ஆண்குறி அதிகாரம்
India's Daughter (Documentary) முதலில் குடும்பம் குட்டியை விட்டு ஈராண்டு இந்தியாவில் தங்கி 2012 டெல்லி ரேப் பற்றிய டாகுமெண்டரியை இயக்கிய லெஸ்லி உட்வினுக்கு வாழ்த்துக்களும், அதை இந்தியாவில் ஒளிபரப்பவியலாமல் போன சூழலுக்காக வருத்தங்களும். ஆங்காங்கே உறுத்தல்களும் மறுப்புகளும் இருந்தாலும் ஒட்டுமொத்தமாய் இது ஒரு நல்ல பதிவு. அவசியமானதும் கூட. இதில் குற்றவாளி பேசி இருப்பதைப் போலான மதிப்பீடுகளும் நிலைப்பாடுகளும் தான் பெரும்பாலான இந்திய ஆண்கள் கொண்டிருக்கிறார்கள் (கணிசமான பெண்களுமே கூட). கிட்டத்தட்ட இது இந்திய தேசம் தன்னைக் நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலத்தான். அதனாலேயே இதை நாம் அனைவரும் தவறாது பார்க்க வேண்டியது முக்கியமாகிறது. இந்த அரசுத்தடை என்பது அறிவோ அறமோ அற்றது. இதில் தான் இந்தியாவின் மானம் போகிறதென்றால் தினம் தினம் தேசம் முழுக்க பரவலாய் அறிந்தும் அறியாமலும் நடக்கும் சுமார் 50 பாலியல் வல்லுறவுகள் கம்பீரமாகவா நிற்கின்றன? இந்த டாகுமெண்டரியின் முக்கிய அங்கமாய் நான் கருதுவது குற்றவாளிகளின் ஒருவனான முகேஷும் குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான இரண்டு வழக்கறிஞர்களும் பொதுவா...