CSK டயட்: சில சிந்தனைகள்
1) கடந்த ஆண்டு விநாயக சதுர்த்தியன்று ஒரு சின்ன அசம்பாவிதத்துக்குப் பின் உடல் எடை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்வில் நூறாவது முறையாய் மீண்டும் எழுந்தது. முதலில் நடைப் பயிற்சி மட்டும் மேற்கொண்டேன் - உணவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ளவில்லை. அப்போது மிகக் குறைவான பலனே இருந்தது: ஆகஸ்ட் 2020 இறுதி முதல் டிசம்பர் 2020 மத்தி வரை 113 நாட்களில் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொண்டதில் 4 கிலோ எடை குறைந்தது. பிறகுதான் அதோடு உணவுக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்தேன். ஒப்பீட்டளவில் துரித முன்னேற்றம்: டிசம்பர் 2020 மத்தி முதல் ஏப்ரல் 2021 துவக்கம் வரை 112 நாட்களில் நடையோடு டயட்டும் இருந்ததில் 7 கிலோவுக்கு மேல் எடை குறைந்தது. ஆக, மொத்தமாய்ப் பார்த்தால் ஏழரை மாதங்களில் 11 கிலோ எடை குறைந்திருக்கிறது. 2) என்னிடம் எடை எவ்வளவு குறைந்தது என விசாரித்த அனைவரும் அடுத்துச் சொன்னது அந்த உணவு முறையைப் பின்பற்றினால் இன்னும் வேகமாகக் குறையும், இந்த டயட்டை எடுத்தால் இன்னும் சீக்கிரம் குறைக்கலாம் என்கிற யோசனைகளே. ஆம், மிகச் சரி. எனது டயட் முறையைக் காட்டிலும் வீரியமான எடை குறைப்பு உணவு முறைகள் பல உண்டுதான். ஆனால்