ஞாநி, THE CO-TRAVELLER

"என் தனி இணைய தளமான www.gnani.net காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 வியாழன் மாலை இந்திய நேரம் 7 மணி முதல் இயங்கத்தொடங்கும் என்பதை உங்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று எழுத்தாளர் ஞாநியிடமிருந்து நேற்று மின்‍-அஞ்சல் வந்த போது மிகுந்த‌ சந்தோஷமாக இருந்தது.

ஞாநியை நான் சமகால அரசியல் மற்றும் கலை உலகின் நம்பத்தகுந்த ஒரு நடு நிலைமை விமர்சகராகவே முன்வைக்கிறேன். கருத்துக்களிலும், நிலைப்பாடுகளிலும் அவருக்கும் எனக்கும் பல வேற்றுமைகள் இருந்தாலும், ஆரோக்கியமான நடுநிலை விமர்சனம் என்ற சமகால அகிம்சைப்போர்முனையில் யாம் ஒன்றுபடுகிறோம்.

ஞாநி ‍ ஓ பக்கங்களில் தான் எனக்கு முழுமையான‌ அறிமுகம். அதற்கு முன் அந்த பெயரில் ஒரு கலகக்காரர் இருக்கிறார் என்ற அளவில் என் கல்லூரி நாட்களில் பரிச்சயம் (சென்னை புத்தக கண்காட்சியில் கூட "தீம்தரிகிட" அரங்கின் பக்கம் எட்டிப்பார்த்ததில்லை) . நிகழ்ந்த தாமதத்திற்கு வருந்தாமல் இப்போதாவது நிகழ்ந்ததே என ஆறுதல் கொள்கிறேன்.

ஞாநியும் தனக்கென ஒரு தனி இணைய தளம் தொடங்க இத்தனை தாமதம் ஆனதை பற்றி இதே தான் எண்ணுவார் என நம்புகிறேன் (தமிழகத்தில் நட்சத்திர எழுத்தாளர்கள் முதல் தேங்காய் மூடி எழுத்தாளர்கள் வரை தனி இணைய தளம் - ‍குறைந்தபட்சம் வலைப்பூ வைத்திருக்கிறார்கள். எனவே ஞாநி Last but not the least ரகம்) .

இணைய தளம் இன்று இரவு இந்திய நேரம் 8.30 மணிக்கு இயங்கத் தொடங்கியிருக்கிறது. முதல் பார்வையில் என்னை ஈர்த்தவை: Homeக்கு "திண்ணை" என்ற வித்தியாசமான த‌மிழ் படுத்தல், அழகான‌ தளத்தின் design (தமிழில் இவ்வளவு நேர்த்தியான இணைய தள வடிவமைப்பை இப்போது தான் பார்க்கிறேன்), மற்றும் User Registration (பதிந்தால் தான் "நான் யார்" என்ற ஞாநியைப்பற்றிய சுயபதிவைக்கூட படிக்க முடிகிறது ‍ -
ஏன் அப்படி ஒரு Constraint?).

அப்புறம் "தீம்தரிகிட", "மனிதன் பதில்கள்",
49-O பற்றி "ஓ போடு" , "பரீக்‌ஷா நாடகக் குழு", குமுதத்தில் வந்த கடைசி வார "ஓ பக்கங்கள்", மறக்காமல் "ஏன் நான் கலைஞர் கருணாநிதியை எதிர்க்கிறேன் ?" என்ற இந்தியா டுடே கட்டுரை என்று வழக்கமான ஞாநி brand items. "நானாவதி கமிஷனின் அறிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று ஓட்டு பெட்டியும் தூக்கியாயிற்று.

குறிபிடத்தகுந்த ம‌ற்றுமொரு விஷயம் தள முகப்பில் அவர் குறிப்பிடிருக்கும் ஒரு வரி - "என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை. ஏற்பு குறித்த மகிழ்ச்சி, நிராகரிப்பு பற்றிய வருத்தம் ஆகிய மன நிலைகளை இப்போது நான் கடந்து விட்டேன். பகிர்தல் மட்டுமே என் இன்றைய மனநிலை."

கடைபிடிப்பது கடினமென்றாலும், கிட்டதட்ட இதே முடிவுடன் தான்
நானும் எழுத ஆரம்பித்தேன். அவ்வகையில் எனக்கு வழிகாட்டும் ஒரு சக பயணியாகவே ஞாநியைக் கருதுகிறேன். அவரும் அவ்வாறே நினைக்கிறார் என நம்புகிறேன் (என் பிறந்த நாளின் போது கூட "மேலும் வளம், மேலும் மகிழ்ச்சி , மேலும் அமைதி, மேலும் படைப்பாற்றல் பெருகிட வாழ்த்துகள்" என்று தான் வாழ்த்தியிருந்தார்).

"ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்
" என்று தொடங்கியிருக்கிறார். வாழ்த்தி, வணங்கி, வரவேற்கிறேன்.

Comments

Minnerinchaveli said…
like meny others gani too has a style of writing and thinking and specially the way he see / and his obsevation is like james joys,
vallarasu sweden
SENTHILKUMARAN said…
தலைவா...ஞாநி,சாரு எல்லாம் "சுப்பிரமணியசாமி" மாதிரி! இவங்க எல்லாம் இல்லைனா சுவாரசியமாவே இருக்காது...தவிர, இவங்க பேசறத சீரியஸா எடுத்துக்கிட்டா அதை விட காமெடி வேற இருக்காது.கரெக்டா...?
SENTHILKUMARAN said…
ஞானிக்கு கமலையும் பிடிக்காது இளையராஜாவையும் பிடிக்காது. இவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதே இவருக்கு முழுநேர தொழில். பொதுவாக இவருக்கும் சாருவுக்கும் ஒத்து வராது. ஆனால் இவர்கள் இருவரையும் எதிர்ப்பதில் ஒற்றுமையானவர்கள்

இவர்களை எதிர்பதின் மூலம் பிரபலம் தேடுகின்றார்கள்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி