Posts

Showing posts from March, 2014

என் சாதிக்காரருக்கு ஓட்டு போடுங்கள்!

Image
ஞாநி என்ற எழுத்தாளரை எனக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும். அதாவது அவரது எழுத்துக்களைத் தான் சொல்கிறேன். என் பதின்மங்களிலிருந்து அவரை வாசிக்கிறேன். அவரது ரசனை சார் நிலைப்பாடுகளிலிருந்து orthogonal-ஆக விலகி இருந்தாலும் சமூகம் மற்றும் அரசியல் விஷயங்களில் அவரது கருத்துக்களோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறவன் (ஜெயமோகன் விஷயத்தில் அப்படியே நேர்எதிர்). அதிகம் பேருடன் அப்படி இருக்க சாத்தியமில்லை என்பதால் எனக்கு முக்கியமாகிறார். அவரது கட்டுரைகள் வழியாக மட்டுமே அவர் பழக்கம். ஆனந்த விகடனில் அவர் 'ஓ பக்கங்கள்' எழுதிக் கொண்டிருந்த வரை தொடர்ந்து வாசித்து வந்தேன். என்வரையில் தமிழின் மிக முக்கியமான 100 நூல்களுள் ஒன்று அது. நேரடியாக அவருடன் உரையாட நேர்ந்த சந்தர்ப்பங்கள் குறைவே. அவர் வலைதளம் தொடங்கிய போது அவரை மனப்பூர்வமாக வரவேற்றிருந்தேன் . 49-ஓ என்ற விஷயம் பற்றி அவர் சொல்லித் தான் எனக்குத் தெரியும். பிற்பாடு அதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அவர் 'கோலம்' என்ற திரைப்பட இயக்கத்தைத் தொடங்கிய போது அதை மிக எதிர்பார்த்திருந்தேன் . பிறகு அது குறித்து சில கேள்விகளை அவருக்கு வ...

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

தமிழ் பேப்பர் இணையதளம் வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வட்ட மேஜை மாநாடு என்ற சிறப்புப் பகுதியைத் தொடங்கி இருக்கிறது. குறிப்பிடத் தகுந்த கட்டுரைகள் அவற்றில் வெளியாகி வருகின்றன. தமிழக்த்தில் தேர்தல் முடியும் வரை அடுத்த ஒரு மாதத்திற்கு தமிழ் பேப்பர் கலவர பூமியாகத் தான் இருக்கும் எனத் தோன்றுகிறது. தமிழ் பேப்பர் ஆசியர் மருதனின் அழைப்பிற்கிணங்க நானும் அதில் வாரம் ஒரு கட்டுரையேனும் எழுதும் உத்தேசத்தில் இருக்கிறேன். அதன் ஒரு பகுதியாக முதல் பங்களிப்பாக என் நீள்கட்டுரை ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் எந்தக் கட்சி சார்போ எதிர்ப்போ இல்லாமல் ஒரு நேர்மையான தர்க்கப்பூர்வமான மனம் தேர்தலை எப்படி அணுக வேண்டும் என்று மட்டுமே இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது. தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - http://www.tamilpaper.net/?p=8671 நான் சமீபத்தில் எழுதியவற்றில் மிகுந்த திருப்திகரமான உணரச் செய்த கட்டுரை இது. தேர்தலில் வாக்களிக்க உரிமை இருக்கும் அனைவரும் இதைக் கட்டாயம் படிக்க வேண்டுகிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்களையும் இதன் சுட்டியை அளித்து வாசிக்கச் செய்யுங்கள்...

G2K2K : நேர்காணல் (பகுதி - 2)

இளைஞர் முழக்கம் மார்ச் 2014 இதழில் வெளியான எனது நேர்காணலின் தொடர்ச்சி: *** 11.    நெருப்புக்கு நெருப்பு என்ற பழிவாங்குதல் கொடூரமானதாக உள்ளதே. எழுதும்போது என்ன உணர்ந்தீர்கள்? ஆம். அந்தப் பகுதி கொடூரமானது தான். அந்தப் பகுதி என்றில்லை. பொதுவாகவே இந்தப் புத்தகம் எழுதும் காலகட்டம் முழுக்கவே உணர்ச்சிமயமானவனாகவே இருக்க முடிந்தது. பொதுவாய் அது என் இயல்பில்லை என்பதையும் குறிப்பிடவிரும்புகிறேன். முஸ்லிம்களை எரிப்பதில் அவர்களை கொல்லும் நோக்கமே பிரதானம் என்றாலும் மற்றுமொரு மறைமுக நோக்கம் இருந்தது. அது அந்த மதத்தை அவமதிப்பது. அவர்கள் பிணங்களை எரிப்பதில்லை. சடங்குகளுக்கு உட்படுத்திப் புதைக்கிறார்கள். அப்படிச் செய்தால் தான் இறையை அடைய முடியும் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்போது தான் முஸ்லிமாக முழுமை அடைகிறார். அதை மறுத்து எரித்து சாம்பல் ஆக்குவதன் மூலம் முஸ்லிமே இல்லை என்ற அடையாள அழிப்பை செய்தனர். 12.    நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டதாக சொல்லியுள்ளீர்களே, என்ன ஆதாரம்? 2002 குஜராத் கலவரங்களின் போது நீதிபதிகள், காவல்துறையினர், அரசு அதிகாரிக...

G2K2K : நேர்காணல் (பகுதி - 1)

இளைஞர் முழக்கம் மார்ச் 2014 இதழில் குஜராத் 2002 கலவரம் நூல் குறித்த எனது நேர்காணல் : *** 1.    நீங்கள் ஓர் அரசியல்வாதியல்ல. முழுநேர எழுத்தாளருமல்ல. எனினும், இப்படியான ஒரு பெரும் முயற்சிக்கு எப்போது முடிவெடுத்தீர்கள், எங்கேயிருந்து அதற்கான உந்துதல் கிடைத்தது? நான் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறேன். முழுநேர எழுத்தாளன் இல்லை என்றாலும் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து அச்சு இதழ்களிலும், வலைதளங்களிலும் எழுதி வருகிறேன். இரு கவிதைத் தொகுதிகள் உட்பட இதுவரை ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறேன். என் முதல் புத்தகத்துக்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது. குங்குமம் வார இதழில் ஒரு தொடரும் எழுதி உள்ளேன். ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதி இருந்தாலும் குஜராத் 2002 கலவரம் தான் எனது முதல் நேரடி அரசியல் நூல். அடிப்படையில் இது ஒரு வரலாற்றுப் புத்தகம் தான் என்றாலும் சமகால இந்தியச் சூழலில் இது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. தீராநதி, காலச்சுவடு ஆகிய இதழ்களில் வெளியான கட்டுரைகள், அ.மார்க்ஸ் எழுதிய / தொகுத்த / மொழிபெயர்த்த சில கட்டுரைகள் ஆகியவை வழியாக 2002 குஜராத் கலவரங்கள் அது ந...

நவீன தமிழ் சினிமாவின் பிதாமகன்

Image
ஆழம் ‍ - மார்ச் 2014 இதழில் எனது பாலு மகேந்திரா அஞ்சலி கட்டுரை வெளியாகியுள்ளது: *** “A film is never really good unless the camera is an eye in the head of a poet.” -    Akira Kurosawa, Japanese film director கடந்த ஃபிப்ரவரி 13ம் தேதி பாலு மகேந்திரா இறந்த‌ போது அவருடனான நேரடி அனுபவங்களை முன்வைத்து மின், அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பரவலாக‌ அஞ்சலிக் குறிப்புகள் வந்தன‌. இது பற்றிய ஒரு ட்விட்டர் கமெண்ட்: “என்னைத் தவிர எல்லோரும் பாலு மகேந்திராவை சந்திச்சிருக்காங்க போல!” உண்மையில் பாலு மகேந்திரா என்ற மனிதர் தன் தனிப்பட்ட வாழ்வில் எந்த உயர்வு தாழ்வும் பாராட்டாமல் தன்னை நெருங்க விரும்பிய அத்தனை பேரையும் அனுமதித்து மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. இவ்வளவு பேர் அழுவதைப் பார்க்கும் போது சினிமாவில் இருந்த போதும் அதன் கொடுங்கரங்கள் தீண்டாது நல்லவராக வாழ்ந்து போயிருக்கிறார் என்பது புரிகிறது. நான் அவருடன் பழகியவன் இல்லை; அவரைச் சந்திக்கும் பேறும் பெற்றவன் இல்லை. ஒரு தேர்ந்த தீவிர‌ சினிமா பார்வையாளனாக பாலு மகேந்திரா என்ற இயக்குநர் தன் திரைப...

ஒரு Pleasant நாவல்

Image
இன்று செல்லமுத்து குப்புசாமி எழுதிய இரவல் காதலி என்ற நாவலைப் படித்து முடித்தேன். எனக்கு மிகப் பிடித்திருந்தது. பொதுவாய் நான் நிறைய புத்தக விமர்சனம் எழுதுபவனில்லை. சினிமா மற்றும் நாடகங்களோடு சரி. ஆனால் இந்த நாவல் தந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. சுருக்கமாகவேனும் அதைப் பற்றி எழுதும் விழைவிலேயே இப்பதிவு. இந்த நாவல் தமிழ் புனைவுலகுக்கு ஒரு முக்கியமான வரவு. எந்த அடிப்படையில் என்று கடைசியில் சொல்கிறேன். புத்தகக்காட்சிக்கு முன் அவரது ஒரு சிறுகதையை வெளியிட்டு இதே போன்று பல மடங்கு நாவல் இருக்கும் என் கட்டியம் கூறி இருந்தார் மனுஷ்ய புத்திரன். அண்ணியில் அணைப்பில்... என்பது அக்கதையின் பெயர். நடை, உள்ளடக்கம் என எல்லாவற்றிலுமே அது ஒரு சரோஜா தேவி கதை. உண்மையிலேயே அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஆனால் புத்தகக் காட்சியில் என்னை இந்த நூலை வாங்க வைக்க அந்த "ஒன்றுமில்லை" என்ற கவர்ச்சியே போதுமானதாய் இருந்தது என்பது வேறு விஷயம். ஆனால் நாவல் அந்த சிறுகதை போல் இல்லை. உண்மையிலேயே மிக யதார்த்தமாகவும் மிக சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது. ஒரே மூச்சில் படித்தேன் என்றால் க்ளீஷே! நாவ...

சந்திரயான் : A Belated Review

நான் இதுகாறும் எழுதியுள்ள ஐந்து புத்தகங்களில் அதிகபட்ச அங்கீகாரம் (தமிழ அரசு வழங்கிய சிறந்த நூலுக்கான பரிசு) பெற்றதும், ஆனால் அதே சமயம் குறைவான வாசகர் எதிர்வினைகளைப் பெற்றதும் என் முதல் நூலான சந்திரயான் தான். இப்போது அந்த நூலுக்கு பொருட்படுத்தத் தகுந்த ஒரு விமர்சனம் வெளியாகி இருக்கிறது. https://www.goodreads.com/review/show/878516183 Goodreads வாசித்த நூல்களைப் பற்றிய விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு பிரபல தளம். சென்ற வருடம் அமேஸான் இந்தத் தளத்தை விலைக்கு வாங்கியது. இதில் தான் பி. சங்கர் இதை எழுதி இருக்கிறார். முன்பு ட்விட்டரில் தீவிரமாக இயங்கியவர். அவர் விமர்சனத்தில் சொல்லி இருக்கும் சில கருத்துக்களுக்கான விளக்கங்கள்: 1) நூலின் முடிவில் ஓர் அழகான நேரக்கோடும் உள்ளது. இதனை ஆசிரியர் அவராகவே உருவாக்கி இருந்தால், இது மிகவும் பாராட்டப் பட வேண்டிய முயற்சி. அது திரட்டிய தகவல்களை வைத்து நானே தொகுத்து உருவாக்கியது தான். அதற்கு நிறையவே உழைக்க வேண்டி இருந்தது. கவனித்தமைக்கு / உணர்ந்தமைக்கு நன்றி. 2) சில எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே தென்பட்டன. அடுத்த பதிப்பு கொண்டு வரும் திட்டம் இ...

G2K2K : ஒரு வசை

G2K2K : இந்துக்கள் மீதான வன்முறை பதிவிற்கு நேற்று வந்த இரண்டு அனானி பின்னூட்டங்கள் இவை (அங்கே இவற்றைப் பிரசுரிக்காமல் ரத்து செய்து விட்டேன்):  (1) ஞாநி மனுஷ்யபுத்திரன் நீ போன்ற மயிறு புடுங்கிகள் ஈழ படுகொலை பற்றியோ சீக்கிய கலவரம பற்றியோ ஒரு சூத்து பீ அளவுக்கு கூட பேச மாட்டீங்க..டேய் ஹிந்துக்கள் அதிகமா இருக்குறவரை தான் உன்போன்றவர்கள் நாத்திக கஞ்சியை செவுத்துல கையடிக்க முடியும்.துலுக்க ஆட்சி(உன் போன்றவர்கள் துணையால் சீக்கிரமே அது இந்தியாவில் வரும்) வந்துவிட்டால் உன் போன்றவர்களை ஷரியா சட்டப்படி தூக்குல தொங்க விடுவார்கள்.உன் புள்ள யோகியா ஞானியா அவன் அனாதையா இருப்பான் மனசுல வச்சுக்கடா பாடு..எந்த இசுலாமிய நாடு அமைதியா இருக்கு?அதை பற்றி பேச உன் கொட்டையில் கஞ்சி பாக்கி இருக்கா இல்லாட்டி எல்லாத்தையும் sperm bank இல் கொட்டிட்டியா? (2) போடா புடுக்கு...உன்னை மாதிரி புல்லுருவிகளால் தான் பிற நாடுகளில் வாழும் ஹிந்து சிறுபான்மையின மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் போனது.உலகின் எந்த மூலையில் இசுலாமியனுக்கு ஒன்னுன்னாலும் உலக இசுலாமியன் சேர்ந்து குரல் கொடுப்பான்.ஆனா உன்னை மாதிரி ப...

G2K2K : இந்துக்கள் மீதான வன்முறை

சுமார் ஒரு வாரம் முன் எனக்கு வந்த மின்னஞ்சல் இது: Dear author, I read your book. Its very good. I really appreciate your hardwork in collecting all data related to the topic. Its very impressing about your guts too. And I have a small doubt about your research on this topic. That's U have mentioned only about the Hindus violence at Muslims. U haven't mentioned about Muslims violence at Hindus. What is the reason for it? Awaiting for your response as soon as possible. By D.T.Rajasekaran, Reader for Erode Sent from my Windows Phone * குஜராத் 2002 கலவரம் நூலின் முதல் வாசகனான என் நண்பன் இரா.இராஜராஜன் தொடங்கி பலரும் முன் வைத்திருக்கும் கேள்வி தான் இது. 2002 குஜராத் கலவரங்களில் இந்துக்கள் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து புத்தகம் ஏதும் சொல்லவில்லையே என்பதே அது. கிட்டத்தட்ட நூலின் (அதன் நீட்சியாக என் நிலைப்பாட்டின்) அடிப்படை நேர்மையை அல்லது துல்லியத்தை சந்தேகிப்பது போல் இந்தக் கேள்வி நிற்பதால் அதைப் பற்றி தெளிவாக பதில் சொல்லி விடுவது முக்கியமானதாய்ப்ப...

G2K2K - உதவும் கரங்கள்

குஜராத் 2002 கலவரம் நூலுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் வந்த வண்னம் இருப்பதாய் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதோ இன்னொன்று. முருகன் பெங்களூர்காரர். மென்பொருள் துறையைச் சேர்ந்தவர். இரு வாரங்கள் முன் குஜராத் 2002 கலவரம் நூலைப் படித்து விட்டு அதிலிருந்த ஒரு சிறிய கவனப்பிசகை சுட்டிக் காட்டி இருந்தார். பொதுவாக அப்படி யாரும் சொல்வதில்லை. ஒன்று தயக்கத்தின் காரணமாக ஏதும் சொல்லாமல் கடந்து விடுவர். அல்லது நூலின் நோக்கை விடுத்து அதைப் பூதகரமாக்கி குற்றம் சாட்டுவார்கள். அந்த வகையில் அவர் நேரடியாய்த் தகவல் தெரிவித்தமைக்கு நன்றி சொல்லி விட்டு கிழக்கு ஆசிரியரிடம் சொல்லித் திருத்த அதைக் குறித்துக் கொண்டேன். புத்தகம் பற்றி அவருடனான உரையாடல் அத்தோடு முடிந்தது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் பிறகு அவரே மறுபடி தொடர்பு கொண்டார். கிழக்கு ஆன்லைனில் (nhm.in) விற்கும் எல்லா குஜராத் 2002 கலவரம் புத்தகங்களின் தபால் செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாகக் கேட்டார். பொதுவாய் கடைகளுக்குப் போய் நூல்கள் தேடி வாங்காமல் இணையத்தில் ஆர்டர் செய்யும் சொகுசுவாசி(ப்பாளர்)களுக்கும், கிழக்கு பதிப்பக புத்தகங...

G2K2K - இளைஞர் முழக்கம்

Image
தமிழகத்துக்கான லோக்சபா தேர்தல்கள் வரும் 24 ஏப்ரல் 2014 அன்று நடக்கும் என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் குஜராத் 2002 கலவரம் நூலின் சமகால முக்கியத்துவம் கருதி அதை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முகமாக இதுகாறும் அறிமுகமோ அவ்வளவாய் பழக்கமோ இல்லாத நண்பர்கள் சிலர் அதற்காக உதவி வருகிறார்கள். என் நூல் என்பது தாண்டி அவர்கள் அனைவருக்கும் பிரதான நோக்கம் ஒன்று தான்: கணிசமான மக்களிடையே மதச்சார்பின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தீவிரமான இந்துத்துவ சார்பு கொண்டவரான நரேந்திர மோடியைப் பிரதமர் ஆக விடாமல் தடுப்பது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்களைப் பொறுத்தவரை இயல்பாகவே பிஜேபி பூஜ்யம் தான் என்றாலும் இம்முறை உடன் முழுநேரக் கோமாளிகளையும் மனசாட்சியற்ற சந்தர்ப்பவாதிகளையும் சேர்த்துக் கொண்டு களம் இறங்குவதால் ஏதாவது மூலையில் குழப்பம் நேர்ந்து பிஜேபிக்கு சாதகம் ஆகி விடக்கூடாது என்பது தான். இன்னொரு விஷயம் தமிழகத்தில் திமுக, அதிமுக யாருக்கு ஓட்டுப் போட்டாலும் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவர்கள் பிஜேபி பக்கம் போய்விட வாய்ப்புண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டு மக்கள் வா...

({})

Image
யோனி என்பது black hole. பிரபஞ்சத்தின் அத்தனை பிரம்மாண்டங்களையும் உள்ளே இழுத்து விழுங்கிக் கொண்டிருந்தாலும் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி மந்தகாசமாய் மௌனித்திருக்கும் சங்கதி. என் முதல் கவிதைத் தொகுப்பான பரத்தை கூற்று நூலுக்கு நான் முதலில் யோனி என்றே பெயர் சூட்ட எத்தனித்தேன். பிறகு கவிஞர் மகுடேசுவரன் மற்றும் பதிப்பாளர் பொன்.வாசுதேவன் ஆகியோரின் எச்சரிக்கையின் பேரில் அதைத் தவிர்த்தேன். அத்தொகுதிக்கு அப்பெயர் அத்தனை பொருத்தம் என்பதைத் தாண்டி அந்த விஷயத்தின் மீது அவ்வளவு ஈர்ப்பு எனக்குண்டு. அது சரி, ஆண்களில் யோனியை விரும்பாதவர் எவரேனும் உண்டா என்ன! இரு வாரங்கள் முன் Alliance Française de Bangaloreல் நான் பார்த்த நாடகம் The Vagina Monologues . இது 1996ல் ஈவ் என்ஸ்லர் என்ற அமெரிக்கப் பெண்ணியவாதியால் எழுதப்பட்டது. இது ஒரே கதை உள்ள ஒரு நாடகம் அல்ல. பல்வேறு சிறு monologueகளின் தொகுப்பு. Monologue என்பது ஒரு பாத்திரத்தை அல்லது ஒரு விஷயத்தை ஒரே ஆள் பேசி நடித்துக் காட்டுவார். சமூகத்தின் பல்வேறு பின்னணிகளிலும், வெவ்வேறு வயதிலும் இருக்கும் பெண்கள் தம் யோனி குறித்த அனுபவங்களை, எண்ணங்களைப் பேசுவதே இந்...

நீதியின் அழுகுரல்

ஆழம் ‍ - ஃபிப்ரவரி 2014 இதழில் குல்பர்க் சொஸைட்டி எரிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது. *** “ Injustice anywhere is a threat to justice everywhere. ” - Martin Luther King, Jr. 2014 லோக்சபா தேர்தலில் பிஜேபியின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சம்மந்தப்பட்ட முக்கியமான தீர்ப்பு ஒன்று கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது. 2002 குஜராத் கலவரத்துடன் தொடர்புடையது அது. 2002 குஜராத் கலவரங்கள் மதச்சார்பற்ற இந்தியாவின் உச்சபட்ச கறுப்பு நிகழ்வு. 27 ஃபிப்ரவரி 2002 அன்று அயோத்தியிருந்து திரும்பிக் கொண்டிருந்த கரசேகவர்கள் அடங்கிய சமர்பதி எக்ஸ்ப்ரஸ் ரயிலின் பெட்டி கோத்ரா ரயில் நிலையத்தின் அருகே வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் இறந்தனர். இது முஸ்லிம்கள் செய்ததாகக் கருதப்படுகிறது. இச்சம்பவமே கலவரங்களுக்கான உடனடித்தூண்டல். ஃபிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரையிலான 3 நாட்கள் குஜராத் முழுக்கப் பரவலாக போலீஸ் உள்ளிட்ட அரசு இயந்திரங்களின் மறைமுக ஆதரவுடன் பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்ட மோசமான வன்முறைகளின் தொகுப்பே “2002 க...