நிகழ மறுக்கும் அற்புதம்
"Being sexy comes from confidence and accepting your body and mind as a woman." - Shruthi Haasan (in an interview to The Times of India, February 4, 2014) இன்று திகதி ஜனவரி 28. ஷ்ருதி ஹாசனின் பிறந்த நாள். ('ஷ்ருதி'யை 'ஸ்ருதி' என்று தான் எழுதிக் கொண்டிருந்தேன், சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்க்கும் வரை. அவரே குத்திக் காட்டிய பின் திருத்திக் கொண்டு தானே ஆக வேண்டும்!) கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக அவர் எனக்குப் பிடித்தமான நடிகை. ( 3 என்ற ஒரு படம் தவிர்த்து வேறு படங்களில் அவர் தன் நடிப்புத் திறனை அவ்வளவாய் வெளிப்படுத்தியதில்லை என்பதால் இங்கே நடிகை என்ற இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது சற்று நெருடலாகத் தான் இருக்கிறது. ஆனால் இன்றைய தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி வெகுஜனத் திரைப்படங்களின் நடிகைகளோடு ஒப்பிடுகையில் எவ்வகையிலும் குறைவில்லை என்பதால் அதைத் தொடர்கிறேன்) ஷ்ருதியின் வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் எல்லாமே மோதிரைக் கை குட்டுக்கள். ஆறு வயதில் முதல் பாடலே இளையராஜாவிடம் ( தேவர் மகன் - போற்றிப் பாடடி பொண்ணே ...). அப்புறம் யுவதியான பின்னும் முதல் பாடல்...