500, 1000, அப்புறம் ஜெயமோகன்
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு மற்றும் அதன் விளைவுகள், எதிர்பார்ப்புகள் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள நெடுங்கட்டுரையில் ( http://www.jeyamohan.in/92500 ) சொல்லி இருப்பனவற்றில் சில அடிப்படை விஷயங்களிலேயே வேறுபடுவதால் நல்ல உழைப்பும் சிந்தையும் கொண்ட அக்கட்டுரையைக் கடக்க வேண்டியவனாக இருக்கிறேன். 1) ஜெயமோகன் கட்டுரையின் ஆதார நம்பிக்கை கறுப்புப்பணமானது இந்தியாவில் நோட்டுக்களாகவே மிகப்பெருமளவில் தேங்கி இருக்கிறது என்பது. அவர் சில தொழிலதிபர்கள் மற்றும் பொருளியல் அறிஞர்களுடன் பேசியதன் அடிப்படையில் இதை முன் வைக்கிறார். புள்ளி விபரத்துடன் இது சரி தான் என அவரும் நிரூபிக்கவில்லை; அது தவறென நாங்களும். ஆனால் பொதுவான தர்க்கத்தின் அடிப்படையில் பெரும்பாலான கள்ளப் பணம் நோட்டுக்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது என் புரிதல். நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் என் இயல்பான மோடி எதிர்ப்பு நிலைப்பாடு தாண்டி தேசாபிமான அடிப்படையில் அதை ஆதரித்து எழுதிய போதும் கூட ( https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10154024889982108 ) இதைக் குறிப்பிட்ட...