கார்த்தி Vs கங்னம்

"What I thought was, you know, crazy about music, dancing, performance, so that kind of psycho."
- Psy (BBC Interview, December 2012)

கங்னம் ஸ்டைல் என்பது பெருமாள்முருகனின் நாவல் பாதிப்பில் எழுதும் இலக்கிய மோஸ்தர் போலிருக்கிறது என்று எண்ணியிருந்த ஓர் அப்பாவி நான். அலெக்ஸ் பாண்டியன் படத்தின் Bad Boy பாடலில் கார்த்தி கங்னம் ஸ்டைலில் ஆடி இருக்கிறார் என்று கேள்விப்பட்ட போது தான் அது ஏதோ சர்வதேசிய நடன வஸ்து என என் சிற்றறிவுக்குப் புலனாகியது.


Psy என்று செல்லமாக அழைக்கப்படும் (எனக்கு CSK போல!) பார்க் ஜே-சங் 35 வயது தென் கொரிய ராப் பாடகர். அவரே பாடல்கள் எழுதி, கம்போஸ் செய்து, நடனமமைத்து வீடியோ ஆல்பங்கள் வெளியிடுபவர். 2001லிருந்தே இவர் ஓரளவு பிரபலம் தான். 2012 ஜூலையில் PSY 6 (Six Rules) - Part 1 என்ற தனது ஆறாவது ஆல்பத்தை வெளியிட்டார். அதில் தான் கங்னம் ஸ்டைல் (Gangnam Style - 강남스타일) பாடல் இடம் பெற்றிருக்கிறது. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட‌ கொரியன் பாப் (K-pop) என்ற தனி genre-ஏ இருக்கிறது. இப்பாடல் அவ்வகைமை தான். இந்த ஆல்பம் தென் கொரியாவில் மட்டும் லட்சம் பிரதிகளுக்கு மேல் இதுவரை விற்றிருக்கிறது. இதன் இரண்டாம் பகுதி இவ்வாண்டு வெளியாகவிருக்கிறது!

கங்னம் என்பது தென்கொரியத் தலைநகர் சியோலில் இருக்கும் ஓர் இடம். அங்கு வாழும் ஒரு சாராரின் போலியான‌ பாவனை நடவடிக்கைகளைப் பகடி செய்யும் முகமாகவே இந்த நடன அசைவுகள் அமைந்திருக்கின்றன. இதன் பாடல் வரிகள் ஒரு பெர்ஃபெக்ட் கேர்ள்ஃப்ரெண்ட் பற்றி பேசுகின்றன - A girl who is warm and humane during the daytime, A girl’s heart gets hot when the night comes என்றெல்லாம் (தவறாமல் மறவாமல் இடையில் "ஏ, செக்ஸி லேடி!" என்று வருகிறது).

பார்க்க கோமாளித்தனமாய்த் தான் இருக்கிறது. உலக மக்கள் இதில் என்னத்தைக் கண்டார்களோ சகட்டுமேனிக்குப் புகழ்பரவ, ஏழே மாதத்தில் 131 கோடிக்கு மேற்பட்ட ஹிட்களுடன் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட யூட்யூப் வீடியோவாக ஆகி இருக்கிறது. தனுஷின் Why This Kolaveri Di (3) பாடல் இந்திய அளவில் ஹிட் அடித்ததை இதனோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம். இவற்றிலிருக்கும் (திட்டமிடாத) ரசிக்கக்கூடிய அப்பாவித்தனம் தான் key factor என்று தோன்றுகிறது.


இந்த ஒரு பாடல் ஜே-சங்கின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது. ஆறு மாதங்களில் 8.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்து விட்டார். விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்காக ஐநா தலைவர் பான் கி மூன் இவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.2013 புத்தாண்டு நள்ளிரவில் நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் பிரபல‌ பாப் பாடகர் ஹாம்மருடன் இணைந்து 10 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட லைவ் கன்சர்ட் ஒன்றினை நடத்தினார்.

Psy என்பது Psycho என சொல்லின் சுருக்கம். 2001ல் அவர் PSY from the Psycho World! என்ற ஆல்பமும் வெளியிட்டிருக்கிறார். அமெரிக்க ராணுவத்தின் உலக அளவிலான‌ அட்டூழியங்களை வெளிப்படையாக எதிர்த்த இவர் பின் அதற்கு மன்னிப்புக் கேட்டார். 2001ல் மாரிஜுவானா  என்ற போதை மருந்து வைத்திருந்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார் . இதனால் அவர் தன் தாத்தாவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. 2006ல் தான் காதலித்த யூ ஹை-இயன் என்ற பெண்ணையே கைப்பிடித்த ஜே-சங் இன்று அழகிய‌ இரட்டைப் பெண் குழந்தைகளுக்குத் தந்தை.

மற்றபடி, கங்னம் ஸ்டைல் நடனத்தின் தேர்ந்தெடுத்த‌ சிறுபகுதியை கார்த்தி நன்றாகவே ஆடியிருக்கிறார். Good Boy!

Comments

திண்ணை கிழவி said…
Psy என்று செல்லமாக அழைக்கப்படும் (எனக்கு CSK போல!)///.
.
.
கூரை ஏறி கோழிய புடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக பாத்தானாம்
Anonymous said…
கேட்ட முதல்முறையே இப்பாடலின் மெட்டும் இசையும் எரிச்சலை ஏற்படுத்தியது. எப்படி ஹிட் ஆனது என்று எனக்கும் சந்தேகம்.

கீழ் உள்ள 2 பாடல்களின் யை டவுன்லோட் செய்து கேட்டுப் பாருங்கள்...

1. something that i used to know by gotye

2. cups by anna kendrick

...d

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி