களிபத்துப்பரணி

வண்ணத்துப்பூச்சியே உன் இறகுகளை விரிக்கும் போது என்ன கனவு காண்கிறாய்... இது ஒரு ஜப்பானிய ஹைக்கூ (மொழிபெயர்ப்பு: மிஷ்கின்). இந்தக் கவிதை அநிச்சையாய் அரட்டைகேர்ளிடம் அழைத்துச் செல்கின்றது. ஒரு கலர்ஃபுல்லான பட்டர்ஃப்ளையின் கனவு அவரது ட்வீட்கள் போலத்தான் இருக்கும் எனத்தோன்றுகிறது. அரட்டைகேர்ள் ( @arattaigirl ) என்பது கோவையைச் சேர்ந்த பிரபல பெண் ட்வீட்டரான சௌம்யா. இன்று அவர் பத்தாயிரம் ஃபாலோயர்களை ட்விட்டரில் கடந்திருக்கிறார். இந்த பிரம்மாண்ட மைல் கல்லின் அருகே நின்றபடி அவர் கடந்து வந்த எழுத்துப் பாதையைத் திரும்பிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம் - உடன் அவருக்கென சில goodகளும் குட்டுகளும். முதலில் ஒரு சின்ன கணக்கு பார்க்கலாம்: கிட்டதட்ட இரண்டே கால் வருடங்கள் - கொஞ்சம் துல்லியம் கூட்டினால் 818 நாட்கள் - இந்தக் கால வரையறையில் இன்றைய அவசர உலகில், தமிழ் வாசிப்புச் சூழலில் ஒருவர் அதிகபட்சம் எத்தனை பேரை தன் எழுத்தால் வசீகரிக்க முடியும் என நினைக்கிறீர்கள்? அதுவும் எந்தப் பிரபலப் பின்புலமும் இல்லாமல் எந்த ஊடக பக்கபலமும் இல்லாமல் ஒரு சமூக வலைதளத்தில் மட்டும் எழுதி - 1000 பேர்? 2000 ...