துன்பியல் த்ரில்லர்

ஆழம் - அக்டோபர் 2013 இதழில் Madras Cafe திரைப்படம் குறித்த என் விமர்சனக் கட்டுரை வெளியாகியுள்ளது. ******* ஈழத்தில் பிரச்சனை எனில் தமிழ் நடிகநடிகையர் திரண்டு கறுப்புச்சட்டையணிந்து இராமேஸ்வத்தில் கூடிக்குரல் கொடுப்பது பழக்கம் தான் என்றாலும் தமிழில் ஈழப் போரின் பின்புலத்தை வைத்து எடுக்கப்பட்ட தீவிரமான படங்கள் மிகக்குறைவே. ஆர்கே செல்வமணியின் குற்றப்பத்திரிக்கை , சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட் , மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் , ஏஎம்ஆர் ரமேஷின் குப்பி ஆகியவற்றைச் சொல்லலாம். மெயின்ஸ்ட்ரீம் சினிமா அல்லாமல் லீனா மணிமேகலை செங்கடல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சுப்ரமணியம் சிவா தற்போது ஜெயமோகனின் உலோகம் நாவலை படமாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பிரச்சனையை மேலோட்டமாய்ப் பேசும் தெனாலி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், நந்தா, ஆயிரத்தில் ஒருவன், பில்லா - 2, நீர்ப்பறவை, கடல், மரியான் போன்றவற்றை விடுத்துப் பார்த்தால் இது தான் உருப்படியான பட்டியல். தற்போது இந்தியில் சூஜித் சர்க்கார் Madras Cafe படத்தில் இதைத் தொட்டிருக்கிறார். * பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட க...