Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்
அமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்: 1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்? எத்தனை வேண்டுமானாலும். 2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா? தாரளமாய்க் கலந்து கொள்ளலாம். 3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா? இல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும். 4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா? சில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். 5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி? தமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043016031 தமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043019031 மும்மொழிகளிலும் இரு ...