Posts

Showing posts from November, 2013

நான்காம் புத்தகம்

Image
முழுதாய் ஓராண்டுத் தாமதத்திற்குப் பின் எனது நான்காவது புத்தகமான‌ கிட்டத்தட்ட கடவுள் வெளியாகி இருக்கிறது. இது என் முதல் கட்டுரைத் தொகுதி. அறிவியல், அரசியல், சர்வதேசம், வரலாறு, பொருளாதாரம் குறித்து 2011 - 2012ம் ஆண்டுகளில் நான் எழுதிய 15 கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சில மிகுந்த உழைப்பை உறிஞ்சியவை. இவற்றின் ஆயுளை நீடிக்கும் வகையில் ஒரு நூலின் உள்ளடக்கமாகப் பார்க்கையில் மிகுந்த மன‌நிறைவை அளிக்கிறது. இது வரை வெளியான எனது அனைத்து நூல்களுமே வெவ்வேறு பதிப்பகங்கள். இம்முறை அம்ருதா பதிப்பகம் . இதில் எடிட்டிங் மற்றும் ப்ரூஃப் பார்த்தல் எனக்கு மிக உவப்பாய் அமைந்தது. புத்தகம் தாமதமாவது குறித்த‌ விசாரிப்புகளுக்கு பொறுமையாக பதிலிறுத்த பதிப்பாளர் ஜி.திலகவதி மற்றும் பதிப்பகத்தின் சுப்பையா இருவருக்கும் அன்பும் நன்றியும். இப்போதைக்கு சென்னையில் அம்ருதா பதிப்பகத்தில் நேரடியாக நூலின் பிரதிகளை வாங்கலாம். தொடர்பு விவரங்கள்: Amurudha,  No: 12, 3rd Main Road,  2nd Cross Street,  Govind Royal Nest,  CIT Nagar East,  Chennai - 600 035.  Phone : 044 ...

ஸ்டாக்ஹோம் அறிவிப்புகள்

Image
ஆழம் ‍ - நவம்பர் 2013 இதழில் 2013 நொபேல் பரிசுகள் குறித்த என் சுருக்கமான‌ அறிமுக‌க் கட்டுரை வெளியாகியுள்ளது. ******* 2013ம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என்ற ஆறு துறைகளுக்கான நொபேல் பரிசுகளும் அக்டோபர் 2ம் வாரத்தின் வெவ்வேறு தேதிகளில் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன (அமைதி மட்டும் ஆஸ்லோவில்). அவை பற்றிய ஒரு பறவைக்கோணம் இது. * 2013 மருத்துவ நொபேல் 2013 மருத்துவ நொபேல் பரிசை அமெரிக்கர்கள் ஜேம்ஸ் ரோத்மேன், ராண்டி செக்மேன், ஜெர்னானியர் தாமஸ் சுடாஃப் ஆகியோர் பகிர்கின்றனர். "செல்களுக்கு இடையே குமிழ்களாக நகரும் மூலக்கூறுகளின் போக்குவரத்து எவ்வாறு சீராக நடைபெறுகிறது என்பது தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக" இவர்களுக்கு பரிசு. செல்கள் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன. இவை மற்ற செல்களுக்கு பல்வேறு வேலைகளுக்காக சரக்கு போல் அனுப்பி வைக்கப்படுகின்றன. பல மூலக்கூறுகள் கூட்டாகி குமிழ்களின் வடிவில் (Vesicle) இவை நகர்கின்றன. சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் இவை எப்படி கொண்டு சேர்க்கப்படுகின்றன என்பதைத் தான் இந்த விஞ்ஞானிகள் வ...