என் புத்தகங்கள்: IAQs
அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது நான் எதிர்கொள்ளும் கேள்விகள் இவை. IAQs - Infrequently Asked Questions! 1) நீங்கள் புத்தகம் ஏதும் எழுதி இருக்கிறீர்களா? 2) உங்கள் புத்தகங்களை எங்கே, எப்படி வாங்கலாம்? 3) உங்கள் நூல்களை ஆன்லைனில் வாங்க முடியுமா? 4) உங்கள் நூல்கள் மின்னூல்களாகக் கிடைக்கின்றனவா? 5) உங்கள் புத்தக பிடிஎஃப் எங்கே டவுன்லோட் செய்யலாம்? அவ்வப்போது பதில் சொல்லியும் வந்திருக்கிறேன். வாசகர்கள் மற்றும் என் வசதிக்காக இங்கு தொகுத்துக் கொள்ளலாம். 1) நீங்கள் புத்தகம் ஏதும் எழுதி இருக்கிறீர்களா? துரதிர்ஷ்டவசமாக, ஆம். ஒரு நடிகரிடமோ ஓர் இயக்குநரிடமோ போய் ஏதும் படம் செய்திருக்கிறாயா? என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் ஓர் எழுத்தாளனிடம் மிக எளிதாக என்ன எழுதியிருக்கிறாய் எனக் கேட்டு விட முடியும். மொத்தம் என் 9 நூல்கள் அச்சில் வந்திருக்கின்றன. ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுதி, இரண்டு கவிதைத் தொகுதிகள், ஒரு கட்டுரைத் தொகுதி, நான்கு அபுனைவு நூல்கள். உயிர்மை, கிழக்கு, சூரியன், சிக்ஸ்த் சென்ஸ், கற்பகம் புத்தகாலயம், அம்ருதா, அகநாழிகை என வெவ்வேறு பதிப்பகங்கள். இது போக மூன்று மின்...