Posts

Showing posts from May, 2015

Net Neutrality - ஓர் எளிய அறிமுகம்

சென்ற மாத மத்தியில் செய்திகளில் அதிகம் அடிபட்ட வண்ணமிருந்ததால் நெட் ந்யூட்ராலிட்டி குறித்து வாசிக்கவும் எழுதவும் விரும்பி இருந்தேன். என்னவென்றே புரியாமல் நிறையப்பேர் ஆதரித்துக் கொண்டிருந்தது தான் முக்கியக் காரணம். ஆனால் தமிழ் - சித்திரை இதழ் பணிகள், கொல்கத்தா, சென்னை, கோவை பயணம் எனத் தொடர் ஓட்டத்தின் காரணமாய் சமயம் கிட்டவில்லை. இப்போது மத்திய அரசு இவ்விஷயத்தில் முடிவெடுக்கவிருக்கும் கட்டத்தை எட்டி விட்டது. இடையில் ஜெயமோகன் இது பற்றி நான் எழுதி இருப்பேன் என நினைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார் . அந்த ஊக்கத்தின் நீட்சியாய் தாம‌தமானாலும் பரவாயில்லை என இது குறித்து எழுதத் தீர்மானித்தேன். அவருக்கு நன்றி. * நெட் ந்யூட்ராலிட்டி என்பதை இணையச் சமநிலை என்று பெயர்க்கிறேன். அது என்ன என்று அறியும் முன் இணையம் (internet) எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்வோம். ஒன்று அதன் விஞ்ஞானம். மற்றது அதன் பொருளாதாரம். இணையத்தில் நாம் தினசரி பயன்படுத்தும் கூகுள், ஜிமெயில், ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப், அமேஸான் அனைத்துமே வலைச் சேவைகள் (web services). இவற்றை கணிப்பொறி, ஸ்மார்ட்ஃபோன், டேப்லட் உள்ளிட்ட க