்ட்டை உங்களை நான் டெலிட் செய்யச் சொன்னேனே? என்னை நீங்கள் இடைஞ்சலாக நினைக்காமல் இருந்தால் சரி)..d..
http://yithudummy.blogspot.com/
see it now...see post titles...post titles' shadow is behind them...
for placing shadow behind post title use this
http://yithudummy.blogspot.com/2011/07/how-to-show-shadow-for-post-title-in.html
http://specialdoseofsadness.blogspot.com/
(delete this...only my comments r queuing down)
அபூர்வமான மேற்கோள் என்றே இதை சொல்லலாம்.
ஒரு பிளாகில் அவன் இவன் விமர்சனம் படித்தேன். அதில் எஸ்.ராமகிருஷ்ணனின் சாயம் வெழுத்து விட்டது. படம் முழுவதும் காது கூசும் வசனம் என்று எழுதியிருந்தார் அந்த பிளாகின் ஆசிரியர். தன்னிடமே நடிக்கக் கூடிய எந்த வித மன முதிர்ச்சியும் இல்லாத இத்தகைய ஆட்கள் இவ்வளவு அறச்சீற்றம் கொள்ள உண்மையான காரணம் இவர்கள் அத்தகைய வசனங்களையும் அதை எழுதுவோரையும் மிக மிக personalஆக காண்கிறார்கள் என்பதினால்தான். கு.ப.ரா. sexஐ பற்றி எழுதிய சிறுகதைகளை படித்தோர் கொந்தளித்தார்களாம். அதற்கு கு.ப.ரா ஒருமுறை சொன்னாராம்: "இவங்களுடைய மனைவிமார்களை பற்றி சொல்லிவிட்டேன் என்பதைப் போன்று நினைத்து கொண்டு விடுகிறார்கள் போலிருக்கு"...உண்மையிலேயே அறச்சீற்றம் கொள்ளும் ஆசாமிகளைப் பற்றிய உண்மை இதுதான்...d...
சில பிளாகுகளை கூகிள் ரீடரில் add செய்தால் அதில் உள்ள அத்தனை தலைப்புகளையும்(post or essays) கூகிள் ரீடரில் பார்க்க முடியாமல் இருக்கும். 25யில் இருந்து 50 போச்ட் வரை மட்டுமே பார்க்க முடியும். என்ன காரணம் என்று தெரியவில்லை. இதை தவிர்க்க என்னிடம் ஒரு trick உள்ளது. அது இது.
http://www.thacinema.com/
there are totally 126 items in this movie blog...i counted it in its archive..when i diretly add this url it gave me only 50 posts instead of giving total 126 items...
there are two tricks to get more items in google reader from a blog...
after adding a blog in google reader click show details near the blog title appearing in your google reader(left side)...feed url of that blog will appear...for example i clicked show details after adding the above blog in google reader...
feed url appeared is this
http://www.thacinema.com/feeds/posts/deafult
in this feed URL i added ?max-results=500 at the end like this
http://www.thacinema.com/feeds/posts/default?max-results=500
after I added this url newly in add a subscription buttonat left side top once again...in this time i got 86 items instead of total 126 items of that blog in google reader...
My intention is to see all of the post titles(total 126 items) in google reader...so once again i made a change...i changed the word default into summary like this
http://www.thacinema.com/feeds/posts/summary?max-results=500
in this time I got all of the total 126 items of that blog in my google reader...
butt only one problem...as i put the word summary I can see only a small portion of essay only..i cannot see the essay fully in google reader...to read the full portion of the essay i should visit that blog.....
forward this to your friends...d
போன மாதம் கிரன் டிவியில் செண்பகப்பூ காட்டிலே சித்ரமணி பொய்கையில் என்ற பாடலை கேட்டேன். அதை youtubeல் தேடிப்பார்த்தேன். கிடைக்கவே இல்லை. அது என்ன படம் என்றூம் தெரியவில்லை. அதில் நடித்தவர்களின் பெயர்களும் தெரியவில்லை. அந்த பாடலை பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். இன்றுதான் தெரிந்தது அப்பாடல் உள்ள படம் ரதிநிர்வேதம் என்றும் அது ஒரு சீன் படம் என்பதும்.
see here
http://adrasaka.blogspot.com/2011/07/blog-post_6567.html
படத்தை விடுங்கள். அப்பாடல் நன்றாய் உள்ளது. கேளுங்கள்.
http://www.youtube.com/watch?v=xymNaP1R7
பாலியல் சார்ந்த, இனவியல் சார்ந்த, வக்கிரமான, அருவருப்பான ஆனால் சுவாரஸ்யமான, ரசிக்கத்தக்க நகைச்சுவையே Blue comedy என்பதாக அடியேன் புரிதல்.///////////
.
*************************************
உன்னோட புரிதல் புல்லரிக்க வைக்குது.ப்ளூ காமெடி யாரும் பண்ணலியா?உன்னை கும்பீபாகம்தான் செய்யணும்.வெண்ணிற ஆடை மூர்த்தி எஸ் எஸ் சந்திரன் ஆகியோர் செய்தது என்ன?\
******************************
அப்புறம் கவுண்டமணி வெறும் இன்சல்ட் காமெடிதான் செய்தார் என்ற உன் புரிதலில் தீயை வைக்க!!சூரியன் சத்யராஜ் உடனான படங்களை பாரு.அரசியலை தைரியமாக எம் ஆர் ராதாவுக்கு பின் சொன்னது கவுண்டமநிதான்!!
I already have given you world movie feed url to be added in google reader..i dont know whether u r interested in them or not...
now these r newer ones...addd tese too in your google reader...u will get world movie feeds...
அக்கரைச்சீமை- all posts-summary
http://hollywoodbalas.blogspot.com/feeds/posts/summary?max-results=500
அக்கரைச்சீமை-r rating movies
http://hollywoodbalas.blogspot.com/feeds/posts/summary/-/Rated%20R?max-results=500
feed of hollywood.mayuonline.com
http://feeds.feedburner.com/tahollywood
http://denimmohan.blogspot.com/
http://cinemajz.blogspot.com/
http://luckylimat.blogspot.com/
note:
ஏதேனும் ஒரு மூவி feedஐ கூகிள் ரீடரில் add செய்த பிறகு no items என்று கூகிள் ரிடர் காட்டினால் இதை தெரிந்து கொள்ளவும். No items என்ற காட்டினால் நீங்கள் ஆட் செய்திருக்கும் feedல் extraவாக சில spaceகள் இடம்பெற்றிருக்கும். அந்த spaceகளை நீக்கி விட்டு தன் பின் மீண்டும் feedஐ add செய்யவும்.
example:
if u add the following feed google reader will show no items.
http://hollywoodbalas.blogspot.com/ feeds/posts/summary?max-result s=500
because there r 2 extra spaces have appeared in this(before feeds and before s in results)...remove these 2 spaces and once again add the feed..u will get the feed...d