எரிநட்சத்திரம்
18ம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் ஃப்ரெஞ்சு ராணுவத் தலைவர் நெப்போலியன் இந்தியாவில் ப்ரிட்டிஷ் பிடித்து வைத்திருக்கும் பகுதிகளைக் கைபற்றும் திட்டத்தை வகுத்தார். ஆங்கில எதிர்ப்பின் காரணமாக தந்தையைப் போலவே திப்பு சுல்தானும் ப்ரெஞ்ச் ஆதரவாளர். இக்கணக்கீடுகள் நான்காம் மைசூர் போருக்கு இட்டுச் சென்றன. உலகின் இரு பெரும் போர் வீரர்களின் தலைவிதி அந்தப் போரில் கிறுக்கப்பட்டது. திப்பு சுல்தானுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் இடையே நான்காம் மற்றும் கடைசி மைசூர் போர் உச்சமாய் நடந்து கொண்டிருந்த சமயம். ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிடும் நோக்கில் ப்ரிட்டிஷ் துருப்புக்கள் முன்னேறிக் கொண்டிருந்தன. ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டைக்கு 1.6 கிமீ முன்பாக மரங்கள் அடர்ந்த சுல்தான்பேட்டை தோப்பு அமைந்திருந்தது. அங்கே திப்பு சுல்தானின் படை ஒன்று முகாமிட்டிருந்தது. கம்பெனியின் படை ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிட இவர்களை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி தலைமையிலான ஒரு படையை அந்தக் காரியத்தை முடிக்க அனுப்பி வைத்தார்கள். 5 ஏப்ரல் 1799 அன்று இரவு தன் படையினருடன் தோப்புக்குள் நுழைந்...