ஐ லவ் யூ மிஷ்கின்!
" மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். " - பரிசுத்த வேதாகமம் [புதிய ஏற்பாடு - யோவான் : அதிகாரம் 10 வசனம் 12] * எல்லாத் திரைப்படங்களும் ஒரே நோக்குடையவை அல்ல. சில சினிமாக்கள் கண்களுக்கு; சில சினிமாக்கள் காதுகளுக்கு; சில சினிமாக்கள் கைகளுக்கு; சில சினிமாக்கள் கால்களுக்கு; சில சினிமாக்கள் குறிகளுக்கு. அரிதாய் சில சினிமாக்கள் மனதிற்கானவை. இந்த வருடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரைப்படங்கள் அவ்வகையில் வெளிவந்திருக்கின்றன. பாலாவின் பரதேசி , ராமின் தங்க மீன்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் . தமிழ் சினிமாவின் மகத்தான தனித்துவம் மிஷ்கின். சித்திரம் பேசுதடி (2006), அஞ்சாதே (2008), நந்தலாலா (2010), யுத்தம் செய் (2011), முகமூடி (2012) படங்களுக்குப் பிறகு மிஷ்கின் இயக்கி இருக்கும் ஆறாவது படம் ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் . ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். வில்லன், பழ...