மிஷ்கின் - மின்னூல்
அச்சு நூல்களைக் காட்டிலும் மின் புத்தகங்கள் எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெறும் என்பது என் கணிப்பு. சுட்டு விரலில் எச்சில் தொட்டு பக்கங்களைத் திருப்ப முடியாது என்பது தவிர அச்சுப் புத்தகங்களுக்கு இணையானவை தாம் மின்னூல்களும். சில விஷயங்களில் அதனிலும் மேல். உதாரணமாய் காடுகளை அழிக்க வேண்டியதில்லை; கள்ளப் பிரதிக்கான வாய்ப்பு குறைவு; உடன் எடுத்துப் போக சுமை இல்லை. அமேஸான் கிண்டில் கருவி அதில் ஒரு மைல்கல்.
கடந்த ஈராண்டுகளாகவே அச்சில் வந்த என் நூல்களை, தொகுக்கப்படாத எழுத்துக்களை மின் வடிவில் வெளியிட ஆர்வம் கொண்டிருந்தேன். தமிழ் மின்னிதழும் ச்சீய் மின்னூலும் அவ்வழி முயற்சிகள் தாம். அமேஸான் கிண்டிலில் வெளியிட எத்தனித்த போழ்து அதில் தமிழில் நூல் பதிப்பிக்க அதிகாரப்பூர்வமாக இன்னும் அங்கீகாரம் வரவில்லை என்றறிந்தேன்.
பிறகு எனது குஜராத் 2002 கலவரம் நூலினை DailyHunt (முன்னாள் NewsHunt) வழியாக கிழக்கு பதிப்பகம் மின்னூலாகக் கொண்டு வந்ததை ஒட்டி இந்த முயற்சி. ஐ லவ் யூ மிஷ்கின் நான் கடந்த எட்டாண்டுகளாக என் வலைதளத்திலும், சில அச்சு ஊடகங்களிலும் எழுதிய திரை விமர்சனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி. சுயதிருப்தியளித்த எழுத்துக்கள் எனலாம். இதன் போக்கினைப் பார்த்து மேற்கொண்டு மின்னூல்கள் வெளியிடுவது குறித்து முடிவெடுக்க உத்தேசம்.
வழமையாய் எனக்கு நூலட்டை வடிவமைத்துத் தரும் மீனம்மா கயல் தான் இதற்கும். அவருக்கு என் நன்றியும் அன்பும்.
DailyHunt / NewsHunt ஆன்ட்ராய்ட், ஐஃபோன், விண்டோஸ், ப்ளாக்பெர்ரி, நோக்கியா மற்றும் ஜாவா மொபைல்களில் கூட பயன்படுத்தும் வகையில் செயலி (app) ஆகக் கிடைக்கிறது. 12 இந்திய மொழிகளில் நூல்கள் விற்கிறார்கள். சுமார் 10 கோடி முறை இது டவுன்லோட் ஆகி இருப்பதாகத் தெரிகிறது. நூல்கள் தவிர தினசரிகளும், இதழ்களும் கிடைக்கின்றன. இப்போதைக்கு பிராந்திய மொழி மின்னூல்களில் இவர்களே முதன்மை. அவர்களின் வழி நூல் வெளியாவது மகிழ்ச்சி.
இச்செயலி மூலம் நூல் வாங்குவது எளிமையானது. செயலியைத் தரவிறக்கி, அக்கவுண்ட் துவக்கி, லாகின் செய்த பின் தேடல் மூலமாகவோ, சுட்டியின் வழியாகவோ குறிப்பிட்ட நூலுக்குப் போய் அதை வாங்கிக் கொள்ளலாம். க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், நெட் பேங்கிங் தவிர்த்து இன்னொரு சுலப வழியும் வைத்திருக்கிறார்கள். நூல் வாங்கி விட்டு மொபைல் கணக்கில் சேர்ப்பிக்கச் சொல்லி விடலாம்! பேலன்ஸில் பிடித்துக் கொள்வர் அல்லது மொபைல் பில்லில் வந்து விடும்.
ஐ லவ் யூ மிஷ்கின் என்ற இந்நூலினை ஏ4 தாளில் அச்சிட்டால் சுமார் 90 பக்கங்கள் வரும். சுலபமாய் ரூ.100 விலைப் பட்டை மாட்டலாம். மின்னூல் என்பதால் உத்தேசமாய் ரூ.70 வைப்பர். ஆனால் இந்தக் கணக்கீடுகளைப் புறந்தள்ளி, பிடிவாதமாய்க் குறைந்த விலை நிர்ணயம் செய்திருக்கிறேன். 20 கட்டுரைகள் - 20 ரூபாய் என்ற எளிமையான கணக்கு.
(அது போக பிரத்யேக அறிமுகச் சலுகையாக 75% தள்ளுபடி விலையில் தற்போது நூல் கிடைக்கிறது. ரூ.5 மட்டுமே!)
கடந்த ஈராண்டுகளாகவே அச்சில் வந்த என் நூல்களை, தொகுக்கப்படாத எழுத்துக்களை மின் வடிவில் வெளியிட ஆர்வம் கொண்டிருந்தேன். தமிழ் மின்னிதழும் ச்சீய் மின்னூலும் அவ்வழி முயற்சிகள் தாம். அமேஸான் கிண்டிலில் வெளியிட எத்தனித்த போழ்து அதில் தமிழில் நூல் பதிப்பிக்க அதிகாரப்பூர்வமாக இன்னும் அங்கீகாரம் வரவில்லை என்றறிந்தேன்.
பிறகு எனது குஜராத் 2002 கலவரம் நூலினை DailyHunt (முன்னாள் NewsHunt) வழியாக கிழக்கு பதிப்பகம் மின்னூலாகக் கொண்டு வந்ததை ஒட்டி இந்த முயற்சி. ஐ லவ் யூ மிஷ்கின் நான் கடந்த எட்டாண்டுகளாக என் வலைதளத்திலும், சில அச்சு ஊடகங்களிலும் எழுதிய திரை விமர்சனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி. சுயதிருப்தியளித்த எழுத்துக்கள் எனலாம். இதன் போக்கினைப் பார்த்து மேற்கொண்டு மின்னூல்கள் வெளியிடுவது குறித்து முடிவெடுக்க உத்தேசம்.
வழமையாய் எனக்கு நூலட்டை வடிவமைத்துத் தரும் மீனம்மா கயல் தான் இதற்கும். அவருக்கு என் நன்றியும் அன்பும்.
DailyHunt / NewsHunt ஆன்ட்ராய்ட், ஐஃபோன், விண்டோஸ், ப்ளாக்பெர்ரி, நோக்கியா மற்றும் ஜாவா மொபைல்களில் கூட பயன்படுத்தும் வகையில் செயலி (app) ஆகக் கிடைக்கிறது. 12 இந்திய மொழிகளில் நூல்கள் விற்கிறார்கள். சுமார் 10 கோடி முறை இது டவுன்லோட் ஆகி இருப்பதாகத் தெரிகிறது. நூல்கள் தவிர தினசரிகளும், இதழ்களும் கிடைக்கின்றன. இப்போதைக்கு பிராந்திய மொழி மின்னூல்களில் இவர்களே முதன்மை. அவர்களின் வழி நூல் வெளியாவது மகிழ்ச்சி.
இச்செயலி மூலம் நூல் வாங்குவது எளிமையானது. செயலியைத் தரவிறக்கி, அக்கவுண்ட் துவக்கி, லாகின் செய்த பின் தேடல் மூலமாகவோ, சுட்டியின் வழியாகவோ குறிப்பிட்ட நூலுக்குப் போய் அதை வாங்கிக் கொள்ளலாம். க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், நெட் பேங்கிங் தவிர்த்து இன்னொரு சுலப வழியும் வைத்திருக்கிறார்கள். நூல் வாங்கி விட்டு மொபைல் கணக்கில் சேர்ப்பிக்கச் சொல்லி விடலாம்! பேலன்ஸில் பிடித்துக் கொள்வர் அல்லது மொபைல் பில்லில் வந்து விடும்.
நூலினை வாங்க: http://ebooks.newshunt.com/Ebooks/tamil/Ai-Lav-Yoo-Mishkin/b-108012 |

Comments