படித்தது / பிடித்தது - 98

தீப்பிடிக்கும் வழித்தடங்கள்

செடி பார்க்கச்சொல்லி
‘சுவற்றில் பல்லிபாரெ’ன
பார்வை திருப்பி

மருத்துவமனை போவதாய்
பொய்யுரைத்து...
குழந்தையை ஏமாற்றி
அழவிட்டுச்செல்லும்
தாயின் வழித்தடங்கள்
தீப்பிடித்துக் கொள்கின்றன.

எத்தனையோ மைல்கற்களுக்கப்பால்
செய்யும் அமைதியற்ற வேலைகளில்
கேட்டுக் கொண்டேயிருக்கும்
அந்த கேவல் சத்தம்.

- இளம்பிறை

நன்றி: கீற்று.காம்

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி