Posts

Showing posts from October, 2017

அம்பேத்கர் யார்?

Image
அம்பேத்கர் யார்? அவரது அடையாளம் என்பது என்ன? முதலில் அவர் இந்திய அரசியல் சாசனத்தின் பிரதானச் சிற்பி. இரண்டாவதாய் அவர் தலித்களின் விடுதலைக்காகச் சிந்தித்தவர், போராடியவர். அதாவது அவரை நவீன இந்தியாவின் பிதாமகர்களுள் ஒருவர் (One of the godfathers of modern India) என்று தான் பார்க்கிறேன்; தலித் தலைவராக மட்டுமல்ல. அவரைத் தலித் தலைவர் என்று அடையாளப்படுத்தும் முயற்சி இரண்டு தரப்புகளில் நடக்கிறது. முதலாவது சாதி இந்துக்கள் ஒரு தலித்தை இந்தியாவின் முக்கியத் தலைவராகச் சொல்வதா என்ற காழ்ப்பில் அவரது பங்களிப்பைச் சுருக்கிக் காட்ட முயற்சிக்கிறார்கள். அடுத்தது தலித்கள் இந்தியா முழுக்கவுமே அவரைத் தங்கள் விடுதலைக்குப் பாடுபட்ட தலைவராக முன்னிருத்துகிறார்கள். (இந்த இரண்டாவதில் ஓர் உரிமை கொண்டாடல் மட்டுமே இருப்பதால் பிழையில்லை.) ஆனால் உணர்ச்சி வயப்படாது நோக்குங்கால் இன்று 120 கோடி இந்தியர்கள் வாழ்வின் தினசரிகளில் அம்பேத்கர் முன்னின்று உருவாக்கிய அரசியல் சாசனம் செல்வாக்கு செலுத்துவதை வைத்துப் பார்க்கும் போது அவரை நவீன இந்தியாவின் சிற்பி என்ற அடையாளத்துடன் குறிப்பிடுவதே சரி எனப்படுகிறது. அதுவே நியாயம். ...