ஷ்ருதி ஹாசன் says "Bitch Please!"
ஷ்ருதி ஹாசன் ஒரு 147 விநாடி வீடியோவை எழுதிப் பேசி நடித்திருக்கிறார் (இயக்கம் யார்?). அதன் பெயர் Be The Bitch . ஆங்கிலத்தில் 'Bitch' என்ற சொல் பெண்களை நோக்கிய வசைச் சொல்லாகக் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது (உத்தேசமாய் 15ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து என்கிறார்கள்). இச்சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு பெட்டை நாய் என்பது தான். (அதுவே வசை தான் என்பது வேறு விஷயம்.) ஆனால் அந்த நேரடிப் பொருள் தாண்டி அதன் பயன்பாடு வேறு மாதிரியானது. தமக்குப் பிடிக்காத பெண்களை இழிவு செய்யும் நோக்கில் திமிர் பிடித்தவள் என்ற பொருளில் அச்சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம். சில நேரம் அதீத காம உணர்ச்சி கொண்ட, ஒழுக்கம் தவறிய பெண் என்ற பொருளிலும் பிரயோகிப்பர். சமீப காலத்தில் இதன் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கீழே க்ராஃபில் காணலாம். இப்படியான பயன்பாட்டைப் பெண்ணியவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருவதும், ஒரு கட்டத்தில் அச்சொல் தங்களை இழிவு செய்யவில்லை என்று சொல்வதும் நடந்திருக்கிறது. ஜோ ஃப்ரீமன் என்ற அமெரிக்கப் பெண்ணியவாதி The BITCH Manifesto என்ற கட்டுரை ஒன்றை 1968ல் எழுதி இருக்கிறார். அதில் Bitch என...