போர்க்களமும் திருவாசகமும் - 5
Copyright: இப்பாடல் இயக்குநர் ராஜ்மோகனின் 'போர்க்களம்' படத்துக்காக 2005ல் எழுதப்பட்டது. வரிகள் முழுக்க முழுக்க என்னுடையவை. வேறு இடங்களில் பயன்படுத்தும் உரிமையும் என்னையே சாரும். வேறு படங்களில் பயன்படுத்த விரும்புபவர்கள் என் முறையான அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும்.
**************
Situation: சூழ்நிலைகளால் கதாநாயகனும் கதாநாயகியும் பிரிக்கப்படுகிறார்கள். அப்போது பிரிவுத்துயரில் இருக்கும் இருவரையும் காட்சிப்படுத்துகையில் பின்னணியில், ஆண் குரலில் - அதாவது கதாநாயகன் பாடுவது போல் - வரும் பாடல். மான்டேஜ் சாங் - காட்சிகளும் இசையும் முக்கியம்.
பல்லவி:
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னுயிரே தீக்குளிக்கும்
நினைவோடு நீயிருந்தால் நிசப்தத்தில் இசை வழியும்
கணமொன்று மறந்திருந்தால் நெஞ்சுக்குள் போர் வெடிக்கும்
உன்னோடும் சேர்ந்திருந்தால் போர்க்களமும் பூக்களமே.
சரணம் 1:
உன் மடியில் துயிலுறங்கி என் ஜீவன் வாழ்கிறதே
உனக்கெனவே உயிர் விடத்தான் என் ஆயுள் நீள்கிறதே
காற்றுக்கு உருவமில்லை காதலுக்கும் உருவமில்லை
அவையின்றி உயிருமில்லை நம் காதல் உயிர் காக்கும்
காதலொரு கானகப்பயணம் இருளுக்கும் பயமெடுக்கும்
பாதையிலே நெருஞ்சிகள் கிடக்கும் பாத்தில் குருதியும் பூக்கும்
தொலைவினிலே தெரியும் வெளிச்சம் அதற்காக விரையும் நெஞ்சம்
வலி தாங்கும் காலம் யாவும் வசந்தத்தின் வாசல் கோலம்.
சரணம் 2:
உனக்காக அழுகையிலே விழிநீரும் இனிக்கிறதே
உன் கண்கள் கசிகையிலே இளநீரும் கசக்கிறதே
யமுனாவின் கரையோடு கண்ணுறங்கும் கல்லறையும்
கனாவில் கதையாடும் காதலின் கருவறையே
அந்தி சாயும் கணங்கள் யாயும் அறிவ்விப்பது இரவையல்ல
அமுதைப்பொழியும் நிலவைத்தானடி அந்நிலவுக்குக் காத்திருப்போம்
விடியாத இரவுகள் இல்லை வடியாத சோகமும் இல்லை
கடலலைகள் ஓய்வதில்லை காதலென்று தேய்வதில்லை.
**************
பின்குறிப்பு:
இப்பாடலின் இரண்டாம் சரணத்தில் வரும் மூன்றாம் வரியை கவனித்தால் தாஜ்மஹாலைக் குறிக்க யமுனை நதியை வலிய புகுத்தியிருப்பது தெரியும். யமுனா என் மனைவியின் பெயர்; அப்போது என் காதலி. கிட்டதட்ட வைரமுத்துவின் முதல் பாடலான "பொன் மாலைப் பொழுது", அவரது மனைவியான பொன்மணியை பயன்படுத்தியிருப்பதைப் போல.

Comments