தமிழ்: சிறந்த 15 இளம் இயக்குநர்கள்
- மிஷ்கின் (அஞ்சாதே)
- சசிகுமார் (சுப்ரமணியபுரம்)
- ராம் (கற்றது தமிழ்)
- வசந்தபாலன் (வெயில்)
- சுசீந்திரன் (வெண்ணிலா கபடி குழு)
- சிம்புதேவன் (இம்சை அரசன் 23ம் புலிகேசி)
- வெற்றிமாறன் (பொல்லாதவன்)
- வெங்கட்பிரபு (சென்னை-600028)
- விஜய் (பொய் சொல்லப் போறோம்)
- புஷ்கர்-காயத்ரி (ஓரம் போ)
- எஸ்.பி.ஜனநாதன் (ஈ)
- கே.வி.ஆனந்த் (அயன்)
- ப்ரியா வி. (கண்ட நாள் முதல்)
- அறிவழகன் (ஈரம்)
- விக்ரம் கே. குமார் (யாவரும் நலம்)
1. சிறந்த பத்து பேரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தான் உத்தேசித்திருந்தேன் (அப்படித்தான் பக்கவாட்டில் அறிவிப்பும் வெளியிட்டிருந்தேன்). ஆனால் போட்டி கடுமையாக இருந்ததால், யாரையும் விலக்க மனமில்லாமல், பதினைந்து என்று எண்ணிக்கையை கூட்டியிருக்கிறேன். என் தேர்வை நியாயப்படுத்தும் அவர்களது தலா ஒரே ஒரு படத்தை அடைப்புக்குறிக்குள் தந்திருக்கிறேன்.
2. மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களை சீனியர்கள் என்ற அடிப்படையில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. Obviously, பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்றவர்களைப் பற்றி கேள்விக்கே இடமில்லை.
3. அதிகபட்சம் இரண்டு படம் எடுத்தவர்கள் என்பதைத் தான் இளம் இயக்குநர்கள் என்பதற்கான அளவுகோலாக பயன்படுத்தி இந்த வரிசைப் பட்டியலைத் தயாரித்திருக்கிறேன்; வயதை அடிப்படையாகக் கொண்டு அல்ல.
4. இரண்டு படங்களுக்கு மேல் இயக்கி இவர்களில் சிலரை விட வயது குறைவாயிருக்கும் நல்ல இயக்குநர் பெயர்கள் இதில் விடுபட்டிருக்கலாம் (உதாரணம்: பாலா, அமீர், செல்வராகவன், சேரன், கெளதம், முருகதாஸ், சசி, சுசி கணேசன், ராதாமோகன், பாலாஜி சக்திவேல், தங்கர் பச்சான், காந்தி கிருஷ்ணா, சமுத்திரக்கனி, விஷ்ணுவர்தன், பிரபு சாலமன், சரண்).
5. வேறு யாரேனும் தவற விட்டிருந்தால் தெரியப்படுத்தவும்.
Comments
Idharku ungal padhil yenna?