Posts

Showing posts from May, 2018

உள்ளம் கவர் கள்வன்

Image
என் பதின்மம் முழுக்க நிரம்பிக் கிடந்த எழுத்தாளர் பாலகுமாரன். சுஜாதா கூட பிற்பாடு நுழைந்தவர் தான். அந்த இரண்டும் கெட்டான் வயதில் அவரை வாசிப்பது ஒரு கொடுப்பனை என்றே சொல்வேன். கோடை விடுமுறையின் போது கோவையில் தொலைபேசியகத்தில் பணிபுரியும் என் அத்தை அவரது அலுவலக நூலகத்திலிருந்து எடுத்து வந்த நாவல்களின் மூலம் தான் அவரை நிறைய வாசித்தேன். குமுதம், விகடனில் அவரது எழுத்துக்கள் வந்தால் வெட்டிச் சேகரிக்கும் வழக்கம் சில ஆண்டுகள் இருந்தது. பல்சுவை நாவல் வடிவில் அவரது பெரும்பாலான நூல்கள் என்னிடம் இருக்கின்றன. (நாகர்கோவிலிலிருந்து என் மாமியாரின் தங்கை வாங்கி அனுப்பியது.) அவற்றில் கணிசம் படித்தும் விட்டேன். அவரது நல்ல முன்பனிக்காலம் நாவலைப் போல் என் வாழ்வில் நடக்க வேண்டும் என விரும்பி இருக்கிறேன். இனியெல்லாம் சுகமே தான் அவரது எழுத்துக்களில் எனக்குப் பிடித்த நாவல். சினிமாகவே எடுக்க உகந்த நாவல். யாரும் கண்டுகொள்ளவில்லை. மெர்க்குரிப் பூக்கள் அடுத்தது (அதே தலைப்புப் பாணியில் பிற்பாடு எழுதிய கரையோர முதலைகள், இரும்புக் குதிரைகள், கடலோரக் குருவிகள் ஏதும் அந்தளவுக்கு ஈர்க்கவில்லை). அப்புறம...