உங்க வீட்டுப் பொண்ணு
சென்ற பொங்கல் தினத்தன்று விஜய் டிவியில் சிவகார்த்திகேயனை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். அதில் சில சங்கடத்துக்குரிய விஷயங்கள் இடம் பெற்றன (குறைந்தபட்சம் என்னளவில்). கல்லூரிப் பெண்கள் சிலர் அவரது ரசிகைகள் எனக் காட்டப்பட்டு மேடையிலேயே குறும்புத்தனம் என்ற பெயரில் சில ஆபாசங்களில் ஈடுபட்டார்கள் (மறுபடி என்னளவில் தான்). அதன் காணொளிகளை இங்கே பார்க்கலாம் (விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் ஏற்றப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் காணொளி யில் இந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன): http://www.dailymotion.com/video/x19n58l_engaveettu-4_shortfilms (07:00 to end) http://www.dailymotion.com/video/x19n5qh_engaveettu-5_fun (start to 04:00) ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு பொங்கல் ஊட்டி விட்டு தனக்கும் அவரை ஊட்டி விடச் செய்கிறார். ஒருவர் சிவகார்த்திகேயனின் கன்னத்தைக் கிள்ளி விட்டு தன் கன்னத்தையும் அவரைக் கிள்ள வைக்கிறார். ஒருவர் லிஃப்ட்டுக்குள் தீபிகா படுகோனுடன் மாட்டுக் கொண்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கிறார். ஒருவர் அவர் தன்னைக் கையில் தூக்கிக...
Comments