பிஜேபி ஆட்சி - A RECAP
ஆழம் - ஜூன் 2014 இதழில் மத்தியில் இதுவரையிலான பிஜேபி ஆட்சிக் காலங்களின் போதான சாதனைகள் / சோதனைகள் குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது: * தனிப்பெரும்பான்மையுடன் பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்து நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றிருக்கிறார். நல்ல நிர்வாகம் மற்றும் மாநில வளர்ச்சியை முன்வைத்துப் பேசி பதவிக்கு வந்தவர் என்பதால் அவரது அடுத்த அறுபது மாதச் செயல்பாடுகள் குறித்து இப்போதே எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே இருக்கிறது. இது பிஜேபி ஆட்சி என்பதால் பொதுவாய் இதற்கு முன் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியின் தொடர்ச்சியாகவே இது இருக்கும் என்பது மேலோட்டமான எண்ணம். குறைந்தபட்சம் அவ்வாட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கப்படும் என நம்பலாம். இதற்கு முன் ஆட்சிபீடத்தில் இருந்து பிஜேபி நிர்வாக, அரசியல், பொருளாதார, சமூக, கலாசார தளங்களில் செய்தது என்ன என்பதை இக்கட்டுரை பேசுகிறது. பிஜேபி இது வரை மூன்று முறை ஆட்சிக்கு வந்திருக்கிறது. முதல் முறை 1996ல் 161 எம்பிக்கள் பெற்று அதிக இடங்கள் கொண்ட கட்சியாக இருந்ததால் ஜனாதிபதி ஆட்சியமைக்க அழைத்...