ஐந்தாம் புத்தகம் - போட்டி முடிவுகள்

என் ஐந்தாம் நூல் எதைப் பற்றியது எனக் கண்டுபிடிக்கச் சொல்லி ட்விட்டரில் போட்டி ஒன்றினை அறிவித்திருந்தேன்.


சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வரவிருக்கும் அது "2002 குஜராத் கலவரங்கள்" பற்றிய விரிவான வரலாற்று நூல்.

*

பொதுவான உரையாடல்கள், சந்தேகங்கள்  தவிர்த்துப் பார்த்தால் போட்டிக்கான பதிலாய் அந்த ட்வீட்டுக்கு மொத்தம் 55 ரிப்ளைகள் இருந்தன (ஆனால் அந்த ட்வீட்டின் பக்கத்தில் 8 பதில்கள் மட்டுமே காட்டுகிறது. ஏதாவது ட்விட்டர் தொழில்நுட்பப் பிழையாக இருத்தல் வேண்டும்). இதில் மைதீன் தான் போட்ட இரண்டு பதில்களையும் டெலீட் செய்திருக்கிறார் (முதல் பதிலே அவருடையது தான்!). ஆக மீதருந்த 53 பதில்களை மட்டும் கணக்கில் கொள்கிறேன்.

இதில் யாருமே சரியான விடை சொல்லவில்லை. போட்டிக்கான க்ளூவாய் எனது பாணியில் "நமீதா" என்று சொல்லி இருந்தேன். நமீதா குஜராத்தைச் சேர்ந்தவர் (இந்தியர்களின் நலனுக்காக குஜராத்தில் இருந்து வந்த இரண்டு பேர் தம் ஆடைகளைத் தியாகம் செய்திருக்கிறார்கள். ஒருவர் காந்தி; இன்னொருவர் நமீதா என்று ஒரு ஜோக் உண்டு).

நமீதா --> குஜராத் --> குஜராத் பற்றிய என் நிலைப்பாடு என்ற வழியில் வந்தால் தற்போதைய அரசியல் நிகழ்வுகளுக்குப் பொருத்தமாய் மூன்று தலைப்புகள் தாம் இருகின்றன. நரேந்திர மோடி, குஜராத்தின் வளர்ச்சி, அப்புறம் 2002 கலவரங்கள். முதல் இரண்டை நிறையப் பேர் சொன்னார்கள். ஆனால் சரியான விடையான மூன்றாவதை யாரும் சொல்லவில்லை.

அதனால் சரியான பதிலுக்கு நெருங்கி வந்தவற்றில் (குஜராத்  அல்லது மோடி பற்றி என்பது) முதலில் வந்த பதிலுக்குப் பரிசளிக்கத் தீர்மானித்திருக்கிறேன். அவ்வகையில் ராஜு என் (@naaraju) தான் வெற்றியாளர். இது தான் அவரது பதில்:


இந்தப் பதிலைச் சொன்ன எல்லோருமே இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் சரியான பதிலைச் சொல்லி இருக்க முடியும். ஏன் இயல‌வில்லை யோசித்துக் கொண்டிருக்கிறேன். யாரேனும் இங்கோ ட்விட்டரிலோ சொல்லவும்.

*

கொடுத்த‌ க்ளுவைக் கொண்டு சுவாரஸ்யமான பதில் சொல்ப‌வருக்கு என் நான்காம் புத்தகமான "கிட்டத்தட்ட கடவுள்" பரிசு தர நினைத்திருந்தேன். இதை அப்போதே சொல்லி இருந்தால் எல்லோரும் சரியான பதிலை யோசிப்பதை விட, சுவாரஸ்யமன பதிலைச் சொல்லவே மெனக்கெட்டிருப்பர் (அது தானே சுலபமும் சுதந்திரமும்). டேக் போட்டு ட்வீட்டுவது போல் அது இந்த விளையாட்டை திசை திருப்பும் என்பதால் செய்யவில்லை (ஏன் இதற்கு மட்டும் பரிசு ஐந்தாம் புத்தகம் அல்லாமல் நான்காம் புத்தகம்? தர்க்கப்பூர்வமான காரணம் உண்டு: சரியான விடை சொன்னவருக்கான மரியாதை அது).

எல்லோரும் நமீதா என்றதும் பிரம்மாண்டம், பெரியது, ஆடைக்குறைப்பு, கவர்ச்சி, மச்சான் என்ற அடிப்படையிலேயே யோசித்திருக்கின்றனர். சில பிரம்மாண்டம் என்பதிலிருந்து அண்டம், பிரபஞ்சம் என்று சொன்னார்கள் (ஒருவர் மலைகள் என்று கூட‌ சொல்லி இருந்தார்!). ரூட்டு தல என்பவரின் பதில் இத்திசையில் இன்னும் கொஞ்சம் தூரம் போயிருந்தது.

சிலர் "ச்சீய் பக்கங்கள்" என்று கூட சொல்லி இருந்தார்கள் (என். சொக்கன் பதிப்பகமே சொல்லி விட்டார்!). ஆழம் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு என்றும் ஓரிருவர் சொன்னார்கள். விரைவில் அவர்கள் வாக்கெல்லாம் பலிக்கட்டும்.

ஆனால் எல்லாவற்றிலும் வித்தியாசமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் தோன்றியது சுபாங்கி என்பவரின் பதிலே:


நமீதா சிறுபிள்ளைத்தனமாய்த் தமிழ் பேசுவார் என்பதால் அவருக்கும் புரியக்கூடிய அளவு எளிமையான தமிழ் இலக்கண நூல் ஒன்றை எழுதுவேன் என்பது முற்றிலும் வேறு திசையிலான, அழகான‌ சிந்தனை. அந்தப் பதிலை மிக ரசித்தேன்.

*

பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள். புத்தகம் அனுப்ப உங்கள் முழுமையான‌ இந்திய‌ முகவரியை டிஎம் செய்யவும். எல்லாவற்றுக்கும் மேலாய் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு என்னை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு என் அன்பு.

*

பதில்களின் பட்டியல்:
  1. https://twitter.com/Mydeenn/status/413228382823129089 (deleted)
  2. https://twitter.com/raajeswaran/status/413228989725954048
  3. https://twitter.com/naaraju/status/413229501569843200
  4. https://twitter.com/naaraju/status/413230057419972608
  5. https://twitter.com/hi_iam_raj/status/413230248319143936
  6. https://twitter.com/Power_Velu/status/413230304254373888
  7. https://twitter.com/1rummy/status/413230478347337728
  8. https://twitter.com/isampath_J/status/413230566960418816
  9. https://twitter.com/raajeswaran/status/413232778126172161
  10. https://twitter.com/dlakshravi/status/413235112126341121
  11. https://twitter.com/iKaruppiah/status/413235413537394688
  12. https://twitter.com/mannankkatti/status/413236473186357249
  13. https://twitter.com/Bullet_Ram/status/413237292023570432
  14. https://twitter.com/toviji/status/413237302647742464
  15. https://twitter.com/raajeswaran/status/413238164099067904
  16. https://twitter.com/iKrishS/status/413239966005616640
  17. https://twitter.com/raajeswaran/status/413244916873981952
  18. https://twitter.com/RajaThamizhachi/status/413259151226052608
  19. https://twitter.com/raajeswaran/status/413267881200062464
  20. https://twitter.com/nchokkan/status/413333830347411456
  21. https://twitter.com/radhavenkat2/status/413334526925221888
  22. https://twitter.com/radhavenkat2/status/413338692955414528
  23. https://twitter.com/vivaji/status/413339785835446272
  24. https://twitter.com/radhavenkat2/status/413340382270091264
  25. https://twitter.com/rAguC_/status/413342557934854145
  26. https://twitter.com/AdhiradiAnbu/status/413345653930991617
  27. https://twitter.com/Tparavai/status/413347058469187584
  28. https://twitter.com/radhavenkat2/status/413347101045972992
  29. https://twitter.com/thoatta/status/413347385083838465
  30. https://twitter.com/sudarkodii/status/413348489859309568
  31. https://twitter.com/Mydeenn/status/413350385479196672 (deleted)
  32. https://twitter.com/kanavey/status/413351599042736128
  33. https://twitter.com/Vaanmugil/status/413352160693190656
  34. https://twitter.com/urs_priya/status/413352661132382208
  35. https://twitter.com/routeu/status/413354824348864512
  36. https://twitter.com/raajeswaran/status/413552278117703680
  37. https://twitter.com/raajeswaran/status/413553809621647360
  38. https://twitter.com/mundaasu/status/413559256890093568
  39. https://twitter.com/subaangi/status/413559772202283008
  40. https://twitter.com/santhozn/status/413560318036434944
  41. https://twitter.com/silicon_singam/status/413560938932224000
  42. https://twitter.com/kavipulla/status/413562552929374208
  43. https://twitter.com/pattaasu/status/413570911296434176
  44. https://twitter.com/veyilooraan/status/413575303206690816
  45. https://twitter.com/ur_ashok/status/413579541798735873
  46. https://twitter.com/paramporul/status/413582304808693760
  47. https://twitter.com/ur_ashok/status/413582877272834048
  48. https://twitter.com/veyilooraan/status/413601501332795392
  49. https://twitter.com/veyilooraan/status/413601632580947968
  50. https://twitter.com/veyilooraan/status/413601795013746688
  51. https://twitter.com/iVedhaLam/status/413650405671710720
  52. https://twitter.com/iVedhaLam/status/413650520901820416
  53. https://twitter.com/puruda_jen/status/413936085492715520
  54. https://twitter.com/GVhere/status/413937975139913728
  55. https://twitter.com/silicon_singam/status/413973791094865921
*

Comments

Sankar said…
வாழ்த்துகள்.

டுவிட்டரில் இல்லாததால் இந்த போட்டி வாய்ப்பை இழந்து விட்டேனே :( பின்னாளில் இது போல இன்னொரு போட்டி வைத்தால் அப்படியே ஒரு பதிவும் போட்டு விடவும்.

உங்களுடைய "கிட்டத்தட்ட கடவுள்" மின் நூலாகக் கிடைக்குமா ? பெங்களூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் எனைப் போன்றோருக்கு காகித நூல்கள் வாங்கி வைப்பது மிகச் சிரமம். 1100 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் நூல்களுக்கும் அதிக இடம் ஒதுக்குவது வீட்டினருக்கு தொந்தரவாக உள்ளது.

@Sankar P

நன்றி. அடுத்த முறை அறிவிப்பு ஏதும் இருந்தால் இங்கும் சொல்ல முயற்சிக்கிறேன். இப்போதைக்கு கிட்டத்தட்ட கடவுள் அச்சுப்பிரதி மட்டும் தான் கிடைக்கிறது. மின்நூல் கொண்டு வ‌ரும் திட்டமிருந்தால் சொல்கிறேன்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி