ஏஐ எனும் சாத்தான்
[முன்குறிப்பு: ஏஐ பற்றி அச்சம் உண்டாக்குவதற்காக இக்கட்டுரையை எழுதவில்லை. அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஊட்டி, அது கொணரப் போகும் சிக்கல்களை எதிர்கொள்ள நமது மனதைத் தயார் செய்து கொள்ளும் பொருட்டே எழுதுகிறேன்.] “The development of full artificial intelligence could spell the end of the human race.” - Stephen Hawking ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு - துல்லியம் போதாததால் நான் ‘செய்யறிவு’ என்ற சொல்லை ஏற்கவில்லை - பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட காலமாகவே எண்ணம் இருந்தும் ‘ஆண்டான்’ உள்ளிட்ட எழுத்துப் பணிகள் காரணமாக அதைச் செய்யவில்லை. இப்படித் தாமதமாகும் விஷயங்கள் என் ToDo List-ல் இருந்து சில காலம் கழித்து எழுதி விடுவேன் - அப்படிச் சிலவற்றை ஓராண்டு கழித்தும் எழுதி இருக்கிறேன். பொதுவாக ஆரம்பத்தில் எழுத நினைத்ததற்கும் காலங்கடந்து பிற்பாடு எழுதுவதற்கும் பெரிதான வித்தியாசங்கள் ஒன்றும் இராது - நவீனத் தொழில்நுட்பம் ஒன்றைப் பற்றிய கட்டுரை என்றாலும் கூட. ஆனால் ஏஐ பற்றி ஆறு மாதம் முன் எழுத நினைத்த கட்டுரை வேறு, மூன்று மாதம் முன் எழுத யோசித்த போது அதன் உள்ளடக்கம் நிறைய மாறி இருந்தது, இன்று எழ...