வெள்ளிச் சகசிரம்
இன்று சௌம்யா (@arattaigirl) ௨௰௫௲ (பண்டைத் தமிழில் 25,000 என்பதை இப்படி எழுத வேண்டும்) ஃபாலோயர்களை அடைந்திருக்கிறார். அவர் பற்றி ட்விட்டரில் புழங்கும் 25 பேரின் கருத்துக்களைப் பெற்று இங்கே தொகுத்திருக்கிறேன்: * வார்த்தைகளை கோர்க்கும் பொறியியல், அவனதிகார ஆய்வியல், அழகு மொழியியல், கனவுகளின் அழகியல், சரிங்க எனும் வேதியியல், No அரசியல். #அரட்டைகேர்ள் ஆல்தோட்டபூபதி (@thoatta) * (டிஸைன்: மீனம்மா கயல்) எல்லாருக்கும் பிடித்தமான பெண் என்பதாலேயே எனக்கு சுத்தமா பிடிக்காது அவங்கள, என்னையும் வசீகரித்து நம்ம சௌம்யாப்பா என்றே சொல்ல வைத்து விட்டார். மீனம்மா (@meenammakayal) * Heroine of Tamil Twitter! எண்ணங்களில் மிளிரும் அழகும், வார்த்தைகளில் ஒளிரும் வசீகரமும் கொண்ட ட்விட்டரின் முடிசூடா ராணி. Kaarthik Arul (@kaarthikarul) * இந்த வயதில் இத்தனை முதிர்ச்சியான எண்ணங்கள் சாத்தியமா எனும் ஆச்சர்யம் எப்போதும் ஏற்படுத்தும் அரட்டையின் பல ட்வீட்ஸ்! மிருதுளா (@mrithulaM) * அச்சு உலகம் தவற விட்ட அச்சு அசல் கவிதாயினி! வார்த்தைகளை சொல் ந...