சேர நன்னாட்டிளம் பெண்கள்
முதலில் சில Disclaimer-களைச் சொல்லி விடுகிறேன். 1) இதில் நான் பேசப் போவது முழுக்க முழுக்கப் புறத்தோற்றத்தை அடிப்படையாக வைத்தே. பெண்களின் தனி ஆளுமை, குணநலன்கள் போன்றவற்றை எல்லாம் இதில் கணக்கில் கொள்ள வில்லை. 2) நான் முன்வைப்பது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையை (Fact) அல்ல; ஒரு தமிழ் ஆணாக என் பார்வையை (Perception) மட்டுமே. அதனால் இதில் சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். அதில் வியப்பில்லை. "மலையாளப் பெண்கள் பிரபஞ்சம் காணாத பேரழகிகள்" என்பது நம் தமிழ் மண்ணில் நிலவும் ஒரு பிரபலக் கருத்தாக்கம். கவனித்துப் பார்த்தால் தமிழ் ஆண்களுக்கு கேரளப் பெண்களின் மீது ஓர் Obsession இருக்கிறது. அதாவது பித்து. நம்முடைய உயிரியல் விழைவு - Biological urge - அது என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தில் காலங்காலமாய்க் கோலோச்சி வரும் மலையாள நடிகைகளே இதற்குப் பெரும்சாட்சி. தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் எந்த ரயிலை மறித்தாலும் நமக்கு நூறு கதாநாயகிகள் உத்திரவாதமாய்க் கிடைப்பார்கள். இது ஏதோ இன்று நேற்று நமக்கு வந்த திடீர் உணர்வல்ல; நூற்றாண்டுக்கும் மேலாய் நம்மிடையே நிலவி வரும் பா...