ஒரு தசாப்தத்தின் ஸ்வப்னம்

இது என் பத்து வருடக் கனவு.

2000ங்களில் தொடக்கத்தில் ஏதோ ஒரு வருடத்தில் தான் முதன் முதலாக‌ ஆனந்த விகடனுக்கு என் படைப்பு ஒன்றை அனுப்பினேன். அது ஒரு விஞ்ஞானச் சிறுகதை. பெயர் நியூட்டனின் மூன்றாம் விதி. துரதிர்ஷ்டவசமாய் அது இன்னமும் எதிலும் பிரசுரமாகவில்லை. பிற்பாடு இந்த பத்தாண்டுகளில் கவிதைகள், சிறுகதைகள் என நான் முக்கியமாய் முயன்ற அத்தனை ஆக்கங்களையும் ஒரு ராணுவக்கடமை போல் முதலில் ஆனந்த விகடனுக்குத் தான் அனுப்பி இருக்கிறேன்.


பள்ளி நாட்களில் என் வீட்டில் குமுதம் தான் வாங்குவார்கள். ஆனாலும் பக்க‌த்து வீட்டில் வாங்கிய ஆனந்த விகடன் தான் அதிகம் ஈர்த்தது. அப்போதைய அதன் அத்தனை வசீகர உள்ளடக்கங்களையும் தாண்டி சுஜாதா ஒரு முக்கியக் காரணம்.

அதனால் தான் அதில் என் எழுத்து வருவது என்பது மஹாஸ்வப்னமாகத் தோன்றியது. அதனால் தான் முதன்முதலில் என் ட்வீட் விகடனில் வந்த போது கூட மிகுந்த மகழ்வுற்றேன் (விகடனுக்கும் அது தான் முதல் வலைபாயுதே!). ஆனால் அது என் அப்பீல் இன்றி அவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது. அதனால் குமுதத்தில் சிறுகதை, கட்டுரை வந்தாயிற்று, குங்குமத்தில் தொடர், கவிதை வந்தாயிற்று ஆனால் விகடனில் என் எழுத்து வந்ததில்லை என்ற மனக்குறை இருந்தது.

இன்றோடு அக்குறையும் தீர்ந்தது.

ஆம். 15.5.13 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழின் (அட்டையில் லக்ஷ்மி மேனன்) சொல்வனம் பகுதியில் முதல் நரை என்ற என் கவிதையின் எடிட் செய்யப்பட்ட வடிவம் வெளியாகி உள்ளது. ஆ.வி. ஆசிரியர் இலாகாவுக்கு என் நன்றிகள்.

Comments

Unknown said…
Please post that kavidhai here....
@Manivannan R
பதிவிலேயே லிங்க் இருக்கிறதே!
RRR said…
எடிட் செய்யப்பட்ட நான்கு வரிகளையும் பதிப்பித்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் . . :-))
@RRR
ஆம். ஆனால் அவர்களின் உள்ளடக்கக் கட்டுப்பாட்டுக்கு வெளியே அது இருந்திருக்க‌லாம். அதனால் என்ன, நான் இன்னும் சில தினங்களில் ஒரிஜினல் வடிவத்தை என் தளத்தில் வெளியிடுகிறேன்!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்