Pen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்

(1)

சில தொழில்நுட்பக் காரணங்களால் போட்டிக்கு வந்துள்ள‌ படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாகச் சரிவரப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும்.

ஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்த்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக‌ மிக மிகக் குறைவு.

உண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்து விடுங்கள்.) அதனால் பட்டியலில் படைப்பு இன்னும் வராத போட்டியாளர்கள் எவ்வகையிலும் கவலையுற வேண்டியதில்லை. ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்கலாம்.

(2)

பாலியல்தன்மை அதிகம் கொண்ட படைப்புகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. படைப்பு அப்படியான அளவு பாலியல்தன்மை கொண்டதா இல்லையா என்பதையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இதைப் போட்டியின் விதிமுறைகளில் கொட்டை எழுத்துக்களில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள் (https://www.amazon.in/l/15883392031).

"SPONSOR RESERVES THE RIGHT IN ITS SOLE AND UNFETTERED DISCRETION TO DISQUALIFY AT ANY TIME ANY ENTRY CONTAINING OBSCENE, OFFENSIVE, PORNOGRAPHIC OR SEXUALLY EXPLICIT MATERIAL, OR LIBELOUS, DISPARAGING, INFRINGING OR OTHER INAPPROPRIATE CONTENT OR SUBJECT MATTER (AS DETERMINED BY SPONSOR IN ITS SOLE DISCRETION)."

(3)

படைப்புக்கான அமேஸான் பக்கத்தில் கமெண்ட் (Customer Reviews எனப் பாடம்) தமிழில் போட முடியவில்லை என்ற வருத்தம் பல வாசகர்களுக்கு (அதனால் படைப்பாளிகளுக்கும்) இருக்கிறது. அமேஸானில் கமெண்ட்களின் உள்ளடக்கம் தகுதியற்றதாக (உதா: ஆபாசம், தனிபட்ட தாக்குதல், பொய்கள், சட்டத்துக்குப் புறம்பானவை, விளம்பரங்கள், உள்நோக்குடையவை, பொருளுக்கு நெருங்கியவர்கள் அல்லது எதிரிகளின் கமெண்ட் முதலியன) இருக்கலாகாது என உறுதி செய்ய விரும்புகிறார்கள் என்பதால் அவை மென்பொருள் நிரல்கள் மூலம் மட்டுறுத்தப்படுகின்றன. இப்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே அதைச் செய்கிறார்கள் என்பதால் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் கமெண்ட் செய்ய அனுமதிப்பதில்லை. இது மின்னூல்களுக்கு மட்டுமானதல்ல; அமேஸானில் எல்லாப் பொருட்களுக்கும் இதே தான் நிலை. எதிர்காலத்தில் இது பிராந்திய மொழிகளுக்கும் விரிவாக்கப்படக்கூடும். அதுவரை வாசகர்கள் ஆங்கிலத்தில் மட்டும் தான் கமெண்ட் செய்ய முடியும்.

(4)

அமேஸானில் மின்னூல் உள்ளிட்ட எந்தப் பொருளுக்கும் எல்லோரும் கமெண்ட் எழுதி விட முடியாது. அதற்குச் சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறார்கள். உங்கள் அமேஸான் கணக்கில் கடந்த ஓராண்டில் குறைந்தபட்சம் ரூ.1500க்கு பொருட்கள் வாங்கி இருக்க வேண்டும் (கூப்பன், ப்ரோமோ கோட் போன்றவை பயன்படுத்தாமல்). அப்படியான கணக்கிலிருந்து மட்டும் தான் கமெண்ட் இட முடியும். போலவே ஸ்டார் ரேட்டிங் தருவதும் நேரடியாகக் கூட்டி சராசரியைக் காட்டுவதில்லை. அதற்கென மெஷின் லேர்னிங் முறைகளின் படி கணக்கிடப்படும் (சமீபத்திய ரேட்டிங்கிற்குக் கூடுதல் மதிப்பு, நிஜமாகவே அமேஸானில் அப்பொருளை வாங்கியவர் எழுதியிருந்தால் கூடுதல் மதிப்பு, ரேட்டிங்கின் அசல்தன்மையை முன்னிட்டு எனப் பலப்பல உள்ளீடுகளின் அடிப்படையில்).

*

Comments

Anonymous said…
படைப்பு என்ற வார்த்தை எனக்கு
பிடிக்கவில்லை. உங்களுக்கு அந்த வார்த்தை நன்றாகவா உள்ளது? எழுத்தை என்ற வார்த்தையை நீங்கள் யூஸ் செய்யலாமே.....

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்