அவ்வப்போது கிறுக்கியவை

எனக்கு பெண்களின் புத்திசாலித்த‌னத்தின் மேல் எப்போதுமே அத்தனை பிரமாதமான மரியாதையில்லை என்பதை (அதற்கான நியாய தர்க்கங்களும், வரலாற்றுக் காரணங்களும் ஆந்த்ரபோலஜியில் ஒளிந்திருக்கின்றன என்ற போதிலும்) ஆங்காங்கே நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவு செய்து வந்திருக்கிறேன். விதிவிலக்குகள் உண்டு - ஒருவர் அம்பை; மற்றவர் பெயர் சொல்லவியலாது.

ஆனாலும் அவர்களைப் பிடிக்கவே செய்கிறது.

*******

ரோட்டில் எச்சில் துப்புபவர்களைப் பார்த்தால்
சிகரெட்டால் சுட வேண்டுனெத் தோன்றுகிறது;
பொதுவிடத்தில் புகைப்பவர்களைப் பார்த்தால்
நன்கு காறி உமிழ வேண்டுனெத் தோன்றுகிறது.

*******

அவன் சிற்றிதழ்களுக்கு ஆயுள் சந்தா செலுத்துபவன் போல் இருந்தான்.

*******

விளையும் பயிர் முளையிலே தெரியும்;
விளையும் உயிர் முலையிலே தெரியும்.

*******

ஆண் ஒரு பெண்ணை ஒன்று அம்மனாய்ப் பார்க்கிறான்; அல்லது அம்மணமாய்.

*******

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச்செய்தியால் (கவனிக்கவும் மரணம் அல்ல; மரணச்செய்தி) மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இதுவும் கடந்து போகும்.

*******

முகம் பார்த்துப் புணரும் உயிரினம் மனிதனைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

*******

எப்போதாவது என்னை நினைத்துக்கொள்.

காதலில் சுகமே நினைவில் நனைந்து கிடப்பது தான். பிரிவின் வலிக்கு ஒத்தடம் தருவதே நினைவுகளே. புற்று நோய்க்கு கதிரியக்கம் மாதிரி. மிதமான காதல் தீவிரம் அடைவதெல்லாம் மூளை நரம்புகளில் மின்சாரமாய் ஓடும் நிசப்த நினைவுகளில் தான்.

*******

நம் கடைசி சந்திப்பிற்குப்பின் உன் வெட்கத்தை தான் திட்டிக்கொண்டிருக்கிறேன். நீயும் அப்படியே என்று நினைக்கிறேன் - வெட்கப்பட்டுக்கொண்டே திட்டிக்கொண்டிருப்பாய். வெட்கத்தை ஒத்திப்போட்டால் கொஞ்சம் கடவுள் தெரிவார் கூடவே கவிதையும்.

*******

சோம்பலை முன்னிட்டு தைரிய‌மான செயல்கள் செய்திருக்கிறேன்;
பய‌த்தை முன்னிட்டு சுறிசுறுப்பான செயல்கள் செய்திருக்கிறேன்.

*******

த‌மிழின் மிகச்சிற‌ந்த ஒரு திரைக்காவியத்தைப் பற்றி மின்வெட்டும் அதைச்சார்ந்த கொசுக்கடியும் மிகுந்த ஓர் இரவில் எழுத நேர்ந்தது துர்பாக்கியமே.

*******

அப்படி இப்படி என்று எட்டு வருடங்களாய் எனக்கு போக்கு காட்டிய பிரமிள் கவிதைகளை இந்த விஜயதசமியன்று மெல்ல ஸ்பரிசித்தேன். தமிழின் ஆகச்சிறந்த கவிஞர்கள் என‌ யார் பட்டியலிட்டாலும் அதில் மாறிலியாய் இருப்ப‌வை இரண்டு பெயர்கள் - ‍‍

ஒன்று பாரதி; மற்றது பிரமிள்.

Comments

//ஆண் ஒரு பெண்ணை ஒன்று அம்மனாய்ப் பார்க்கிறான்; அல்லது அம்மணமாய்.//


வழிமொழிகிறேன்!
வலைஞன் said…
இவை கிறுக்கல் அல்ல! பெருக்கல்!!
K Siva said…
"விளையும் உயிர் முலையிலே தெரியும்" - whats the fact behind this line..??
Anonymous said…
விளையும் உயிர் முலையிலே தெரியும்-- whats the meaning of this line...and whats the fact behind this..
@K Siva (a) Anonymous http://www.womenshealthcaretopics.com/preg_breast_changes.htm
வலைஞன் said…
மறையும் கதிர் அலையிலே தெரியும்
மிளிரும் கலை சிலையிலே தெரியும்
இரையும் வயிர் இலையிலே தெரியும்
ஒளிரும் குணம் கதரிலே தெரியும் உறையும் தயிர் உறியிலே தெரியும்
விளையும் மயிர் தலையிலே தெரியும்
Anonymous said…
Yesterday, while I was at work, my cousin stole my iPad and tested to see if it can survive a forty foot drop, just so she can be a youtube sensation. My apple ipad is now destroyed and she has 83 views. I know this is entirely off topic but I had to share it with someone!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி