சில சிந்தனைகள் - 3

பிரபு சாலமன் என்ற பெயருடைய இயக்குநரை உங்களுக்குத் தெரியுமா? கிங், கொக்கி, லீ, லாடம் என்று நான்கு சுவாரசியமான படங்களை இயக்கியிருக்கிறார். வழக்கம் போல் தமிழ் கூறும் நல்லுலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

^^^^^^^^^^^^^^^^^
மக்களுக்கு என்ன பிடிக்கும் என MSV, ARR இருவரும் புரிந்து கொண்ட அளவுக்கு இளையராஜா புரிந்து கொண்டாரா என்பது சந்தேகமே. அவரது நல்ல பாடல்கள் ஹிட்டானது (கிட்டதட்ட ஓராயிரம்) விபத்தாகவே தோன்றுகிறது.

^^^^^^^^^^^^^^^^^
பேரரசு இயக்கும் படங்களின் வசனங்களை கவனித்திருக்கிறீர்களா? சில எதிர்பாராத, சுவாரஸ்ய எதுகைகள் தெறித்து விழும். அதற்காகவே அவருடைய படங்களை அவற்றின் மற்ற அபத்தங்களை சகித்துக் கொண்டு பார்க்கிறேன்.

^^^^^^^^^^^^^^^^^
பத்திரிக்கைகள் முதல் நண்பர்கள் வரை எல்லோருமே நன்றாக இருக்கிறது எனச் சொல்லி, அதனால் பார்க்க நினைத்து ஆனால் பார்க்க முடியாமல் போன சமீபத்தைய ஹிந்தி படங்கள்: Newyork, Love Aaj Kal மற்றும் Kaminey.

^^^^^^^^^^^^^^^^^
ஹிந்தியில் தற்போது நல்ல நடிகை என்றால் அது ப்ரியங்கா சோப்ரா தான். விதவிதமான கதாபாத்திரங்களில் அற்புதமாய் நடிக்கிறார். அவரை வைத்து நாம் எடுத்தது 'லப்டப்பதி' தமிழன் படம் தான். அது தான் தமிழனின் திறமை.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி