மிக அழகான 10 தமிழ் பெண்கள்
மிக அழகான 10 தமிழ் பெண்கள் பட்டியலை வெளியிடுவதாய் அறிவித்து கிட்டதட்ட ஒரு மாதமாகிறது. என்ன ஆயிற்று என்று யாரும் கேட்கவில்லை யெனினும் பதில் சொல்ல வேண்டிய கடமையிருப்பதாக உணர்கிறேன். உண்மையில் பட்டியல் வெகு நாட்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால் வெளியிடுவதில் தான் ஒரு சின்ன அல்லது பெரிய சிக்கல் இருக்கிறது.
அதில் இடம் பெற்றவர்களில் ஒருவர் ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவரின் மகள்; இன்னொருவர் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள்; எல்லாவற்றையும் விட ஆபத்தானதாய் மற்றுமொருவர் ஒரு நவீன பெண் கவிஞர். பட்டியலை வெளியிட்டால், நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று சஹ்ருதயர்கள் சிலர் சொல்லக் கேள்வி.
இருக்கும் ஒரே ஒரு அழகான மனைவியுடன், மென்பொருள் துறையின் சுமாரான சம்பளத்தில், அந்நியர்கள் சூழந்திருக்கும் ஊரான பெங்களூரில், அமைதியாய் அடக்கமாய் ஒண்டிக் குடித்தனம் செய்து கொண்டிருக்கும் என் போன்ற அம்மாஞ்சிகளுக்கு இத்தகைய அதிர்ச்சி வஸ்துக்கள் ஆகாது. மேலும், எனக்கும் எழுத வேறு உருப்படியான விஷயங்கள் காத்திருக்கின்றன.
இதையெல்லாம் மனதில் கொண்டு நோக்குங்கால், இந்தப் பட்டியலை இப்போது வெளியிடுவது எந்த விதத்திலும் சாணக்கியத்தனம் இல்லை என்றே தோன்றுகிறது. என் மனச்சூழலோ, தமிழ்ச்சூழலோ மாறும் நாளில் இப்பட்டியலை நான் வெளியிடக்கூடும். ஒன்று மட்டும் இப்போதைக்கு - பட்டியலில் இருந்தவர்களுள் ஒருவர் : பவதாரிணி இளையராஜா.

Comments
பவதாரிணி அழகான பத்து பெண்களில் ஒருவரா ? இது உங்களுக்கே ஓவர் ஆக தெரியவில்லை....
No. Am utter serious..
மத்திய அமைச்சர் மருமகள்
ஜாலியா பேசவேண்டியதுதான்
Sarkar, you rock!