பிட்காய்ன் என்ற மின்பணம்
சென்ற ஆண்டின் இறுதியில் குங்குமம் இதழில் (9.12.2013) வெளியான Bitcoin பற்றிய என் கட்டுரையின் முழு வடிவம்.
*******
சம்பவம் 1:
கடந்த மாதம் 23 ம் தேதி ட்ரேட்ஃபோர்ட்ரெஸ் என்ற தனியார் ஆஸ்திரேலிய இணைய வங்கி ஹேக் செய்து கொள்ளை அடிக்கப்பட்டது - 1.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (ஏழரை கோடி ரூபாய்). அவ்வங்கி கையாண்டது வழக்கமான பணம் அல்ல; பிட்காய்ன் என்றொரு புதுரக கரன்ஸியை.
சம்பவம் 2:
கடந்த மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் எஃப்பிஐ அமைப்பு சில்க்ரோட் என்ற ரகசியமாய் இயங்கி வந்த சட்ட விரோத போதை மருந்து கும்பலின் பிட்காய்ன் கணக்கைக் கைப்பற்றியது - 28.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (180 கோடி ரூபாய்). ஒட்டுமொத்தமாய் புழக்கத்தில் இருக்கும் பிட்காய்ன்களில் இது 1.5%.
சம்பவம் 3:
கடந்த மாதம் 29ம் தேதி கனடாவில் ரோபோகாய்ன் என்ற முதல் பிட்காய்ன் ஏடிஎம் திறக்கப்பட்டது. அதன் மூலம் ஒரே வாரத்தில் ஒரு லட்சம் கனடா டாலர் (60 லட்சம் ரூபாய்) பரிவர்த்தனை நடத்துள்ளது. பெர்லின், லண்டன், நியூயார்க், டொரான்டோ, ஹாங்காங் நகரங்களிலும் ரோபோகாய்ன் ஏடிஎம்கள் வரவுள்ளன.
சம்பவம் 4:
8500 மாணவர்களைக் கொண்ட சிப்ரஸின் பெரிய தனியார் பல்கலைக்கழகமான நிகோஸியா மாணவர்களின் கல்விக் கட்டணத்தை பிட்காய்ன்களாக செலுத்தலாம் என கடந்த மாதம் 21ல் அறிவித்தது. ரிஸ்க் இன்றி உடனடியாக பிட்காய்ன்களை யூரோவாக தாம் மாற்றிக் கொள்வோம் என்கிறது இப்பல்கலைக்கழக நிர்வாகம்.
*
பிட்காய்ன் என்றால் என்ன? பார்க்கலாம்.
இன்று தமிழகத்தில் நிறையக் கடைகளில் 50 பைசாவுக்கு பதில் ஹால்ஸ் தான் சில்லறையாகத் தரப்படுகிறது. ஒருவகையில் இது மாற்றுச் செலாவணி (Alternate Currency). அதவாது அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட செலாவணி முறைக்கு மாற்றாக தனி நபர் அல்லது அமைப்புகளால் பயன்படுத்தப்படுவது. சொடக்ஸோ, அக்கார் கூப்பன்கள், லைஃப்ஸ்டைல், லேண்ட்மார்க் கிஃப்ட் கார்ட்கள் போன்றவை உதாரணங்கள். முக்கியமாய் இதில் வங்கி இடையில் வருவதில்லை.
எண்ணியல் செலாவணி (Digital Currency) என்பது மாற்று செலாவணியில் ஒரு வகை. இதில் மின்னணு வடிவில் கணிணிகள் மத்தியில் செலாவணி நடக்கும். உதாரணம்: ஃப்ளிப்கார்ட் கிஃப்ட் வௌச்சர், பிவிஆர் கிஃப்ட் கார்ட் போன்றவை.
மறையீட்டுச் செலாவணி (CryptoCurrency) என்பது எண்ணியல் செலாவணியில் ஒரு நவீன வகை. நேரடியாக அல்லாமல் மறையீடுகளின் (Cryptography) அடிப்படையில் எண்ணியல் செலாவணியைப் பயன்படுத்துகிறது இது. I LOVE YOU என்பதை 143 என்கிறார்களே, அதுவே ஒரு மறையீடு தான். அதே போல் இந்த மின்னணு பணப் பரிவர்த்தனைகளில் பாதுகாப்புக்காக எல்லாத் தரவுகளும், பரிமாற்றங்களும் மறையீடு செய்யப்படும். சம்மந்தப்படாதவர்கள் பார்க்கவோ மாற்றவோ முடியாது.
பிட்காய்ன் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மறையீட்டுச் செலாவணி முறை. இன்று அதிக புழக்கத்தில் இருக்கும் மறையீட்டுச் செலாவணியும் இதுவே.
2008ல் சடோஷி நகமோடோ என்பவர் (புனைப்பெயர்) “Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System” என்ற ஆராய்ச்சிக்கட்டுரையை வெளியிட்டார். வங்கி போன்ற எந்த மத்திய அமைப்பின் தலையீடும் இல்லாது, மறையீட்டில் கணிணிகளுக்கிடையே பாதுகாப்பான, நம்பகமான பணிப்பரிமாற்றம் செய்வதைப் பற்றியது அக்கட்டுரை.
அதையொட்டி 2009ல் பிட்காய்ன் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று கிட்டத்தட்ட 30 வகை மறையீட்டுச் செலாவணி முறைகள் புழக்கத்தில் உள்ளன. ஃபெதர்காய்ன், லைட்காய்ன், பிபிகாய்ன், நேம்காய்ன் போன்றவை இன்னபிற பிரபல முறைகள்.
இந்திய ரூபாய் INR, அமெரிக்க டாலர் USD போல் பிட்காயினை BTC என்கின்றனர்.
*
நீங்கள் பிட்காய்ன் பயன்படுத்த விரும்பினால் முதலில் அதற்கான பயனர் மென்பொருளை (Client App) உங்கள் கணிப்பொறியிலோ, ஸ்மார்ட்ஃபோனிலோ நிறுவ வேண்டும். இது தான் உங்கள் பிட்காய்ன் பணப்பை (Bitcoin wallet). அந்தப் பணப்பையை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு பிட்காய்ன் முகவரி (Bitcoin address) இருக்கும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்குப் பிறகும் இது மாறும். இது போல் ஒவ்வொருவரும் ஒரு பணப்பையும் அதற்குறிய முகவரியும் வைத்திருப்பர்.
நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்ப விரும்பினால் பயனர் மென்பொருளில் அவரது பிட்காய்ன் முகவரி கொடுத்து எவ்வளவு தொகை எனக் குறிப்பிட வேண்டும். அது அவரது பணப்பைக்கு போய்ச் சேர்ந்து விடும். அவர் தன் பயனர் மென்பொருளைத் திறந்து பார்த்தால் பணம் வரவில் இருக்கும். இது தான் பரிமாற்றம் (Transaction). கிட்டத்தட்ட ஒருவரின் இமெயில் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவது போலத் தான். ஒரே வித்தியாசம் இதில் ஒவ்வொரு முறையும் பிட்காய்ன் முகவரி மாறும்.
பிரதானமாக இரு முறைகளில் நீங்கள் பிட்காய்ன் பெறலாம். பரிமாற்றத்தின் மூலம் ஒருவர் உங்கள் பணப்பைக்கு பிட்காய்ன் அனுப்பலாம். பிட்காய்ன் எக்ஸ்சேஞ்களில் உங்களிடம் இருக்கும் ரூபாயோ டாலரோ செலுத்திப் பெறலாம்.
ஒருவரது பணப்பையில் இருக்கும் பணத்தை அடுத்தவர் பயன்படுத்தாது இருக்க ஒவ்வொரு பயனர் மென்பொருளோடும் ஒரு ரகசிய தகவல் (Private Key) இருக்கும். பரிமாற்றத்தின் போது பிட்காய்ன் முகவரியோடு இதுவும் சேர்த்து அனுப்பப்படும். அது சரியாகப் பொருந்தினால் மட்டுமே பரிமாற்றம் வெற்றிகரமாக நடக்கும்.
இப்படி நடந்த பரிமாற்றம் Block Chain என்ற பகிரப்பட்ட பொது கணக்கேட்டில் பதியப்படும். இந்தக் கணக்கேட்டின் பிரதி பயனர் மென்பொருள் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும். எந்தவொரு பரிமாற்றமும் நடந்த 10 நிமிடங்களுக்குள் உலகம் முழுக்க இருக்கும் பயனர்களின் கணக்கேட்டில் அது பதியப்பட்டு விடும்.
பயன்படுத்தப்பட்ட பிட்காய்ன் மறுபடி பயன்படுத்தப்படாமலும் இது தடுக்கிறது. எல்லா பயனர் மென்பொருளின் கணக்கேட்டிலும் குறிப்பிட்ட பிட்காயின் குறிப்பிட்ட பணப்பையால் பயன்படுத்தப்படாது இருக்க வேண்டும். இந்த அங்கீகாரம் பெறத்தான் அந்த 10 நிமிடத் தாமதம். இதன் காரணமாக மிகப் பாதுகாப்பான, ஏமாற்ற முடியாத பரிவர்த்தனை முறையாக இது அமைகிறது.
பிட்காய்ன் பரிமாற்றம் சிக்கலான SHA-256 மறையீட்டு முறையைப் பின்பற்றுகிறது. ஒட்டுமொத்த பயனர்களும் இணைந்து ஒரு பரிமாற்றத்தை மாற்ற நினைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அது நடக்கவே நடக்காது. வங்கியின் அத்தனை வாடிக்கையாளர்களும் ஒரு பணப்பரிமாற்றத்தை மாற்ற நினைப்பார்களா என்ன!
*
பிட்காயின்கள் பரவலாக சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் பயன்படுகின்றன. சூதாட்டங்களிலும், போதை மருந்து விற்பனையிலும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பின்புல விசாரணை இன்றி சுலபமாய் வாங்கவும் பயன்படுகிறது.
பிட்காயின் களவு போவதும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. பிட்காய்ன்கள் யாருக்குப் போய்ச் சேர்ந்தது என்ற அடையாளத்தைக் கண்டுபிடிப்பது மிகச்சிரமம்.
வேர்ட்ப்ரெஸ், பாய்டு, ரெட்டிட், ஓகேகபிட் ஆகிய பெரிய நிறுவனங்கள் பிட்காய்ன் மூலம் பணம் செலுத்துவதை அங்கீகரிக்கின்றன. கடந்த ஆகஸ்ட்டில் ஜெர்மனி நிதியமைச்சகம் பிட்காயினை சில வரிகளில் பயன்படுத்துவதை அங்கீகரித்தது.
இம்மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தும் ஃபெடரல் எலக்ஷன் கமிஷனின் வழக்கறிஞர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கான நன்கொடைகளை பிட்காய்ன்களாக கட்சிகள் ஏற்கலாம் என சிபாரிசு செய்துள்ளனர். இது ஏற்கப்படும் எனத் தெரிகிறது.
பிட்காயினுக்கு பொதுமக்களிடம் ஆர்வமும் ஆதரவும் பெருகி வருகிறது. அரசுகள் இதற்கு முறையான கட்டுப்பாடுகளை விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.
பிட்காய்ன் என்பது கூரான கத்தி போல. பாதுகாப்பாகக் கையாண்டால் பலம்!
*
பிட்காய்ன் சிறப்பம்சங்கள்:

- வங்கிகள் போல் கமிஷன் மற்றும் இன்ன பிற சார்ஜ்கள் கிடையாது.
- வங்கிப் பரிவர்த்தனைகள் போல் அல்லாமல் மிக வேகமானது.
- அனுப்புபவர், பெறுபவர் அடையாளங்கள் பகிர வேண்டியதில்லை.
- வங்கிக் கணக்குகள் போல் இதை யாரும் முடக்கி வைக்க முடியாது.
- சட்ட விரோத செயல்கள் என்றாலும் அனுமதி மறுக்கப்படாது.
- ஒரு பிட்காய்னின் இன்றைய மதிப்பு சுமார் 300 அமெரிக்க டாலர்கள்
- பிட்காய்ன்களாக மொத்தம் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உள்ளது
- 0.00000001 BTC என்பதே சாத்தியமான மிகக் குறைந்த பிட்காய்ன் மதிப்பு
- சேவிங்ஸ் & ட்ரஸ்ட் கொள்ளையில் 2.63 லட்சம் பிட்காயின் போனது.
- இந்தியாவில் மட்டும் சுமார் 50,000 பிட்காய்ன் பயனர்கள் உள்ளனர்
Comments