Posts

Showing posts from September, 2016

அல்வா கொடுப்பவன்

Image
சுரேஷ் எனக்குக் கல்லூரிச் சினேக‌ம். கும்பகோணத்துக்காரன். நாங்கள் இருவருமே கணிப்பொறியியல் துறை. விடுதியில் கடைசி ஆண்டுகளில் அவன் எனக்குப் பக்கத்து அறை. அப்போது நாங்கள் எல்லாம் த்ரிஷா, அசின், ஜோதிகா எனப் பார்த்திருக்க அவன் மட்டும் சினேகா ரசிகன். அப்பருவத்தின் வசந்தமான சில்லறை மன‌க்குறும்புகள் போக அமைதியின் அகராதியாய் இருந்தவன். இப்போதும் பெரிய மாற்றம் இராது என்று தான் நினைக்கிறேன். படிப்பின் மீதான அக்கறையும் அதன் நீட்சியான உழைப்பும் அவனிடம் இருந்தது. பொறியியல் இறுதியாண்டு ப்ராஜெக்ட் நாங்கள் இணைந்து செய்தோம். அது E-Governance தொடர்புடையது. பல‌ அரசுச் சேவைகளை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தி மற்றுமொரு சேவையை அளிக்க உதவும் திட்டம். உதாரணமாய் பாஸ்போர்ட் எடுக்க ஒருவரது இருப்பிடச் சான்றும் வேண்டும் அதோடு காவல் துறைச் சான்றும் வேண்டும். இரண்டும் வெவ்வேறு துறைகள்; அதனால் வெவ்வேறு முறையில் சேமித்திருப்பார்கள். அவற்றை இணைத்து பாஸ்போர்ட் வாங்குவதை எந்தச் சிக்கலுமின்றி முடிக்க இத்திட்டம் உதவும். இன்னமும் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. சேர்ந்து செய்தோம் எனச் சொல்லிக் கொண்டாலும் அவன் பங்களிப்பு தான் ...