Posts

Showing posts from February, 2016

ஒரே ரத்தம் [சிறுகதை]

Image
“குழந்தையோட ப்ளட் க்ரூப் உங்க ரெண்டு பேரோடவும் பொருந்தலையே!” டாக்டர் முதலில் சொன்ன போது புவனாவுக்குப் புரியவில்லை. அருகே அமர்ந்திருந்த சசியின் முகத்தைப் பார்த்தாள். அவனுக்கும் எதுவும் புரிந்த மாதிரி தெரியவில்லை. “கேன் யூ எக்ஸ்ப்ளைன்?” - தயக்கமான குரலை சன்னமாய் ஒலிக்க விட்டான் சசி. “உங்க ப்ளட் க்ரூப் ஓ. புவனாவோடவது ஏ. அப்படின்னா குழந்தையோட ப்ளட் க்ரூப் ஏ அல்லது ஓ ஆகத்தான் இருக்க முடியும். ஆனா ஜோதிகாவோட ப்ளட் க்ரூப் பி!” கோர்க்கப்பட்ட, அச்சடித்த தாள்களிலிருந்து பார்வையை விலக்கி கண்ணாடிக்கும் புருவத்துக்குமான குறுஞ்சந்தின் வழி அவர்கள் இருவரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள் மெனோபாஸை மிக நெருங்கும் அந்த மத்திம வயது கைனகாலஜிஸ்ட். “எனக்கு சரியாப் புரியல, டாக்டர். அதில் ஏதும் பிரச்சனையா?” - புவனா கேட்டாள். “அதாவது மெடிக்கலி இது சாத்தியமே இல்ல. இது உங்க குழந்தை தானா?” “வாட்? ஜோ எங்க குழந்தை தான். எங்களுக்குப் பொறந்த சொந்தக் குழந்தை.” தடுமாறியபடி சொன்னான் சசி. புவனா பேச்சற்றுப் போயிருந்தாள். “ம்ம்ம். பெகூலியர்.” - டாக்டர் யோசனையாய் முணுமுணுத்தாள். சசி சட்டெனக் கேட்டான். –