கசக்கும் சர்க்கரை
எவ்வளவு மோசமாய் இருந்தாலும் எந்தப் படத்தையும் விமர்சிக்க "குப்பை" என்ற பதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற என் கொள்கையை வெற்றிகரமாய் உடைத்ததற்காய் அமெரிக்காவில் திரைப்படப்படிப்பு முடித்து தமிழ் திரைப்பட உலகின் மேல் கடைக்கண் பார்வை காட்டியிருக்கும் கன்னி இயக்குநர் கலாபிரபுவுக்கு முதல் சக்கரகட்டி.
எத்தனை மட்டமான இசையென்றாலும் டைட்டில் கார்டில் தன் பெயர் போட்டு விட்டால் போதும், தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்க தங்கத்தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் இருப்பதை தெள்ளத்தெளிவாய்ப் புரிந்து வைத்திருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டாவது சக்கரகட்டி.
சொந்த மகனுக்காக மனைவியின் தாலி உட்பட மொத்த சொத்தையும் பணயம் வைத்து சினிமா எடுத்து நடுத்தெருவுக்கு வந்து விட்ட பாசமிகு தயாரிப்பாளர்கள் வரிசையில் மிக விரைவில் சேரவிருக்கும் ஆளவந்தான், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க போன்ற படங்களின் தயாரிப்பளர் கலைப்புலி S.தாணுவுக்கு மூன்றாவது சக்கரகட்டி.
படத்தின் கதையால்(?!) மிகவும் ஈர்க்கப்பட்டு, கதாநாயகன் சாந்தனுவுக்கு அறிமுகப்படமாய் அமைய வழி செய்து, கொஞ்சமாவது நன்றாக வந்திருக்க வேண்டிய தன் மகனை படுகுழியில் தள்ளி விட்டிருக்கும், ஒரு காலத்தில் இந்தியாவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் என்று பெயர் எடுத்த பாக்யராஜுக்கு நான்காவது சக்கரகட்டி.
காதல், திரைக்கதை, நடிப்பு, நகைச்சுவை, ரொமான்ஸ், சுவாரசியம் போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாமல் வெறும் இசை, கவர்ச்சி, கிராஃபிக்ஸ், கான்வென்ட் இங்கிலீஷ், பல கோடி ரூபாய் பட்ஜெட், விளம்பரம் போன்ற அல்பத்தனங்களை மட்டும் நம்பி படம் எடுத்திருக்கும் ஒட்டுமொத்த Cast & Crewவுக்கும் ஐந்தாவது சக்கரகட்டி.
யூத் படமென்றால் நுனி நாக்கு ஆங்கில வசனங்களும், அருவருக்கதக்க ஆபாச நகைச்சுவைகளும், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பாடல்களும், குறைந்தபட்சம் இரண்டு மும்பை இறக்குமதி நடிகைகளும் ஐயந்திரிபற இடம்பெற வேண்டும் என்ற எழுதப்படாத விதியை உருவாக்கி வைத்திருக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ஆறாவது சக்கரகட்டி.
எத்தனையோ இந்திப்படஙளும், ஆங்கிலப்படங்களும் ஓடிக்கொண்டிருக்கும் தறுவாயில், இந்த வாரம் பெங்களூரில் ரிலீசான ஒரே தமிழ் படமான சக்கரக்கட்டிக்கு ஊரிலிருந்து வந்திருக்கும் என் மாமியாரையும், மைத்துனனையும் அழைத்துச் செல்ல பரிசுத்த ஆத்மாவுடன் சிபாரிசு செய்த என் அருமை மனைவிக்கு ஏழாவது சக்கரகட்டி.
தலைக்கு மேல் அலுவலக வேலைகள் கத்தி மாதிரி தொங்கிக் கொண்டிருக்கும் வேளையில் உப்பு பெறாத படத்துக்கு வீடு திரும்பிய சூட்டோடு சூடாய் இந்த நள்ளிரவில் கண் விழித்து விமர்சனம் எழுதி என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கும் writerCSK என்ற நாமகரணம் கொண்ட சாட்சாத் எனக்கு எட்டாவது மற்றும் கடைசி சக்கரகட்டி.
பின்குறிப்புகள்:
1. எல்லாமே Negative ஆக சொல்லி விட்டு, சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் பரிசாக சக்கரகட்டி எதற்கு என்று அப்பாவியாய்க் கேட்கும், சர்க்கரை என்றால் இனிக்கும் ஒரு வஸ்து என்று ஏமாளித்தனமாய் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் இளித்தவாய் தமிழருள் நீங்களும் ஒருவரெனில், மன்னிக்கவும் - இது உங்களுக்கான தளம் அல்ல.
2. தலைக்கு 170 ரூபாய் கொடுத்து குடும்ப சகிதம் அம்பானியின் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு அரசாஙகம் அளிக்கும் தியாகிகளுக்கான பென்ஷன் கிடைக்க வழியுண்டா என சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்கள் மின்-அஞ்சல் மூலம் எனக்கு தெரியப்படுத்தினால் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாவேன்.

Comments
I saw the film in sun tv. it wont hurt much as it did u. The reason
may also that you spent rs.1000. but i browse thro the other channels whenever i feel boring