மோடியை முன்வைத்து பத்ரிக்கு சில கேள்விகள்
டியர் பத்ரி, இட்லிவடை தளத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் நரேந்திர மோடியைப் பற்றி (அவர் பெயர் மோடி அல்ல, மோதி என்று உங்கள் பதிவிலிருந்து அறிய நேர்ந்தது. நான் மோடி என்றே உச்சரித்துக் கொள்கிறேன், தமிழில் கேலி செய்ய அது தான் வசதி!) நீங்கள் எழுதிய மூன்று கட்டுரைகளையும் ( 1 , 2 , 3 ) வாசித்தேன். அவற்றில் முதல் இரண்டு பற்றி - நரேந்திர மோடியை ஹீரோவாய் முன்னிறுத்தியது தவிர - பெரிய ஆட்சேபங்களோ, விலகலோ இல்லை. சொல்லப் போனால் அந்த அலசல் பிடித்திருந்தது (அதை நேற்று ட்விட்டரில் பதிந்தும் இருந்தேன்). நரேந்திர மோடி பாஜகவின் பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை justify செய்தும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சார்ந்து பாஜகவின் லாப நஷ்டக் கணக்கு பற்றியும் எழுதி இருந்தது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் இந்த தேர்தல் பரிட்சையில் வெற்றி பெறுவார் என மோடி Vs Rest of BJP, மோடி Vs Rest of All Indian Parties அடிப்படையில், அவரது ஆளுமையின் மீதான ப்ரியத்தில் சொல்லி இருந்தது வரையிலும் கூட பிரச்சனையில்லை. ஆனால் இன்றைய பதிவில் சில நெருடல்கள் இருக்கின்ற...