சந்திரயான் : EDITED PAGES - 1
“மகாத்மா காந்தியின் வாழ்க்கையை, இந்திய சுதந்திரப் போரைத் தவிர்த்து விட்டு எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித் தான் சந்திரயான் திட்டத்தின் கதையையும் நிலவின் ஆராய்ச்சி வரலாற்றைத் தவிர்த்து விட்டுச் சொல்ல முடியாது.”
சரியாய் ஒரு மாதம் முன்பு, இந்தப் புத்தகத்தை எழுதத் துவங்கியிருந்தால் இப்படித்தான் ஆரம்பித்திருப்பேன். ஆனால் இப்போது, இதைக் கொஞ்சம் மாற்ற வேண்டியிருக்கிறது - கிட்டதட்ட தலைகீழாய்.
ஆம்.
“இந்திய சுதந்திரப் போரை, மகாத்மா காந்தியின் வாழ்க்கையைத் தவிர்த்து விட்டு எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித் தான் நிலவின் ஆராய்ச்சி வரலாற்றையும் சந்திரயான் திட்டத்தின் கதையைத் தவிர்த்து விட்டுச் சொல்ல முடியாது.”
இப்படி மாற்றியெழுத வேண்டியிருக்கிறது.
ஒரு மாத இடைவெளியில் அப்படி என்ன நிகழ்ந்தது? அது வெறும் நிகழ்வு அல்ல; செய்தி. தலைப்புச்செய்தி. இன்னும் சரியாய் சொல்ல வேண்டுமெனில், வரலாறு. இந்த நூற்றாண்டின் மகத்தானதொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு!
இது வரை நடந்திருக்கும் நிலா ஆராய்ச்சிகளின் மிக மிக முக்கிய மைல்கல்லாய் நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியிருக்கிறது சந்திரயான். தண்ணீராய் செலவழித்து, தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தும், ஆனாப்பட்ட வல்லரசுகளே கண்டுபிடிக்க முடியாத நிலவின் பரப்பில் ஒளிந்திருந்த தண்ணீரை, சந்திரயான் மூலம் அனுப்பப்பட்ட நாசாவின் M3 என்ற பேலோட் மோப்பம் பிடித்திருக்கிறது.
இதோ, இதை எழுதத் தொடங்கியிருக்கும் இந்த 22 அக்டோபர் 2009ம் திகதியுடன் சந்திரயான் விண்ணில் ஏவப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. அதற்குள் நிலவில் இந்திய தேசியக் கொடி நட்டது முதல் சந்திரயான் அல்பாயுசில் போனது வரை அடுக்கடுக்காய் எத்தனை சம்பவங்கள்! அதைப் பற்றித் தான் இந்தப்புத்தகம் விலாவாரியாய் (தேவைப்படும் இடங்களில் சுருக்கமாய்) பேசவிருக்கிறது.
*******
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:

Comments
என் நண்பர்:எதை பத்தி சொல்றிங்க?
நான்: அட நம்ம WriterCSK எழுதுன புத்தகத்தை தான் சொல்றேன்.
என் நண்பர்: ஓ!! அதை இப்ப தான் படிச்சிங்களா?
நான்: ஆமா? ஏன் நீங்க ஏற்கனவே படிச்சிட்டிங்களோ?
என் நண்பர்:ஆமா ஆமா..... அதை ஏன் கேக்கற........
நான்:ஏன் இப்படி சலிச்சுக்கிரிங்க? அந்த புத்தகத்துக்கு என்ன குறைச்சல்??!!!
என் நண்பர்:எதுவும் குறைச்சல் கிடையாது, ஆனா எல்லாமே கொஞ்சம் அதிகம் தான்.
நான்:சும்மா சொல்லாதிங்க, எங்க கிடைக்கும் இந்த மாதிரி, எல்லா விஷயங்களுடன்??
என் நண்பர்:அட நீங்க சொல்றதும் சரிதாங்க, ஆனா எல்லாரோடைய ரசனையும் ஒரே மாதிரி இருக்காது.
நானும் அந்த புக் மார்க்கெட்டுல வந்த முதல் நாளே வாங்கி படிக்கணும்னு போனேன்.
அன்னைக்கு நைட் சென்னைல இருந்து பெங்களூர் வர போக வேண்டிய அவசர வேலை, சரி
ஆறு மணி நேர பயணத்துக்கு இது ரொம்ப உகந்ததா இருக்கும்னு இந்த புக்க வாங்கிட்டேன்.
நான்: சரி
என் நண்பர்: அப்புறம் என்ன கோயம்பேடு போய் நல்லா ஒரு பஸ்ஸ புடிச்சு பஸ்சும் ஏறியாச்சு. அப்ப எடுத்தேன் இந்த புக்க படிக்கலாம்னு,
எவ்வளவு விஷயங்கள், புது புது வடிவங்கள். அட அட படிக்க படிக்க, ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே நாலு அஞ்சு புக்கு வாங்கியிருந்தா
நம்ம நண்பருக்கெல்லாம் கூட அன்பளிப்பா கொடுத்திருக்கலாமேனு யோசிச்சேன்.
நான்: சரி அப்புறம் என்ன குறை கண்டிங்க??
என் நண்பர்:ஒரு இடத்தில், கிட்டத்தட்ட ஆசிரியரே தன் கருத்தை சொல்வது போல் ஒரு வரி:
"சந்திரயான் மொத்தமாக அனுப்பியிருக்கும் படங்களின் அளவு ஏழு டெராபைட்! சாதாரணமாக ஐஸ்வர்யா ராயின் ஓவ்வொரு அங்கத்தையும் துல்லியமாக
தெரிவிக்கும் ஓர் ஆளுயரக் கவர்ச்சிப்படம் 1 மெகாபைட் இருக்கும். டெராபைட் என்பது அது மாதிரி எழுபது லட்சம் புகைப்படங்களின் அளவு!."
நான்:என்னங்க இதுக்கெல்லாம் போய்ட்டு,
என் நண்பர்:அட நீங்க வேற, நான் அத கொண்டு போய்ட்டு என்னோட பசங்களுக்கு கொடுத்து இத படிங்கட,
இந்த ஸாரு சந்திரயான் பத்தி ரொம்ப அருமையா எழுதியிருக்காரு நல்லா படிச்சு தெரிஞ்சிகோங்கடான்னு,
ஆனா அதைப்படித்தவுடன் அசிங்கத்தை மிதித்தாற் போல் புத்தகத்தை பேருந்தின் ஜன்னல்வழி தூக்கிக் கடாசிவிட்டு காறி உமிழ்ந்தேன்.
இதையே என் பசங்க கிட்டையோ இல்லை அலுவலகத்துல வேலை பார்க்கிற ஒரு லேடிக்கோ இல்ல பின்ன யாருக்கவுது கொடுத்தா காறி காறி
துப்புவாங்க!! எந்த புத்திஜீவி போய் இந்த புக்க கொடுத்தான்னு கேவலபடுதுவாங்க. இல்லைனா இந்த புக்க போய் எந்த
பன்னாடை கொடுத்தான்னு அசிங்கபடுதுவாங்க.
நான்:அட இதெல்லாம் ஒரு பெரிய விசயமா??
என் நண்பர்:அட போங்க சார், உதாரணத்துக்கு இப்ப என்னோட பையன் வந்து இப்படி கேக்கறான், "ஏன்பா இதுல ஓவ்வொரு அங்கம்னா என்னபா? கவர்ச்சி படம்னா என்னப்பா?
நான்:!!!!!!!!!!!!!!!
என் நண்பர்:என்னங்க பதிலே இல்லை?? எவ்வளவு உதாரணம் இருக்கு, இந்தியாவின் பெருமையா விவரிக்க ஐஸ்வர்யா ராயின் அங்கத்தை விட வேற எதுவுமே இல்லையா?
முட்டாபைய, எல்லாம் அவன் எழுதுற சகா : சில குறிப்புகளோட வேலை தான், நாம யாரும் மண்ணை கொட்ட வேண்டாம் எல்லாம் அவனே கொட்டிப்பான்.
நான்:அட விடுங்க சார் பைய இப்ப தான் எழுதவே ஆரமிச்சியிருக்கான், போக போக பழகிடுவான் சார்.
என் நண்பர்:கிழிச்சான்,ஏதோ ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்
விவேக் ஒரு வசனம் சொல்லுவார். அப்போது சிரித்தேன்; இப்போது சிந்திக்கிறேன்.
"தெளசண்ட் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது."
அவனுக்கு தெளசண்ட் இல்லை டூ தெளசண்ட் பெரியார் வந்தாலும் என் மயிரின் அளவு கூட திருத்தவே முடியாது.
நான்: பொறுத்திருந்து பாப்போம் சார்.
என் நண்பர்: அதற்கு மேல் நம்மால ஒண்ணும் பண்ணமுடியாது.
நானும் என் நண்பரும்