ஞயம் பட வரை
மின்னூல்களின் தளமான ப்ரதிலிபியும், அகம் மின்னிதழும் இணைந்து 'ஞயம்பட வரை' என்ற பேரில் கட்டுரைப் போட்டி ஒன்றினை அறிவித்திருந்தார்கள். ஔவையின் ஆத்திச்சூடியில் ஒருவரி 'ஞயம்பட உரை'. நயமாகப் பேசு என்று அதற்கு அர்த்தம். அதைச் சற்று மாற்றி நயமாக எழுது என்ற பொருளில் போட்டிக்கு இத்தலைப்பைச் சூட்டி இருக்கிறார்கள்!
"இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" என்பது தலைப்பு. அதற்கு என் கட்டுரையை அனுப்பி இருக்கிறேன். தற்போது நடுவர் தீர்ப்பு தவிர்த்து போட்டியின் ஒரு கூறாக வாசகர் விருப்பம் என்பதையும் இணைத்திருக்கிறார்கள்.
அதாவது பொதுஜனம் படித்துப் பார்த்து படைப்புக்கு மதிப்பிடுவது. இந்த மாதிரி சூப்பர் சிங்கர் மாடல் போட்டிகளில் அவ்வளவாய் ஆர்வம் இல்லாதவன் என்றாலும் இதற்கு நான் எழுதிய கட்டுரை சமீப காலங்களில் நான் எழுதியவற்றில் கடும் உழைப்பையும் சிந்தனைச் செறிவையும் கோரிய ஒன்று என்பதால் விட்டுத் தந்து பின்வாங்க மனமில்லை.
அதனால் நட்புக்காக அல்லது மரியாதைக்காக அல்லாமல் நிஜமாகவே ஆர்வம் இருப்பவர்கள் கட்டுரையை முழுக்க வாசித்து விட்டு அதற்கான நேர்மையான வாக்கினை இத்தனை நட்சத்திரங்கள் என அங்கு அளிக்கலாம். அங்கேயே கருத்துரையும் இடலாம். அல்லது மௌனமாய் வாசித்து நகர விழைபவர் என்றாலும் சம்மதமே. வரவேற்கிறேன்!
கட்டுரையை மதிப்பிட சில உதவித் துளிகள்:

என் கட்டுரையை வாசிக்க: http://www.pratilipi.com/c-saravanakarthikeyan/nyayam-pada-varai |
கட்டுரையை மதிப்பிட சில உதவித் துளிகள்:
- கணிப்பொறி அல்லது செல்பேசி என எதன் மூலமும் மதிப்பிடலாம்.
- மேலே தரப்பட்டிருக்கும் கட்டுரையின் லிங்க்கை க்ளிக் செய்யவும்.
- அங்கே வலது மேற்புறம் இருக்கும் 'Signup' லிங்க்கை க்ளிக் செய்யவும்.
- பெயர், மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் அளித்து பதிவு செய்யவும்.
- அப்பக்கத்தில் 5 நட்சத்திரங்களுக்கு எத்தனை என க்ளிக் செய்யவும்.
- நீங்கள் கொடுத்த மதிப்பீட்டு நட்சத்திரங்கள் அடர்நீலமாய் மாறிடும்.
- ஃபிப்ரவரி இறுதி வரை கட்டுரையை மதிப்பிட அவகாசமுண்டு.
Comments