விளம்பரங்கள் கவர்ச்சிகரமானவை
பத்திரிக்கையோ, வானொலியோ, தொலைக்காட்சியோ - ஊடகம் எதுவாயினும் விளம்பரத்தின் நோக்கம் ஒன்று தான். பார்ப்பவரை கவனிக்க வைக்க வேண்டும்; முடிந்தால் யோசிக்க வைக்க வேண்டும் அல்லது யோசிப்பதைத் தடுக்க வேண்டும்; அதன் மூலமாக வியாபாரம் நடக்க வேண்டும்.
தொலைக்காட்சி விளம்பரங்களில் சில வினாடிகளுக்குள் ஒரு சுவாரசியமான கதை சொல்லி பொருளை விற்க வேண்டும். அவை பொதுவாய் ஒரு திரைக்கதையின் three-act structureஐக் கொண்டிருக்கும்; தவிர எதிர்பாராத ஒரு முடிவைக் கொண்டிருக்கும் - O.Henry அல்லது சுஜாதாவின் சிறுகதை போல.
வானொலி விளம்பரங்கள் பெரும்பாலும் slogan rhymingகளை நம்பி இருப்பவை; அதன் creativity scopeம் குறைவு என்பதால் பேசவும் அவ்வளவாய் ஏதுமில்லை. நடிகர் விவேக் எஃப்.எம் விளம்பரங்கள் பற்றி ஏற்கனவே போதுமான அளவு கிண்டலடித்து விட்டார். அதனால் பாவம், விட்டு விடலாம்.
இவை இரண்டையும் விட சவால் மிகுந்தவை பத்திரிக்கை விளம்பரங்கள். தொலைக்காட்சி விளம்பரங்களில் சொல்லப்படும் அதே கதையை ஒரு புகைப்படம் மற்றும் சில வார்த்தைகளில் சொல்ல வேண்டும். இதற்கு மிகுந்த கற்பனைத் திறன் தேவை - எடுப்பவருக்கு மட்டுமல்ல; பார்ப்பவருக்கும்.
PACE என்கிற சலவை சோப்புக்கான இந்த விளம்பரங்களை கவனியுங்கள்.
இந்த விளம்பரங்களில் சலவையின் வெண்மையை மிகைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள். இதில் முக்கிய விஷயம் அதைச் சொல்லிய முறை. இதன் கவர்ச்சி அந்த பெண் உடலின் exposure அல்ல - அவளது உள்ளாடையை உங்களை கவனிக்கச் செய்து, அதைக் குறித்து யோசிக்க வைத்தது தான்.
பார்வையாளனை யோசிக்க வைக்கும் போது, அவன் விளம்பரம் எனபதைத் தாண்டி தன் வாழ்க்கையோடு அதைத் தொடர்புபடுத்தி அப்பொருளை தனக்கு நெருக்கமாக, தனக்கு தேவையான ஒன்றாக உணர்கிறான். அங்கு தான் விளம்பரம் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுகிறது.
இப்போது ஒரு சின்ன புதிர். இன்னொரு விளம்பரம் - Hansaplast என்கிற ஆணுறைக்கானது. ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் கூட இவ்வளவு நேர்த்தியாக இதைச் சொல்ல முடியுமா எனத்தெரியவில்லை. இதில் என்ன சொல்ல வருகிறார்கள் என்க் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
தெரியவில்லையெனில் உங்கள் மனைவியிடம் கேட்டுப்பாருங்கள்.

Comments
Im a bachelor.
What is that :(
-Vibin
தினமும் உறவு வைத்துக் கொண்டால் உடற்பயிற்சி தேவையில்லையாம். இது உங்களுக்கான கொசுறுச் செய்தி...
ஸ்பெசல் தாங்ஸ் டு தங்கவேல் மாணிக்கம் .
Backshot...hi..hi..hi...