சுதந்திரம் பற்றி ஸக்கரியா - 1
"Rediff On The NeT"ல் Freedom என்கிற தலைப்பின் கீழ் வெளியான மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியாவுடனான நேர்காணலின் தமிழாக்கம் இது.
############
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடும் நேரம் தவிர ஒரு இந்தியக்குடிமகன் எப்போதும் தன்னை இந்தியன் என உணர்வதேயில்லை
பால் ஸக்கரியா, கேரளாவின் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களுள் ஒருவர். அவருடைய கதைகளைப்போலவே அவரின் அரசியல் கருத்துக்களும் முன்னோடியானவை, முற்போக்கானவை. அவருடைய அரசியல் பத்திகள் எப்போதும் ஒரு முரண்பாட்டுத்தன்மையோடு தான் முடியும். அவருடைய கேள்வி கேட்கும் தன்மையும், பழமைக்கெதிரான கருத்துக்களும், அவரை கேரளாவிலிருக்கும் பிற கற்பனை வளமிக்க எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன.
ஷோபா வாரியருடனான இந்த "எல்லைகளற்ற" உரையாடலில், இந்த நாவலாசிரியர் பி.ஜே.பி.காரர்கள், இடதுசாரிகள், முஸ்லிம்கள்,நேரு தொண்டர்கள், காந்தியவாதிகள் பற்றியும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவிற்கு என்ன தவறு நேர்ந்தது என்பது பற்றியும் பேசுகிறார்:
நீங்கள் சுதந்திர இந்தியாவில் வாழ்வதாக எப்போது உணர்ந்தீர்கள்?
நான் அதை எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறேனா என்பதே தெரியவில்லை. ஆம். ஒரு காலத்தில், சுதந்திர இந்தியாவில் வாழ்வதாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அது இளவயதில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காலம்; தேசிய கீதம் கற்றுக்கொடுக்கப்பட்ட காலம், ராஜீவ் காந்தியும் சஞ்சய் காந்தியும் நேருவின் பேரர்கள் என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட காலம். ஆனால் வளர்ந்து, அரசியல் பற்றிய பிரக்ஞை வந்த பிறகு, இந்தியா அப்படிப்பட்டதாக இல்லை. அது ஒரு காந்தியக்கனவு மட்டுமே.
இரண்டாவதாக, சுதந்திரம் என்பது ஒரு சார்பு வார்த்தை. அது சிலருக்கான சுதந்திரமே; எல்லோருக்குமானது அல்ல. பார்க்கப்போனால், இப்போது கூட மக்கள் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் வாங்கியதைப்பற்றி பேசுகிறார்கள். பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் வாங்கியது எனக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. சுதந்திரம் என்பது வேறு பல விஷயங்களால் ஆனது என நினைக்கிறேன்; அது நீதியைக் குறிக்கிறது; வறுமையின் முடிவைக் குறிக்கிறது; ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதைக் குறிக்கிறது.
இரவில் ஒரு பெண் தெருவில் தனியாய் நடப்பதைக் குறிக்கிறது; உங்கள் குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் சுதந்திரத்தைக் குறிக்கிறது. வெறுமனே, வெள்ளை ஆட்சியாளர்கள் கூட்டம் போய், அதே போன்ற வேறு ஆட்சியாளர்கள் கூட்டம் வருவதற்கு, நாம் விடுதலையடைந்து விட்டோம் என்பது பொருளல்ல.
பிரிட்டிஷார் ஆள்வதும், இந்தியர் ஆள்வதும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நீங்கள் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா?
வித்தியாசம் இருக்கிறது எனக்கருதுகிறேன். ஏனெனில், நாம் பிரிட்டிஷ் கலாசாரத்திலிருந்து வேறுபட்டவர்கள் எனினும், நிறைய இந்தியர்கள் ஆங்கிலக்கல்வியை மேற்கொண்டதனால் அதைப்பின்பற்றுகிறார்கள். பி.ஜே.பி.காரர்கள் கூட தாங்கள் நினைத்துக்கொண்டிருப்பதை விட அதிகமான பிரிட்டிஷ்தனத்துடன் தான் இருக்கிறார்கள். சீர்குலைவை நாமே ஏற்படுத்துகிறோம் என்றால் அது நமக்கு சந்தோஷத்தைத் தருகிறது, தவிர அது மேலும் சீர்குலைவை ஏற்படுத்துவதற்கான சுதந்திர உணர்வையும் நமக்கு அளிக்கிறது.
ஆனால் சிலர், கொள்ளையடிப்பது பிரிட்டிஷ் அரசியல்வாதிகளா அல்லது இந்திய அரசியல்வாதிகளா என்பது எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது என்கிறார்களே? எல்லாவற்றுக்கும் மேலாக, கொள்ளை என்பது கொள்ளை தான். சீர்குலைவு என்பது சீர்குலைவு தானே.
அந்த வகையில் பார்த்தால், நிஜமாய் எந்த வேறுபாடும் இல்லை. பிரிட்டிஷார் இதை விட நல்ல நிர்வாகத்தை வழங்கியிருக்கக்கூடும். நமது பாபுஜிக்கள் தந்து கொண்டிருப்பதைக்காட்டிலும், நிச்சயமாய் ஒரு பாரபட்சமில்லாத, நன்கு முறைப்படுத்தப்பட்ட, மேலாண்மை சார்ந்த நிர்வாகத்தைத் தந்திருப்பார்கள். ஆனால் அது ஏழைகளுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தியிருக்கப் போவதில்லை. அந்நியரிடமிருந்து விடுதலையடைதல் என்பது நெடுநாளைய கேள்வி. ஆனால் கடைசியில், நீங்கள் இந்தோனேஷியா அல்லது வேறு சில நாடுகளைப்போல் வேகம் காட்டினால், சுதந்திரத்தின் பலன்களை சீக்கிரமாய் அனுபவிக்கலாம். அல்லது நீங்கள் இந்தியாவைப்போல் ஒரு சோம்பேறித்தனமான, பின்தங்கிய தேசமென்றால் அது நிகழ இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் ஆகும்.
நமது பின்தங்கிய நிலைமைக்கு என்ன காரணம்? நீங்கள் சொல்வது போல் நமது சோம்பேறித்தனமா? அல்லது ஆட்சியாளர்களின் சுய மையச் செயல்பாடுகளா?
என்னால் சொல்லமுடியவில்லை. தேசத்தின் சித்தாந்தங்களும் குணநலன்களும் தவறான முறையில் நம்முள் வார்க்கப்பட்டதே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். உதாரணமாய், ஹிந்துஸ்தானத்தின் 5000 வருட சரித்திரத்தையும், மொகலாய சாம்ராஜ்யத்தின் 800 வருட வரலாற்றையும் நாம் வழிவந்த இந்திய பாரம்பரியத்தின் பகுதியாக மக்கள் பேசுகிறார்கள். இது எல்லம் நடந்தது நேருவின் அற்புதமான ஆனால் முட்டாள்தனமான Discovery of India புத்தகத்தினால்.
வெளிப்படையாக சொல்கிறேன், கேரளாவில் வசிப்பவன் என்கிற முறையில் இந்த 5000 வருட சரித்திரத்துடனும், 800 வருட மொகலாய பாரம்பரியத்துடனும் நான் ஒன்றும் செய்வதற்கில்லை, அது என்னை எந்த வகையிலும் பாதிப்பதில்லை. எந்நாளும் இந்த பாரம்பரியங்ளுக்கு நான் கடமைப்பட்டவனல்ல.
ஒரு துர்சொப்பனத்தில், நான் இந்திய தேசத்தை ஓர் இயத்திர மனிதனாகவும், அதை நகர்த்தும் இயக்கமாக பிரிட்டிஷையும், அதனுள் ஓர் அழகான கனவையும் - காந்தி உருவாக்கிய மென்பொருள் - கண்டேன். காந்தியின் சித்தாந்தம் என்ன? இந்தியப் பாரம்பரியத்தில், ஒரு தேவதூதன் போல் அரசியலில் நுழைத்து வழக்கம் போல் சீர்குலைவை ஏற்படுத்தியவரா அவர்? அல்லது இன்னும் சரியான காலநேரம் வரப்பெறாத சித்தாந்தங்களை வைத்திருப்பவரா? என்னைப் பொறுத்தவரை இந்திய தேசியம் எழுப்பிய சில முக்கியமான கேள்விகளுக்கு அவரிடம் விடைகள் இருந்தன. ஸ்தபதிக்கு மட்டும் தான் தெரியும் மூர்த்தியின் குறைகள்.
Discovery of India, அந்த இயந்திர மனிதனுக்கு கற்பனைமிக்க உற்சாகமெனும் மனநோயை - அத்வைதத்தைப் போல பிரம்மாண்டம் மற்றும் தனித்துவம் என்கிற மாயை - வழங்கிய இரண்டாம் மென்பொருள். இப்போது அந்த வைரஸ், ஹிந்துத்துவம்.
காரணம் அவர் நல்லவர்; எல்லோரும் தன்னைப்போலவே தேசப்பற்றுடன், சுய நலமின்றி இருப்பார்கள் என காந்திஜி கற்பனை செய்தார். அவர் தேசத்தைக் கனவு கண்டதன் காரணத்துள் ஒன்று அப்போது தேசம் என்ற ஒன்றே இல்லை. அவர் சுதந்திரம் கேட்ட போது, யாருடைய சுதந்திரத்தைக் கேட்டார்? அப்போது இந்தியாவே இல்லை. இருந்தவை சில ராஜாக்கள் கூட்டமும், பிரிட்டிஷ் ஆட்சித்துண்டுகளும். அவர் முதலில் ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டியிருந்தது, பின் அதற்கு சுதந்திரம் வேண்டும் என கேட்க வேண்டியிருந்தது.
அவருக்கு சிறந்ததான இந்தியா என்று தோன்றிய ஒன்றை உருவாக்குவது பற்றி சிந்தித்தார். அவருடைய பார்வையில் அது சுயராஜ்யம், இந்து சுயராஜ்யம், ராமராஜ்யம் அல்லது ஏதோ ஒன்று. சுதந்திரத்திற்காகப் போராடும் வரை அது செல்லுபடியானது. அதன் பிறகு வேறு நிஜங்கள் உள் நுழைந்தன. பாவம் காந்தி, அவர் தேசியத்தை பிரிட்டிஷாருடன் பேரம் பேசுவதில் உபயோகித்தார். ஆனால் சுதந்திரம் வந்தவுடன் தேசம் துண்டுகளாக சிதறுண்டது.
விடுதலை என்பது நீண்ட காலச்சித்தாந்தம். ஒரு வேளை 200 வருடங்களுக்கு முன்பாகவே நாம் சுதந்திரம் பெற்றிருந்தால், நமது சோம்பேறித்தனங்களுடன் இப்போது துணைக்கண்டத்தில் ஒரு செல்வமிக்க நாடாகவோ அல்லது செல்வம் மிக்க நாடுகளின் குழுவாகவோ இருந்திருபோம்.
செல்வம் மிக்கதாய் மாற ஐம்பது வருடங்கள் என்பது குறைவான காலமா?
ஐம்பது வருடங்களில் நிறையப்பேர் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் நம்மால் முடியவில்லை. காலனியாதிக்கம் எப்படியோ நம்முடைய முயற்சிக்கும் திறனை எடுத்துக்கொண்டு விட்டது. நேரடியாகவோ மறைமுகமாகவோ நீண்ட காலமாகவே நாம் செயப்படுபொருளாகவே இருந்து வந்திருக்கிறோம். இப்போது எல்லோரும் அரசாங்கத்தை ஒரு காமதேனுவாக எண்ணி அது தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் என எதிர்பார்க்கிறார்கள். நிகழவிருக்கும் ஏழ்மையின் நிச்சயத்தன்மை பற்றிய உணர்வு: தன்னை ஆட்கொள்ள மூலைகளைச்சுற்றி, வீட்டின் பின்புறம் என காத்திருக்கும் ஏழ்மை, ஒவ்வொருவரையும் சுயநலக்காரனாய் ஆக்குகிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிடுங்கிக்கொள் என்கிற மனநிலை அது.
காந்தி பேசிய பலம் மிக்க, செல்வம் மிக்க தேசத்தை ஏன் யாருமே உருவாக்க முனையவில்லை. ஏனெனில் உண்மையில் தேசம் என்ற ஒன்றே இல்லை.
இப்பொழுதுமா?
ஆம். பாகிஸ்தானுடன் முட்டாள்தனமான கிரிக்கெட் விளையாடும் நேரம் தவிர்த்து ஒரு இந்தியக்குடிமகன் எப்போதும் தன்னை தேசத்துக்கு அர்ப்பணிப்பதில்லை. சீனாவுடனான யுத்தத்தின் போதும் நீங்கள் தேசம் பற்றி பேசுகிறீர்கள். மற்ற நேரங்களில் ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் அவனுடனேயே கட்டுண்டு கிடக்கிறான். அதனால் தான் சொன்னேன், தேசியம் என்கிற சித்தாந்தமே அடிப்படையில் எங்கோ பழுதுபட்டிருக்கிறது.
தேசத்தை ஆரத்தழுவ மலையாளிகளை செலுத்தும் காரணமும், வங்காளிகள் அல்லது தெலுங்குக்காரர்கள் அல்லது மராத்தியர்ககளை செலுத்தும் காரணமும் ஒன்றானதல்ல. ஒவ்வொரு துணைதேசத்தின் கனவும் வெவ்வேறானது. இப்போது இந்த தனித்தனி ஆசைகள் எழுச்சி கொள்கின்றன. அது தான் மாபெரும் இந்திய ஆழ்மனம். ஆனால் அதை கண்காணிக்க சிக்மண்ட் ஃப்ராய்ட் நம்மிடம் இல்லை; மூளையற்ற துணை ராணுவப்படைகள் மட்டுமே. காந்தியை சபியுங்கள - தாய் நாட்டிற்காகவும், நம்முடைய தாயைப்புணரும் இச்சைக்காகவும். அவரே அதன் முதல் பலியும் கூட.
############
நன்றி:
இதை மொழிபெயர்க்கத்தூண்டிய எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கும், நேர்காணலின் கடைசி வாக்கியத்துக்கும்.
(தொடரும்)

Comments
great work.
what about the next pages ?
Will do it soon..
சரியான விளக்கங்கள் கீழே-
That we won freedom from the British doesn't mean a damn thing to me. = இங்கிலாந்நிடமிருந்து சுதந்திரம் பெற்றதைப்பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.
I am not beholden to these traditions for any day.
= நான் ஒரு நாளும் இந்தப் பாரம்பரியங்களுக்குக் கடமைப்பட்டவன் அல்ல.
Was he, in true Indian tradition, just a godman who adventured into politics and messed it up us usual?
= இந்தியாவில் வழக்கமாக நடப்பது போல அரசியலைக் குழப்பிய ஒரு சாமியார்தானா அவரும்?
the illusion of a grand and single self = தானே எல்லாமும் என்கிற மாயை.
So he dreamt of a nation partly because there was no nation
= அவர் தேசத்தைப் பற்றிக் கனவு காண ஒரு காரணம் தேசமே அப்பொழுது இருக்கவில்லை என்பது.
we have been a subject people for a long time
= நாம் பல காலமாக ஆளப்படுகிற பிரஜைகளாகவே இருந்துவந்துள்ளோம்.
Now these individual desires are stirring.
= இப்போது இந்த வெவ்வேறு அபிலாஷைகள் விழித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளன.
Only the mindless paramilitary forces.
=கண்மண் தெரியாத துணைராணுவப்படைகள் மட்டுமே.
Blame Gandhi for Mother India and our Oedipus complex.
= பாரதத் தாய்க்காகவும் நமது ஈடிபஸ் காம்ப்ளக்ஸிற்காகவும் காந்திமீதுதான் பழி போட வேண்டும்.
லிஃப்கோ டிக்ஷ்னரி படித்தெல்லாம் மொழி பெயர்க்காதீங்க.
உங்களுடைய கருத்துக்களில் godman, grand and single, subject, Oedipus complex போன்றவற்றை வலுவாக நிராகரிக்கிறேன். அவற்றை நான் திட்டமிட்டே அல்லது தெரிந்தே அவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறேன். அவை எனக்குத் தவறாகத் தோன்றவில்லை.
அவற்றைத் தவிர மற்றவற்றை ஏற்கிறேன். அவை பாதி என் கவனப்பிசகாலும், மீதி என் அறியாமையினாலும் நேர்ந்தவை. அவை என் பொறுப்பை இன்னும் தீவிரமாய் எனக்கு உணர்த்துகின்றன. எதிர்காலத்தில் இது போல் நிகழாதிருக்க நிச்சயம் முயற்சிப்பேன்.
உங்கள் பின்னூட்டத்தின் மொழிநடையில் ஓர் அகங்காரத்தொனியும், தீர்ப்பு சொல்லும் நாட்டாமைத்தனமும் தென்பட்டாலும், அதை நான் ஒரு விமர்சகனின் கறார்த்தனம் என்றே எடுத்துக்கொள்கிறேன்.
சினேகபாவம் என்று ஒன்று உண்டு. பொழிபெயர்ப்பை விட எளிமையானது. அதைக் கற்றுக் கொள்ள உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.
தவறுகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அப்புறம், நீங்கள் குறிப்பிட்ட லிஃப்கோ டிக்ஷ்னரி என்னிடம் இல்லை; ஒன்று வாங்கி அனுப்பினால் மேலும் நன்றியுடையவனாவேன். ;)
தமிழ்நாடன் மீண்டும் என்னை மன்னிக்கவும்.
godman என்ற இந்திய ஆங்கில வார்த்தைக்கு சாமியார் என்றுதான் பொருள். இந்தியப் பத்திரிகைகள் உருவாக்கிய சொல் அது. ("Godman arrested for cheating")
Subject என்றால் முடியாட்சியின் கீழ் ஆளப்படும் பிரஜைகள் என்று அர்த்தம். `செயப்படு பொருள்` என்று இங்கு பொருள் அல்ல.
grand and single self என்பது `அகம் பிரம்மாஸ்மி` தான்.
எல்லாவற்றுக்கும் மேல், கடைசிவரியை மிகவும் சிதைத்துள்ளீர்கள். பேட்டி முழுவதும் தேசியம் என்ற கருத்தை நிராகரிக்கும் சக்கரியா `பாரதத் தாய்` மற்றும் நாட்டுப் பற்று ஆகிய விஷயங்களை இங்கு கிண்டல் செய்கிறார். Oedipus complex என்பதை இங்கு தாய்நாட்டுப் பற்று என்றே மொழிபெயர்க்க வேண்டும். எள்ளலை அப்படியே விடுவதற்காக ஆங்கில வார்த்தையையே அப்படியே உபயோகித்தேன்.
messing up = சொதப்புதல்; சீர்குலைவு அல்ல.
நீங்கள் பாவிப்பது எந்த அகரமுதலியானாலும் சரி - அதை மாற்றுங்கள்!
சினேகபாவம் பற்றி பதில் சொல்லி விவாதத்தை திசை திருப்ப விரும்பவில்லை :-)
எழுதுவதை விட துக்ககரமானது அதற்கு விளக்கமளிப்பது.
இப்பொழுதும் அந்த usages எனக்கு justified ஆகத் தோன்றுகின்றன.
அதனால் மாற்றுவதாய் உத்தேசமில்லை.
நன்றி.
எனக்கு ஆங்கிலக் கட்டுரையைப் படித்து விளங்குமளவுக்கு மொழியறிவில்லை. ஆனால் தங்கள் மொழிமாற்றம் மூலம் எழுத்தாளர் சொல்லவந்ததைப் புரிந்தேன்.
நன்றி!
நிற்க...சரவணனின் விமர்சனமும் அதை நீங்கள் எதிர்கொண்ட பாங்கும் என்னை மிகக் கவர்ந்தது.
நேற்று இரவு விமர்சனங்களை எதிர் கொள்வது எப்படி என்பது பற்றிப் படித்தேன். அதை நீங்கள்
அச்சொட்டாகப் பின்பற்றியுள்ளீர்கள்.
ஆங்கில மேதாவித்தனம் மிக்கவர் எனத் தன்னைக் கருதும் சரவணன், தன் விமர்சனத்தில் ஆங்கிலேயரின்
விமர்சனப் பண்பைக் கைவிட்டு "கருணாநிதி- ஜெயலலிதா " பாணித் ... "சோ" த்தனத்துடன் (மற்றவரை மட்டம் தட்டி மகிழ்தல்) விமர்சித்ததை ;நாகரீகமாகக் கையாண்டுள்ளீர் ; பாராட்டுக்கள்- தொடரவும்.
நன்று சொன்னீர்.
பதிவெழுதும் பலர் புரியவேண்டியது...
சரவணின் திருத்தங்கள் நேரடியானவை. எல்லா இடத்திலும் "என்னுடைய தாழ்மையான கருத்து" போன்ற போலித்தனமான பணிவு பசப்புகளுக்கு பழகி விட்டவர்கள் இப்படித்தான் எதிர்வினையாற்றுவார்கள்.
"சினேகபாவம்" பற்றி சவடால் அடிக்கும் CSK பொது சபையில் அது பற்றிப் பேசியிருக்க வேண்டியதில்லை. மின்னஞ்சல் மூலம் அக்கருத்தை தெரிவித்திருக்கலாம். அதை விடுத்து இப்படி, "அதெல்லாம் இருக்கட்டும், நி மொதல்ல சட்டைய அயன் பண்ணு" என்று சம்மந்தம் இல்லாமல் உலரும் சிறார்கள் போல பினாத்தியுள்ளார். அதைபார்த்து மற்ற சிறார்கள் "மச்சி கலாசிட்ட போ" என்று கை தட்டுகிறார்கள்.
சரவணின் திருத்தங்களை முழுதும் வழிமொழிகிறேன்.
subject'கு CSK கொடுத்துள்ள தமிழ் வார்த்தையைப் பார்க்கும்போது, என் எழுத்துப் பிழைகளைக் கண்டு காதைத் திருகிய தமிழ் "ஐயா" நினைவுக்கு வருகிறார்.
இரவில் ஒரு பெண் தெருவில் தனியாய் நடப்பதைக் குறிக்கிறது; உங்கள் குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் சுதந்திரத்தைக் குறிக்கிறது >>)
அந்த பேட்டி உங்களைக் கவர்ந்தது ஆச்சரியமே. சுதந்திரம், தஙகமும் நீதியும் வழிந்து ஓடும் எல் டொராடோ அல்ல. உண்மையில், சுதந்திரம் என்பது என்ன என்பதை நாம் வெவ்வேறு விதமாகப் புரிந்து வைத்திருக்கிறோம். ”என் ஃபிரண்ட் அவன்; எங்க வீட்டில் அவனுக்கு முழுச் சுதந்திரம்...” என்றால் என்ன அர்த்தம்? உங்க ஃபிரண்ட் தன் பொறுப்பைத் தானாக உணர்ந்து நடந்துகொள்வார் என்பதே. நடு வீட்டில் யாரும் பார்க்காத நேரம் அசிங்கம் செய்வார் என்றோ, நடுநிசியில் சத்தம் செய்யலாம் என்றோ பொருள் அல்ல. ”சுதந்திரம்” ”பொறுப்பற்ற தன்மை” இரண்டையும் ஸக்காரியா குழப்பியுள்ளார். கருத்துரிமையை நம் எழுத்தாளர்கள் பலர் புரிந்து வைத்திருப்பதும் இப்படியே. (சைனாவில் இருக்கும் தன் வாசகருக்கு சா.நி. பதில் எழுதி, அதை வலையிலும் போடுகிறார்-”சைனா பெண்களுக்கு யோனி சிறியதாக இருக்குமாமே?" என்று! கருத்துச் சுதந்திரத்தை அவர் புரிந்தது அவ்வளவு தான்!)
ஸக்காரியாவின் கருத்தில் சுதந்திர நாடு என்பது எது?
பெண் இரவில் தனியாக நடப்பது ஜப்பானில் மட்டுமே சாத்தியம். வறுமையின் முடிவுக்கு அமெரிக்காவைக் காட்டலாம் என்றாம் அங்கே Homeless நினைவுக்கு வருகிறார்கள். நீதிக்கும் அமெரிக்காவே உதாரணம்; ஆனால் பணமிருந்து திறைமையான வக்கீல் கிடைத்தால் சாட்சியங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் நீதியை வளைக்க முடியும். (உ.ம்-ஓ.ஜே. சிம்ஸன்). இலவசக் கல்வி -குறைந்த பட்சம் 16 வயது வரை- இருப்பது உண்மைதான் -ஆனால் ironically அது “கட்டாயக் கல்வி”யாக அல்லவா இருக்கிறது?
ஸக்காரியாவின் ‘சுதந்திர நாடு” எங்கும் இல்லை. இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை. Perfect World பற்றிய ஒரு கனவு மட்டுமே அது. அது நிகழ்ந்தால் கடவுளுக்கு இங்கே இடமில்லை.
"செயப்படுபொருள்" என மொழியாக்கியது அதன் பிரயோகம் பற்றி நன்கு அறிந்தே. இந்தியர்கள் செய்பவராக (ஆள்பவர்களாக) இல்லாமல், செய்யப்படுவராக (அடிமைகளாக) இருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகக் குறிக்கவே அந்தப்பதத்தை எடுத்தாண்டேன். அதனால் தான் சரவணனின் அதைப்பற்றிய கருத்தை நிராகரித்தேன் (கவனிக்கவும் - அவர் சொன்னதைத் தவறென்று சொல்லவில்லை; என் வார்த்தை அதைக்காட்டிலும் வீரியமாய் இருப்பதாய் நினைத்ததால் அதை மாற்றவில்லை. மற்ற நிராகரிப்புகளுக்கும் இதே கதை தான். இதைக்கூட புரிந்து கொள்ளாமல் அவர் மீண்டும் வலியுருத்தியதால் தான் "எழுதுவதை விட துக்ககரமானது அதற்கு விளக்கமளிப்பது" என்று குறிப்பிட்டேன்.)
//சரவணின் திருத்தங்களை CSK கையாண்டதும் அது பற்றி பிறர் சிலாகிப்பதும் வேடிக்கையாக இருக்கின்றன.//
எனக்கும் அப்படியே. அது பற்றி வயிறெரிவதும் அப்படியே.
//"என்னுடைய தாழ்மையான கருத்து" போன்ற போலித்தனமான பணிவு//
அது போலித்தனமான பணிவு அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
//அதைபார்த்து மற்ற சிறார்கள் "மச்சி கலாசிட்ட போ" என்று கை தட்டுகிறார்கள்.//
"மச்சி கலாசிட்ட போ".
//"சினேகபாவம்" பற்றி சவடால் அடிக்கும் CSK பொது சபையில் அது பற்றிப் பேசியிருக்க வேண்டியதில்லை. மின்னஞ்சல் மூலம் அக்கருத்தை தெரிவித்திருக்கலாம்.//
சரவணன் எனக்கு மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவித்திருந்தால், நானும் அவ்வழியே விடை பகன்றிருப்பேன். அவர் பின்னூட்டமெனும் பொதுதளத்தில் விமர்சனத்தை முன்வைத்ததால், நானும் அங்கேயே பதில் சொல்ல வேண்டியதாயிற்று. இப்போது உங்களுக்கும் அப்படியே. தெருவில் வைத்து அடிப்பவனிடம், அவனுடைய வீட்டுக்குப் போய் தனிமையில் திருப்பியடிப்பது நியாயமில்லை. அங்கேயே கணக்கு தீர்த்துத் தான் எனக்கு பழக்கம்.
//subject'கு CSK கொடுத்துள்ள தமிழ் வார்த்தையைப் பார்க்கும்போது, என் எழுத்துப் பிழைகளைக் கண்டு காதைத் திருகிய தமிழ் "ஐயா" நினைவுக்கு வருகிறார்.//
என் பொருட்டு, உங்களுக்கு உங்கள் தமிழ் "ஐயா" நினைவுக்கு வருந்தால் சந்தோஷமே. துரதிர்ஷ்டவசமாய், நான் பள்ளிக்கூட தினங்களில் முதல் ரேங்க் மாணவன் (குறிப்பாய்த் தமிழில்) என்பதால் எனக்கு அது போன்ற அனுபவங்கள் சுத்தமாய் இல்லை. அதனால் தான் போலி விமர்சனம் செய்யாமல் மெனக்கெட்டு அவைகளுக்கும் இது போல் பதிலெழுதிக் கொண்டிருக்கிறேன் (இதில் சரவணன் மட்டும் விதிவிலக்கு. அவர் சொன்ன விமர்சனங்கள் சில நான் ஏற்றுக்கொள்ளவில்லையெனினும் எல்லாமே அவரளவுக்காவது நியாயமானவையே. அதனால் தான் என் தவறை ஒத்துக்கொண்டு பதிவைப் பல இடங்களில் திருத்தினேன் அவருடையதை வெறும் விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல் value-addition என்றே எடுத்துக்கொள்கிறேன். அவருடைய வெளிப்பாடு சரியில்லை என்பது தான் பிரச்சனை).
இதற்காக மீண்டும் கண்ணை கசக்கிக்கொண்டு ஒரு பின்னூட்டம் வேண்டாம்.
;)
அடிப்படையில் நான் கோயமுத்தூர்க்காரன். யாரையாவது கோபத்தில் சாபமிடும் போது கூட "நாசமாப் போங்க!" என்று மரியாதையாய் சொல்வது தான் எங்களூர் வழக்கம்.
அப்படித்தான் நானும் இங்கே இதுவரை பேசியிருப்பதாய் நினைக்கிறேன்.
//சக்கரியாவிடமும் பேட்டியாளரிடமும் மொழிமெயர்ப்பைக் காட்டி ஒப்புதல் பெறாத நிலையில் உங்கள் நிலைப்பாடு சக்கரியாவுக்கு இழைக்கும் அநீதியே.//
Perfectly right. ஒத்துக்கொள்கிறேன்.
சக்கரியாவே பல இடங்களில் என் மொழிபெயர்ப்போடு முரண்படக்கூடும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். இதை ஒருவகையில் "How CSK comprehended Zakaria's interview" என்று சொல்வதே சரியானது. எல்லா மொழியாக்கங்களுக்குமே ஓரளவுக்கு இந்த definition செல்லுபடியாகும். அப்படியொன்று தேவையா என்பது தனி விவாததிற்குரியது.
இது சக்கரியா நேர்காணலின் official மொழியாக்கம் கிடையாது என்பதையும் இங்கே கவனிக்கவும். தவிர எனக்கு மொழிபெயர்ப்பதில் எல்லாம் ஆர்வமே இல்லை (போன வாரம் யாராவது என்னிடம் நீ ஒரு ஆங்கில நேர்காணலை மொழிபெயர்க்கப்போகிறாய் என்று சொல்லியிருந்தால், நிச்சயம் வாயால் சிரித்திருக்க மாட்டேன்).
சாரு நிவேதிதா தன் வலைமனையில் குறிப்பிட்டிருந்ததால், அந்த நேர்காணலை படித்துப்பார்க்கும் உத்தேசத்தோடு தான் திறந்தேன். படித்துப்பார்த்தபின் எனக்கும் மிகப் பிடித்திருந்ததால் நாமே மொழிபெயர்த்தால் என்ன என்று தோன்றியது. அதனால் முதல் பகுதியை மட்டும் மொழியாக்கி சாருவுக்கு அனுப்பி வைத்தேன்.
தன் வலைமனையில் இதன் linkஐ வெளியிட்ட சாருவுக்கும், மிக உதவிகரமான திருத்தங்களை முன்வைத்த சரவணனுக்கும் இங்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு வேளை சரவணன் மொழியாக்கியிருந்தால் என்னுடையதை விட சிறப்பான ஒரு versionஐ தந்திருக்கக்கூடும் ஸக்கரியா ஏற்கும் version.
ஆனால் அது என்னுடையதல்ல. கருப்பாய் பிறந்தாலும் என் குழந்தையைத்தான் என்னுடையது என்று சொல்ல முடியும். வெள்ளையாய் இருக்கிறதென்பதற்காக அடுத்தவர் குழந்தையை என்னுடையது என்று சொல்ல முடியாது. தவிர கருப்பு தான் எனக்கும் பிடிக்கும் என்றால் வேறு என்ன பிரச்சனை.
என்னைப்பொறுத்தவரையில், என் முயற்சி எனக்கு முகவும் திருப்தியை அளிக்கிறது. ஒரே பிரச்சனை, மொழிபெயர்க்கும் போதும் எனக்குள்ளிருக்கும் எழுத்தாளன் அவ்வப்போது விழித்துக்கொண்டு வாலாட்டுகிறான். என்ன செய்ய? தொட்டில் பழக்கம்.
அடேங்...கப்பா! இந்த நெட் தான் எத்தனை பேரை வீரராக்குகிறது! (வாய்ச் சொல்லில் வீரராக). சும்மா லுங்கியை மடிச்சுக் கட்டுகிறவனைக் கண்டாலே பயந்து ரோட்டில் எதிர்பக்கத்தில் ஒதுங்குகிறவர்களெல்லாம் PC முன் உட்கார்ந்ததும் விருமாண்டிகளாகி விடுகிறார்கள். "தனிமையில் போய் அடித்துப் பழக்கமில்லை"யாம். முதல் ராங்க் எடுத்தும் மொழிபெயர்ப்பில் கோட்டை விட்டு “எனக்கு கருப்பு தான் பிடிக்கும்” என்று வியாக்கியானம் பேசுபவரே -எங்கள் ஊரில் என்ன செய்வோம் என்பதையும் கேளும் -ஒரு லெவலுக்கு மேல் எங்களுக்கு வாய் பேசுவதில்லை! சாநி யின் ரசிகரென்றதுமே எனக்குத் தெரிந்திருக்க வேண்டும், உங்கள் தரம் என்ன என்பது.
//எங்கள் ஊரில் என்ன செய்வோம் என்பதையும் கேளும் -ஒரு லெவலுக்கு மேல் எங்களுக்கு வாய் பேசுவதில்லை!//
அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறது!
பிற துவாரங்கள் வழி பேசினால் சரியாய் வராதே!
அது சரி, எந்த ஊர் அது?
//தேசியம் என்கிற சித்தாந்தமே அடிப்படையில் எங்கோ பழுதுபட்டிருக்கிறது.//
தேசியம் என்பது அடிப்படையில் எங்கோ பிழையுற்றதாக இருக்கிறது.
அல்லது
தேசியம் என்பது அடிப்படையிலேயே எங்கோ குறைபாடுள்ளதாக இருக்கிறது.
போன வாரம் யாராவது என்னிடம் நீ ஒரு ஆங்கில நேர்காணலை மொழிபெயர்க்கப்போகிறாய் என்று சொல்லியிருந்தால், நிச்சயம் வாயால் சிரித்திருக்க மாட்டேன்).
--இன்று உங்கள் எழுத்து--
பிற துவாரங்கள் வழி பேசினால் சரியாய் வராதே!
--இப்போதைய என் பதில்-
சரியாக வருதா இல்லையா என்பதை எங்க ஊர் - தென்காசி பக்கம் வந்து பார்த்துக்கொள்ளலாம்! அந்த துவாரத்தின் மூலம் உங்களுக்கு சிரிக்கத்தெரியும் போது, எங்களுக்குப் பேசத் தெரியாதா..?ம்..?