சுஜாதா Birthday Special

சுஜாதாவின் பிறந்த நாளான இன்று (மே 3) எனது சிறுகதை ஒன்று தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியாகி உள்ளது:

மதுமிதா : சில குறிப்புகள் - http://www.tamilpaper.net/?p=7714

இது கொஞ்சம் experimental சிறுகதை. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிற்றிதழுக்காக எழுதப்பட்டது. அவ்விதழ் வராததால், பின் சில‌ வெகுஜன இதழ்களுக்கு அனுப்பப்பட்டு, நிராகரிக்கப்பட்டு (ஓரிடத்தில் சொல்லப்பட்ட காரணம்: இது பத்தாண்டுகளுக்கு பின்பு எழுதப்பட வேண்டிய சிறுகதை), திருத்தப்பட்டு இப்போது என் சிறுகதைத் தாய் வீட்டின் வழி வெளியாகிறது. தாய் வீடு எனக் குறிப்பிட காரணம் என் முதல் சிறுகதையான E=mc2 தமிழ் பேப்பரில் தான் வெளியானது - அது சுஜாதாவின் நினைவு தினத்தன்று. இன்று அவர் பிறந்த தினத்தில் அவர்  தொடங்கிய‌ சிறுகதைப் பரிசோதனை விளையாட்டை நானும் முன்னெடுத்துச் செல்வதை அவருக்குச் செய்யும் tribute-ஆகக் கருதுகிறேன்.

Comments

King Viswa said…
மிகவும் அருமை.

என்னதென சொல்லமுடியாமல் சிலவற்றை பிடிக்கும் அல்லவா? அவற்றில் இந்த கதையின் வகை சேர்த்தி.

ஆனாலும் முடிவு?

தொடர்ந்து எழுதுங்கள்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்