Posts

Showing posts from October, 2019

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

தமிழ் எழுத்தாள நண்பர்களுக்கு, வணக்கம். அமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம். அதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏத...

புத்தம் புதுமைப் பெண்

Image
சுதந்திரமென்பது புணர்தலல்ல; புணர மறுத்தல். ‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல...