படித்தது / பிடித்தது - 91

பூர்ணிமம்

நெடுஞ்சாலை மரத்தடியில்
த்யானத்திலிருந்தான் புத்தன் .
அரச இலை அவன் மேல்
உதிர்ந்தது .
விழிக்கவில்லை .
காற்று ,
புழுதி வாரி வீசியது .
அவன் விழிக்கவில்லை .
மழைத்துளிகள் வீழ்ந்தன .
அப்படியே இருந்தான் .
குறுக்காக காகமொன்று
கடந்தது .
ஓடுடைய கூழாங்கல்லாய்
உறைந்து போயிருந்தது அவன் கண்கள் .
யசோதரா இறந்து விட்டதாக சொல்லப்பட்டது .
மனம் நோக்கி வேர்விட்டிருந்தது அவனது பிரக்ஞை .

தலைமை சீடன் ,
பெண்ணொருத்தியோடு ஓடி விட்டதாக
கூறப்பட்டது .
அசைவற்று இருந்தான் .
மண்ணை கிளறியபடி
மூச்சு விட்டு போய்க்கொண்டிருந்தன
கோடி கோடி எறும்புகள் .
சவமாய் ஜீவித்திருந்தான் .
நீ ஞானம் அடைந்து விட்டாய் என
ஒரு பொய் சொல்லப்பட்டது .
மெல்ல கண் திறந்தான் .
எதிரில் சிறு குழந்தை
சிரித்துக் கொண்டிருந்தது .
வெகு நாட்களுக்குப் பிறகு
ஆழ்ந்து அழுதான் .
தன் துறவை ,
மண்பொம்மையாக மாற்றி
குழந்தைக்குத் தந்தான் .
சிறிது நேரம் விளையாடிவிட்டு
தூக்கிப் போட்டு விட்டது குழந்தை .
தூக்குச்சட்டி எடுத்துக் கொண்டு
வயல் வேலைக்கு போய்க்கொண்டிருந்தான்
புத்தன் .

- கார்த்திக் நேத்தா

நன்றி: காட்சி

Comments

/*தூக்குச்சட்டி எடுத்துக் கொண்டு
வயல் வேலைக்கு போய்க்கொண்டிருந்தான்
புத்தன்*/

அருமையான் வரிகள். பகிர்வுக்கு நன்றி

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி