ஒரு குட்டி பூர்ஷ்வாவின் எண்ணங்கள்
சம்பவம் நிகழ்ந்து சரியாய் இரு வாரங்களுக்குப் பிறகு ரோசா வசந்த் தன் தரப்பை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார். அவற்றில் வெளிப்படும் அவரது எழுத்தின் நடையும், கருத்துக்களின் தீவிரமும், விஷயத்தில் நேரடியாய் சம்மந்தப்படாத என் போன்ற ஒரு மூன்றாம் நபரை மிகவும் வசீகரிக்கக் கூடியவை (தொகுத்து கீழே தந்திருக்கிறேன்). கிட்டதட்ட விருமாண்டி படம் பார்ப்பது போல் இருக்கிறது. அது ரோஷாமன்; இது 'ரோசா'மன்.
காலவரிசைப்படுத்தப்பட்ட ரோசாவின் இடுகைகள்:
காலவரிசைப்படுத்தப்பட்ட ரோசாவின் இடுகைகள்:
- ஜ்யோவராமிற்கு!
- முடிவுரை.
- விவாதம் - 1
- சென்ற பதிவு.
- `தண்ணீ'.
- நடந்தவை-2.
- பிண்ணணி.
- நடந்தவை-1
- கொலைகாரக் கும்பல்-1
- (title unknown)
- தலைப்பில் இருக்கும் 'குட்டி பூர்ஷ்வா' என்பது என்னையே குறிக்கிறது என்று சொல்லி இம்முறை தப்பிக்க விரும்பவில்லை; அது ரோசா தான்.
- வழக்கம் போல் ஜ்யோவ்ராம் / ரோசாவுக்கு ஆதரவாய் / எதிராய் எழுதப்பட்டதல்ல இது. ரோசா தரப்பை தொகுப்பதே பிரதான நோக்கம்.
- முன்பு போலவே, 'ஒரு குட்டி பூர்ஷ்வாவின் எண்ணங்கள்' என்ற இத்தலைப்பும் ரோசா பதிவின் பெயரிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கிறது.
- இதைத் தொடர்ந்து நான் எழுதுவது 'ஒரு குட்டி பூர்ஷ்வாவின் நல்லிணக்க முயற்சிகள்' என்பதாய் அமைந்து விடக்கூடாதென விரும்புகிறேன்.
- இது தொடர்பாய் ரோசா அடுத்து எழுதவிருக்கும் பதிவுகளும் (அவருக்கு ஆட்சேபனை இல்லையெனில்) இதில் இணைக்கப்படும். Stay tuned.
Comments
Yes. Roza himself has removed the posts from his site.